Site icon தமிழ் குழந்தை கதைகள்

Mulla’s Win – முல்லாவின் வெற்றி -சிறுவர்மலர் கதை

Mulla’s Win – முல்லாவின் வெற்றி -சிறுவர்மலர் கதை :- முல்லா வாழ்ந்துகிட்டு இருந்த கிராமத்துக்கு அப்ப அப்ப வெளிநாட்டு அறிஞர்கள் வந்து பிரசங்கம் செய்யுறது வழக்கம்

அப்படித்தான் ஒரு தடவ பக்கத்து நாட்டுல இருந்து நிறைய படிச்ச ஒரு அறிஞர் அங்க வந்து இருந்தாரு ,அவரு தங்குறதுக்கு கிராமத்து காரங்க ஒரு குடிசையையும் ஏற்பாடு செஞ்சாங்க ,அங்க தங்கி தன்னோட சொற்பொழிவ கிராமத்து மக்கள் கிட்ட செஞ்சாரு.

அவரு என்னைக்கு என்ன பேசுவருனு எல்லாரும் ஆவலா இருக்குறமாதிரி முல்லாவுக்கு ஆர்வம் வந்துச்சு ,உடனே கூட்டம் நடக்குற இடத்துக்கு போனாரு முல்லா ,அங்க போயி அந்த அறிஞர் பேசுறத கேக்க ஆரம்பிச்சாரு முல்லா

கொஞ்ச நேரம் அவரு பேச்ச கேட்ட முல்லாவுக்கு ஒரு விஷயம் நல்லாவே புரிச்சிச்சு ,இந்த அறிஞர் தான்கிற அகங்காரம் பிடிச்சவரா இருக்காரு , தான் படிச்ச புத்தகங்களை பத்தி பேசாம தான் எத்தனை புத்தகம் படிச்சிருக்கேன் தெரியுமா எனக்கு முன்னாடி நீங்க எல்லாம் ரொம்ப அர்ப்பமானவங்கனு சொன்னாரு

அறிவியல் பத்தி பேசுறப்ப இந்த உலகத்துலயே அதிக அறிவியல் விஷயம் தெரிஞ்ச இடங்கள் நிறைய இருக்கு ஆனா நீங்க இங்க முட்டாள் தனமா வாழ்ந்துகிட்டு வாரீங்கனு சொல்லி சிரிச்சாரு ,இத கேட்ட கூட்டத்துல இருக்கவங்களுக்கு கோபம் வந்தாலும் அமைதியா இருந்தாங்க

ஆனா அறிவுல சிறந்த முல்லா இந்த திமிர் பிடிச்ச அறிஞருக்கு நல்ல பாடம் புகட்டணும்னு நினைச்சாரு , அப்பத்தான் முல்லாவுக்கு ஒரு யோசனை வந்துச்சு ,

உடனே அந்த அறிஞர் குளிக்க போகும்போது ஒரு மரத்தடியில நின்னு அந்த மரத்துல தன்னோட காத வச்சி சத்தம் எதுவும் வருதான்னு கேட்டு கிட்டே நின்னாரு

இத பார்த்த அந்த அறிஞர் இது என்ன இந்த பெரியவர் இந்த மரத்துல காது வச்சு என்னத்த கேக்குறாருனு கேட்டாரு ,அங்க இருந்த யாருக்குமே முல்லா எதுக்கு மரத்துல தன்னோட காத வச்சிக்கிட்டு நிக்குறாருனு தெரியல

மெதுவா முல்லா கிட்ட வந்த அறிஞர் ஏன் பெரியவரே எதுக்கு இப்படி நிக்கிறீங்க ,என்ன கேக்குது உங்களுக்குனு கேட்டாரு ,இத கேட்ட முல்லா அவருக்கு பதில் சொல்லாம மரத்துல காது வச்சி கேட்டுகிட்டே இருந்தாரு ,அதுக்கு மேல பொறுமை இல்லாத அந்த வெளிநாட்டு அறிஞர் அவரும் அந்த மரத்துல காது வச்சு கேக்க ஆரம்பிச்சாரு

ஆனா அவருக்கு எதுவுமே கேக்கல ,இது என்ன ஒண்ணுமே கேக்கலனு யோசிச்ச அந்த அறிஞர் முல்லா கிட்டயே கேட்டாரு ஐயா எனக்கு ஒண்ணுமே கேக்கல உங்களுக்கு எதாவது கேக்குதான்னு கேட்டாரு ,அப்பதான் முல்லா சொன்னாரு ஒரு மணி நேரமா காது வச்சு கேக்குறேன் எனக்கு ஒண்ணுமே கேக்கல , ஒரு நிமிஷம் காத வச்சு கேக்குற உனக்கு மட்டும் கேட்டுருமானு கேட்டாரு

இத கேட்ட அந்த அறிஞருக்கு தான் முட்டாளாக்க பட்டத புரிச்சிக்கிட்டாரு ,நேரா குடிசை வீட்டுக்கு வந்த அவரு பெட்டி படுக்க எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு அந்த ஊற விட்டே ஓடி போய்ட்டாரு

அகங்காரம் பிடிச்சு நம்ம ஊருக்கு வந்து நம்மளையே குறை சொன்ன அந்த ஆளுக்கு முல்லா நல்ல பாடம் சொல்லி கொடுத்துட்டாருனு எல்லாரும் ரொம்ப சந்தோஷப் பட்டாங்க

Exit mobile version