Site icon தமிழ் குழந்தை கதைகள்

நேரு செய்த விபத்து

ஒரு சமயம் காங்கிரஸ் பிரசாரத்திற்காக ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, பூர்ணிமா பானர்ஜி ஆகிய மூவரும் காரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர்

காரின் சொந்தக்காரர் பூர்ணிமா பானர்ஜி. ஆனால் ஜவஹர்லால் நேரு காரை ஓட்டிக் கொண்டிருந்தார்

நீங்கள் அதிக தூரம் காரை ஓட்டியதால் மிகவும்

களைத்திருக்கிறீர்கள், நீங்கள் ஓய்வெடுங்கள். காரை நான்

ஒட்டுகிறேன்” என்றார் பூர்ணிமா பானர்ஜி.

வேண்டாம் எனக்குக் களைப்பு ஏதுமில்லை காரை நானே ஓட்டுகிறேன்” என்றார் ஜவஹர்லால் நேரு.

இரவு ஒரு மணி அளவில் கார் அலகாபாத்தை சென்றடைந்தது.

அப்போது அருகில் அமர்ந்திருந்த லால் பகதா சாஸ்திரி, “என்னை ஆனந்த பவனத்தில் இறக்கி விட்டு விடுங்கள். அங்கிருந்து என் வீட்டிற்குச் சென்று விடுகின்றேன்” என்றார்

அந்த இரவு நேரத்தில் அவர் நேருவுக்குச் சிரமம் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் நேரு அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை

உங்களை உங்கள் வீட்டில் கொண்டு போய் விடுவதுதான் முறை என்று கூறிவிட்டுக் காரைத் தொடர்ந்து ஓட்டினார் நேரு

ஓரிடத்தில் சற்றும் எதிர்பாராதவிதமாக ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒரு பசுவின் மீது கார் உராய்ந்து விட்டது. இதனால் பசுவிற்குக் காயம் ஏற்பட்டது

நேரு காரை நிறுத்தி விட்டு இறங்கி சுற்றிலும் பார்த்தார். யாருமில்லை. அதே சமயம் லால் பகதூர் சாஸ்திரியும் பூர்ணிமா பானர்ஜியும் காரை விட்டு இறங்கி பசுவின் அருகே வந்தனர்.

“பசுவின் உடலில் இருந்து இரத்தம் கசிகிறதே” என்றார் பூர்ணிமா பானர்ஜி

ஆமாம்! பசுவின் சொந்தக்காரர் இங்கிருந்தால் யாரையுமே

நடந்ததை விளக்கலாம். காணோமே” என்றார் நேரு ஆனால்

சற்று நேரம் பொறுத்திருந்து பார்க்கலாம்” என்றார் லால் பகதூர் சாஸ்திரி.

அந்த இருட்டில்.. நடுரோட்டில் அவர்கள் காத்திருந்தனர். சிறிது நேரம் சென்றபிறகு சிலர் அங்கே வந்தனர்

நேரு அந்தப் பகவை அவர்களிடம் காட்டி, “இது யாருடைய பசு” என்று கேட்டார்

என்னுடையது ஐயா என்றார் ஒருவர்

நேருவை அவர்கள் அனைவருமே அடையாளம் கண்டு கொண்டு மரியாதையாக நின்றனர்

நேரு நடந்த சம்பவத்தை அவரிடம் கூறினார்

பரவாயில்லை ஐயா/ தவறுதலாக நேர்ந்து விட்டதுதானே. பசுவிற்கு நான் சிகிச்சை செய்து கொள்கிறேன். நீங்கள் செல்லுங்கள் ” என்று பணிவுடன் கூறினார் பசுவின் சொந்தக்காரர்

நேரு அவரது பெயர் மற்றும் விலாசத்தைக் கேட்டுக் குறித்துக் கொண்டார். பிறகு மூவரும் காரில் புறப்பட்டனர்

முதலில் லால் பகதூர் சாஸ்திரியை அவரது வீட்டில் இறக்கிவிட்டு விட்டுத் தனது இல்லமான ஆனந்த பவனத்திற்கு வந்தார் நேரு. அங்கு தான் இறங்கிக் கொண்டு பூர்ணிமா பானர்ஜியிடம் காரைக் கொடுத் தனுப்பினார்.

மறு நாள் காலை முதல் வேலையாக அந்தப் பசுவின் வைத்தியச் செலவிற்காக, அதன் சொந்தக் காரருக்கு 30 ரூபாயை அனுப்பி வைத்தார் மனிதநேயம் கொண்ட ஜவஹர்லால் நேரு.

Exit mobile version