Site icon தமிழ் குழந்தை கதைகள்

Four Theifs – Mariyadhai Raman Stories- நான்கு திருடர்கள் – மரியாதை ராமன் கதை

Four Theifs – Mariyadhai Raman Stories- நான்கு திருடர்கள் – மரியாதை ராமன் கதை :- மரியாதை ராமன் ஒருநாள் வெளியூருக்கு போக வேண்டியதா இருந்துச்சு

அதுக்காக ஒரு மிக பெரிய காட்டு வழியா போகுற பாதையில நடந்து போய்கிட்டு இருந்தாரு

அப்ப ஒரு குடிசைய தூரத்துல இருந்து பார்த்தாரு ,அந்த குடிசை கிட்ட கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு போகலாம்னு நினைச்சாரு

அதுக்காக அந்த வீட்டுக்கிட்ட போன மரியாதை ராமனுக்கு அதிர்ச்சி அங்க ஒரு பாட்டி அழுதுகிட்டு இருந்தாங்க

ஏன் பாட்டி அழுகுறீங்கன்னு கேட்டாரு மரியாதை ராமன் ,அதுக்கு அந்த பாட்டி நடந்தத சொன்னாங்க

போன வாரம் நாலு திருடர்கள் இந்த பக்கமா வந்தாங்க , அவுங்க கையில அவுங்க கொள்ளையடிச்ச பணமும் நகையும் நிறைய இருந்துச்சு

அத எல்லாம் ஒரு பானையில் போட்டு என்கிட்டே கொடுத்து பத்திரமா வச்சிருக்க சொன்னாங்க ,அதே நேரத்துல நாங்க நாலு பேரும் வந்து கேட்டா மட்டும்தான் இந்த பானைய கொடுக்கணும்னு சொன்னாங்க

அவுங்க அடிக்கடி இந்த பக்கம் வர்றதால நானும் வாங்கி வெச்சேன்

ஒருநாள் அவுங்க நாலு பேரும் எதிர்த்தாப்புல இருக்குற மர நிழல்ல படுத்து ஓய்வெடுத்துகிட்டு இருந்தாங்க

அப்ப ஒரு முயல் அந்த பக்கம் வந்திருக்கு அத பிடிச்ச திருடர்கள் நாலு பேரும் ஒரு பானை இருந்தா அதுல போட்டு சூப் வைக்கலாம்னு முடிவு செஞ்சிருக்காங்க

அதனால என்கிட்ட வந்து ஒரு பானை வாங்கிட்டு வர சொல்லி ஒரு திருடனை அனுப்பி இருக்காங்க

ஆனா அந்த புத்திசாலி திருடன் முயல் சமைக்க பானை கொடுங்கன்னு கேக்காம , நகை பணம் வச்சிருக்கிற பானைய கேட்டான்

ஆனா நாலு பேரும் வந்து கேட்டாதான அந்த பானைய கொடுக்க சொன்னீங்கன்னு கேட்டேன்

அதுக்கு அந்த திருடன் நாங்க நாலு பேரும்தான் வந்திருக்கோம் ,அதோ அங்க பாருங்க அந்த மரத்தடியில மத்த மூணு பேரும் ஓய்வெடுத்துகிட்டு இருக்காங்கனு சொன்னான்

அதுக்கு ஏத்தா மாதிரி அவுங்களும் சத்தமா பானைய கொடுத்து விடுங்கனு சொன்னாங்க

அத கேட்ட நானும் சரினு அந்த பணம் நகை இருக்குற பானைய எடுத்து அவன்கிட்ட கொடுத்தேன் ,அத வாங்குன அவன் பின் வழியா ஓடி போய்ட்டான்

அத பார்த்த மத்த மூணு திருடர்களும் என்கிட்ட வந்து,சண்ட போட ஆரம்பிச்சுட்டாங்க , நாங்க சூப் வைக்கிறதுக்கு தான் பானைய கேட்டோம் ஆனா நீங்க ஏன் அந்த நகை பணம் இருக்குற பானைய கொடுத்து விட்டீங்கனு என்ன திட்டுனாங்க

இப்ப அந்த மூணு திருடர்களும் அந்த பணம் நகைக்கு ஈடான பொருளை என்கிட்டே கேக்குறாங்க ,நானே ஏழை பெண் எனக்கு அவ்வளவு பணமோ நகையோ கிடையாது ,நான் எப்படி திருப்பி தரமுடியும்னு தெரியல அதனால தான் அழுதுகிட்டு இருக்கேனு விவரமா சொன்னாங்க அந்த பாட்டி

அதுக்கு கொஞ்ச நேரம் யோசிச்ச மரியாதை ராமன் , நான் இன்னைக்கு இங்கயே தங்குறேன் அந்த திருடர்கள் வந்தா நான் பேசி சமாளிக்கிறேன்னு சொன்னாரு

உடனே அந்த பாட்டியும் அவர் தங்குறதுக்கு ஏற்பாடு செஞ்சாங்க

கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா அங்க வந்த மூணு திருடர்கள் தங்களோட நகை பணம் இருக்குற பானையோ ,அல்லது அதுக்கு ஈடான பொருளையோ கொடுக்க சொல்லி கேட்டாங்க

அதுக்கு மரியாதை ராமன் சொன்னாரு ,உங்க பானை எங்கயும் போகல இங்கதான் இருக்கு ஆனா உங்க சொல் படி நாலு பேரும் வந்து கேட்டா தான அந்த பானைய திருப்பி கொடுக்கணும்

இப்ப நீங்க மூணு பேர் மட்டுமே வந்து கேக்குறீங்க அதனால் உங்களுக்கு நகையோ பணமோ பொருளோ கொடுக்க முடியாது ,

அந்த நாளாவது திருடன கண்டு பிடிச்சி கூட்டிட்டு வந்து இந்த பானைய வாங்கிக்கோங்கன்னு சொன்னாரு

அத கேட்ட மூணு திருடர்களும் நாம அந்த நாலாவது திருடன் செஞ்ச தப்புக்கு இந்த பாட்டி கிட்ட பணம் கேட்டது தப்புனு உணர்ந்தாங்க

அப்பத்தான் மரியாதை ராமன் சொன்னாரு என்கூட வாங்க அந்த நாலாவது திருடன் எங்க இருக்கானு நான் கண்டு பிடிச்சி தர்றேன்னு சொன்னாரு

உடனே அந்த மூணு திருடர்களும் அவரோட போனாங்க , அப்படி போகும்போது அவர பார்த்த சில காவல் அதிகாரிங்க அவர்கிட்ட பேச வந்தாங்க ,உடனே மரியாதை ராமன் இவங்க மூனு பேரும் திருடர்கள் ,இவங்கள பிடிச்சி சிறையில அடைங்கனு சொன்னாரு ,

உடனே அந்த காவலர்களும் அந்த மூணு திருடர்களையும் பிடிச்சி சிறையிலே அடச்சாங்க , அவங்க கிட்ட விசாரிச்சு நாலாவது திருடனையும் பிடிச்சி சிறையில அடைச்சிட்டாங்க

Exit mobile version