Site icon தமிழ் குழந்தை கதைகள்

எனக்கு பிடித்த புத்தகம் – My Favourite Book Tamil Kids Essay

pile of books

Photo by Pixabay on Pexels.com

 எனக்கு பிடித்த புத்தகம் – My Favourite Book Tamil Kids Essay:-ஒவ்வொருவருக்கும் தமது வாழ்நாளில் உன்னதமான அறிவைக் கொடுத்த புத்தகம் என்று ஒன்று எப்போதும் இருக்கும் அந்த வகையில் எனது வாழ்வை ஒளிபெறச் செய்தது மறைந்த குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் அக்னி சிறகுகள் புத்தகம்.

Photo by Pixabay on Pexels.com

 எங்கள் கிராமத்தில் தொடங்கப்பட்ட நூலகத்தின் வாயிலாக அந்த புத்தகத்தை படிக்கும் வாய்ப்பு எனக்கு இளவயதிலேயே அமைந்தது. அந்த சமயத்தில் திரு அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களுடன் உரையாடும் நிகழ்ச்சிகளை எங்களூர் தொலைக்காட்சிகளில் அடிக்கடி பார்க்க நேர்ந்தது அப்போது அவரது பதில்களும் அறிவியல் சார்ந்த உரையாடல்களும் என்னை அவர் மீது மிகுந்த பக்தனாக மாற்றியது. அவரைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள வேண்டிய அவளை எனக்குள் விதைத்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அடுத்தபடியாக அவரது கட்டுரைகளை நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் தேடிப் படிக்கத் தொடங்கினேன் அப்படி ஒருநாள் நாளிதழ் ஒன்றில் அவர் எழுதிய அக்னிச் சிறகுகள் என்ற சுயசரிதை புத்தகத்தை பற்றி தெரிந்து கொண்டேன் அதனை தொடர்ந்து அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள் எழுந்தது.

 பள்ளி மாணவனான எனக்கு புதிதாக புத்தகம் வாங்கிப் படிக்கும் வசதி குறைவாகவே இருந்தது. நான் வசிக்கும் ஊர் கிராமம் என்பதால் அதிகம் படிப்பறிவு உடைய நபர்கள் வெளியூரில் வேலை செய்பவர்கள் ஆகவே இருந்தனர் அவர்கள் உதவியை நாடி இந்தப் புத்தகத்தை இரவல் வாங்கி படிக்கும் ஆவலில் இருந்தேன் அது சமயத்தில் எங்கள் ஊரில் அரசின் உதவியுடன் தொடங்கப்பட்ட நூலகத்தைப் பற்றி கேள்விப்பட்டேன் அங்கு சென்று விசாரித்ததில் மாணவர்களின் நலனுக்காக இதுபோன்ற ஊக்கத்தை ஏற்படுத்திய புத்தகங்கள் ஏராளம் இருப்பதை பற்றி நூலகரிடம் தெரிந்துகொண்டேன் குறிப்பாக எனக்கு இந்த புத்தகம் வேண்டும் என்று அவரிடம் கேட்டபோது எனக்கு அந்தப் புத்தகத்தை ஒரு வாரம் மட்டும் பயன்படுத்தி விட்டு திருப்பிக் கொடுக்கும்படி சொல்லி கொடுத்து உதவினார்

 அப்துல்கலாம் அவர்களின் இளமைக்காலம் முதல் அணுசக்தியில் அவரது அபரிமிதமான ஆற்றல் மற்றும் இந்திய அரசுக்கு அவர் செய்த அறிவியல் சாதனைகள் அனைத்தையும் பற்றி எளியவர்கள் மற்றும் குழந்தைகள் கூட புரிந்து கொள்ளும் வகையில் தமிழில் எழுதப்பட்டிருந்தது அந்த புத்தகம்

 குறிப்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தில் அவர் வேலை செய்யும் போது அவர் சந்தித்த அறிவியல் சவால்களைப் பற்றி அந்த புத்தகத்தில் அதிகம் எழுதி இருந்தார் அதனைப் படிக்க படிக்க எனக்கு அறிவியல் மீது ஒரு ஈடுபாடு ஏற்பட்டது

 இதன் காரணமாகவே பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்ட நான் நேரடியாக அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் சென்று அறிவியல் பாடத்தையே எனது முதல் பாடமாக எடுத்து படிக்க தொடங்கினேன் வாழ்வில் ஒவ்வொரு முறை இயக்கம் மற்றும் சிறு சலனங்கள் ஏற்படும் போது எனக்கு உத்வேகம் அளிக்கக் கூடியது அப்துல்கலாம் அவர்களின் அந்த புத்தகம் எனவே முதன்முதலாக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் எனது குழந்தைகளுக்கு அந்த புத்தகத்தை பரிசளித்து இருக்கிறேன். இந்த புத்தகத்தை நான் விரும்பி அதன் காரணமாக என் நண்பர்களுக்கு என் உறவினர்களுக்கு என நிறைய பேருக்கு பரிசாகவும் வழங்கியுள்ளேன்

Exit mobile version