Site icon தமிழ் குழந்தை கதைகள்

Mulla’s House Catches Fire – முல்லா குடிசையில் தீ

Mulla’s House Catches Fire – முல்லா குடிசையில் தீ :- முல்லா ஒருநாள் சந்தையில வியாபாரம் பார்த்துகிட்டு இருந்தாரு ,அப்ப அங்க அவரோட நண்பர் வேகமா ஓடி வந்தாரு

அவர பார்த்த முல்லா என்ன நண்பரே எதுக்கு இப்படி மூச்சிரைக்க ஓடி வர்றீங்க எதாவது பிரச்னையானு கேட்டாரு ,அதுக்கு அந்த நண்பர் சொன்னாரு உங்க குடிசை தீ பிடிச்சிடுச்சு ,அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரும் தீய அணைக்க போராடிகிட்டு இருக்கோம்னு சொன்னாரு

ஆனா அத கேட்ட முல்லா நிதானம் இலக்காம அப்படியானு கேட்டுட்டு ,மெதுவா தன்னோட பொருட்களை எல்லாம் கழுதை மேல ஏத்தி கிட்டு தன்னோட குடிசைய நோக்கி நடந்தாரு

வீட்டுக்கு வந்த முல்லா தன்னோட குடிசை எரியுறாத பார்த்தாரு ,அக்கம் பக்கத்து வீட்டு காரங்க எல்லாரும் வாளியில தண்ணி மோந்து குடிசை மேல ஊத்துங்க ,சிலர் மணல் அள்ளி குடிசை மேல போட்டாங்க ,ஆனாலும் தீ காட்டுக்கு அடங்காம கொழுந்து விட்டு எரிஞ்சிச்சு

இத பார்த்த முல்லா அவுங்க எல்லாத்தையும் தடுத்து நிறுத்துனாரு ,போதும் தீய அணைக்கு நீங்க போராடுனது போதும் இனி நாம எல்லாரும் இந்த குடிசையோட பேரழகை ரசிக்கலாம்னு சொன்னாரு ,இத கேட்ட எல்லாருக்கும் அடடா குடிசை தீ பிடிச்சதும் முல்லாவுக்கு பைத்தியம் புடிச்சிடுச்சு போலன்னு ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கிட்டாங்க

அப்ப முல்லா சொன்னாரு , கடைசியா எனக்கு தொல்லை கொடுத்த மூட்ட பூச்சி அழிஞ்சிடும்லன்னு சொல்லி கல கலனு சிரிச்சாரு ,எல்லாருக்கும் குழப்பமா போச்சு ,தான் வாழுற குடிசையே முழுசா தீயில அழிஞ்சு போகுது இதுல மூட்ட பூச்சி தொந்தரவு இனிமே கிடையாதுன்னு சொல்லுறாரே முல்லானு எல்லாரும் திகைச்சு பார்த்தாங்க

அப்பத்தான் முல்லா சொன்னாரு எல்லாருக்கும் தன்னோட வாழ்க்கையை கொஞ்சம் முன்னாடி ஆரம்பிச்சி இருக்கலாம்னு ஒரு எண்ணம் இருக்கும் ,புதுசா வண்டி வாங்குனதும் அடடா இத விட வேற வண்டி வாங்கி இருக்கலாமேன்னு தோணும் ,புது தொழில் ஆரம்பிச்சதும் அடடா வேற தொழில தேர்ந்தெடுத்து இருக்கலாமேன்னு தோணும்

அது மனித இயல்பு ,எனக்கும் இந்த குடிசைய வேற மாதிரி கட்டி இருக்கலாமேன்னு ஒரு எண்ணம் இருந்துச்சு ,அது தினம் தினம் எனக்கு மனசுல பாரமா இருந்துச்சு ,இப்ப கடவுள் கொடுத்த இந்த நிகழ்வு நாள என்னால திரும்பவும் குடிசையை நான் நினச்சபடி கட்டிக்க முடியும்

நான் வாழ்ந்த வீடு என்னோட தவறுகளும் அடங்கியது ,எனக்கு தேவ இல்லாத பொருட்களை கூட நான் உள்ள வச்சிருக்கேன் , அத வெளிய தூக்கி போட மனசு இல்லை ,அதுனால எனக்கு எந்த பயனும் இல்லை ,அப்படிப்பட்ட பொருட்கள் எல்லாம் நாம் வாங்காமலே இருந்திருக்கலாம்னு தினம் தினம் நான் நினைச்சுகிட்டு இருந்தேன்

இந்த தீ விபத்து என்னோட தவறுகள் எல்லாத்தையும் திருத்திக்கிடவும் ,மீண்டும் முதல்ல இருந்து என்னோட வாழ்க்கையை ஆரம்பிக்கவும் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்குனு சொன்னாரு

முல்லா சொன்னது எல்லாருக்கும் தெளிவா புரிஞ்சது ,உடனே எல்லாரும் தூரமா இருந்து குடிசை எரியிறத பார்த்தாங்க ,இதுவும் நன்மைக்கேன்னு முல்லா இருந்தாரு

Exit mobile version