Site icon தமிழ் குழந்தை கதைகள்

எனக்கு பிடித்த உணவு கட்டுரை-My Favorite Food Essay in Tamil-தோசை கட்டுரை

எனக்கு பிடித்த உணவு கட்டுரை-My Favorite Food Essay in Tamil -Essay About Dosai:- பிடித்த உணவை இன்று நாம் சுலபமாக இணையம் வாயிலாக நமது வீட்டிற்கு வரவழைக்க முடிகிற இந்த காலத்தில் ,எனது அம்மா தனது கையால் மாவரைத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறிய தோசையே எனக்கு பிடித்த உணவு ஆகும்.

Photo by Robin Stickel on Pexels.com

நான் சிறுவனாக இருந்த காலத்தில் இருந்து எனது அம்மாவின் சமையலின் ருசியை வெகுவாக அனுபவித்து வந்துள்ளேன்.எங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பண்டங்கள் அல்லது உணவுக வகைகள் பிடிக்கும் என்றாலும் எனது அம்மா சுடும் தோசைக்கு எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அடிமை.பக்குவமாக ஒவ்வொருவருக்கும் பிடித்த வகையில் தோசை சுடும் என் அன்னையின் அன்புக்கு ஈடு இணை கிடையாது.

சிறுவயதில் ஹோட்டல்களில் பரிமாறப்படும் முறுகல் தோசை எனக்கு ரொம்ப பிடிக்கும் ,எனவே எனது அன்னை எனக்கு தனியாக முறுகல் தோசை சுடுவார் ,ஆனால் எனது தங்கைக்கு தடிமனான தோசையும் ,எனது தந்தைக்கு வெங்காயம் போட்ட தோசையும் ,எனது தாத்தாவிற்கு மிளகாய் பொடி தூவிய தோசை என அவர் தோசை சுடுவதே தனி அழகாக இருக்கும்.

Photo by Jack Baghel on Pexels.com

இன்றைய அறிவியல் கால கட்டத்தில் வெவ்வேறு விதமான துரித உதவுங்கள் வந்துவிட்ட பொழுதும் ,அவற்றிக்கு இணையாக தோசையின் பரிணாமமும் அமைந்துள்ளது.குறிப்பாக காளான் தோசை ,முட்டை தோசை ,மசாலா தோசை என்ற பொதுவான தோசை வகைகளுடன் பன்னிர் தோசை ,சேண்ட்விட்ச் தோசை , கிரில்ட் தோசை என புது வகை தோசைகள் வந்து எனது பிரியமான தோசையை வாழ்நாள் முழுவதும் உண்ண வழிவகை கிடைத்துள்ளது.

எங்கு பயணம் செய்தாலும் புதிய இடங்களில் கிடைக்கும் உணவுகளின் தரம் மற்றும் அது செய்யும் உடல் உபாதைகள் பற்றிய கவலைகள் எனக்கு இல்லை ,ஏனென்றால் சுமாரான திறமையுடைய சமயலாளர் கூட மிக சுவையான தோசை மற்றும் சட்னியை செய்து விட முடிகிறது, தோசை செய்ய ஆகும் செலவு மிக மிக குறைவு என்பதால் தேவையில்லாத கலப்படம் தவிர்க்க படுகிறது.எனவே குழந்தைகளை வெளி இடங்களுக்கு கூட்டி செல்லும் பெற்றோர்கள் தோசையையே தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர்,மேலும் குழந்தைகளுக்கு பிடித்த வகையில் வித விதமான அலங்காரங்களுடன் தோசை பரிமாற படுவதால் ,மேலை நாடுகளை பின்பற்றி தயாரிக்க படும் உணவுகளை காட்டிலும் தோசையே பாதுகாப்பான உணவு என்றும் கூறலாம்

Exit mobile version