எனது கதாநாயகனாகிய எனது தந்தை கட்டுரை – My Father My Hero Essay For Children in Tamil:- எனது தந்தையே எங்கள் குடும்பம் ஒற்றுமையாகவும் ,வளமாகவும் ,அன்பாகவும் இருப்பதற்கு முதல் காரணமானார்
அவரே எங்களை பாதுகாப்பதில் ,அறிவூட்டுவதிலும் ,வாழ்வில் வளம் சேர்ப்பதிலும் மிகுந்த அக்கறை கொண்டவராக இருக்கிறார் .ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் கதாநாயகனாக அவர்களது தந்தையே இருக்க கூடும் ,அந்த வகையில் எந்த ஒரு சிறு பிரச்னையும் எங்களை அண்ட விடாத எனது தந்தையே எனக்கு கதாநாயகனாவார்
எனது தந்தை மிக பண்புடைய மனிதர் என உற்றார் உறவினர்கள் கூறுவதை கேட்கும்பொழுது ,அவருடைய பராமரிப்பில் வாழ்வதை வரமாக உணர்கிறேன்.எனது குடும்பம் மிக சிறிய குடும்பமான போதிலும் எனது தாத்தா பாட்டி யுடன் வசிக்கும் கூட்டு குடும்பம் என்றே கூறலாம்
சிறுவயது முதல் எங்கள் தந்தை அவர்களது பெற்றோரை பேணுவத்தையும் ,மதிப்பதையும் கண்டு வளர்ந்துள்ளேன் ,அந்த பழக்கம் எனக்கும் எனது சகோதரருக்கும் இயற்க்கையாகவே ஒட்டி கொண்டுவிட்டது ,பின் நாட்களில் வெளி உலகில் மூத்தவர்களை மதித்து பேசும் பழக்கம் எங்கள் வாழ்வில் வெற்றியை தேடி தந்தது.
ஒவ்வொரு குடும்பத்திலும் வளரும் குழந்தைகள் தங்களது பெற்றோரில் குணங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றனர் .அத்தகைய இளவயது குழந்தைகளின் வாழ்வில் உதாரணமாக இருந்து வாழ்வை புரிய வைப்பது பெரும்பாலும் தந்தையே
தாய் பாசத்தில் பூரணமடைந்த குழந்தைகள் ,வெளியுலகில் வெற்றிபெற தமது தந்தையை பின்பற்றி நடக்க ஆரம்பித்தாலே போதும் என்பது எனது கருத்து.
எனது கதாநாயகனாக எனது தந்தையை நான் சொல்வதற்க்கான காரணம் ,எனக்கு வாழ்வில் அறிவையும் ,சிக்கனத்தையும் ,அஞ்சாத நெஞ்சத்தையும் ,பண்பயும் ,உலக அறிவையும் கற்பித்தது அவர்தான்