Site icon தமிழ் குழந்தை கதைகள்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

nethaji story for kids

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட பெரும் தலைவர்

அவர் 1929-ஆம் ஆண்டு, இந்திய தேசிய தொண்டர் படை’ என்ற விடுதலை வேட்கை அமைப்பு ஒன்றை உருவாக்கினார் அவரே அந்த அமைப்பின் தலைவராகவும் இருந்தார்

ஆங்கிலேயரை எதிர்க்க உருவாக்கப்பட்ட அந்தப் படையை பிரிட்டிஷ் அரசு நிர்மூலமாக்க விரும்பியது உடனே அத் தொண்டர் படை சட்டவிரோதமானது என்று கூறி நேதாஜி சுபாஷ் சந்திர போஸைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தியது பிரிட்டிஷ் அரசு

கோர்ட்டில் அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்தார் வெள்ளைக்கார நீதிபதி,

வெள்ளையரைத் தன் கால் தூரிக்குச் சமமாக நினைக்கும் நேதாஜி, நீதிபதியின் தீர்ப்பைக் கேட்டதும் ‘கடகட வென்று சிரித்தார்.

தீர்ப்பைக் கேட்டதும் என் சிரிக்கிறீர்கள் என்று கேட்டார் நீதிபதி

சிரிக்காமல் என்ன செய்வது? நான் உருவாக்கியது நாட்டு நலனுக்கான ஓர் அமைப்பு: ஏதோ ஆடு, மார் கோழி நிருடியவனுக்குந்தான் இப்படி ஆறு மாதம் தண்டனை கொடுப்பார்கள். நான் என்ன அவற்றையா திருடினேன். என்று திருப்பிக் கேட்டார் நேதாஜி

அவ்வளவுதான்

அதைக் கேட்டதும் கோர்ட்டில் இருந்த அனைவரும் கொல் என்று சிரித்து விட்டனர்.

ஏற்கனவே சுருங்கியிருந்த வெள்ளைக்கார நீதிபதியின் முகம், மேலும் சுருங்கி விகாரமாகி விட்டது

Exit mobile version