Mulla’s Buried Treasure – முல்லாவின் புதையல் :- முல்லா வாசிச்சிகிட்டு வந்த கிராமத்துல ஒரு தடவ பஞ்சம் வந்துடுச்சு ,விவசாய நிலம் எல்லாம் காஞ்சி போய்டுச்சு
விவசாயம் செய்யுறதுக்கு போதுமான மழை இல்லாம இருந்ததால விவசாய தொழில் செஞ்சுகிட்டு இருந்த எல்லாரும் பட்டணத்துக்கு வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க ,இப்படியே ரொம்ப மாதம் ஆனதுக்கு அப்புறம் மழை காலம் தொடங்குச்சு
இத்தனை நாள் விவசாயம் செய்ய முடியாததாலயும் , விவசாயத்துல வருமானம் இல்லாதது நாளையும் புதுசா விவசாயம் செய்யா முடியல ,முல்லாவுக்கும் அதே மாதிரி பிரச்சனைதான் வந்துச்சு ,தன்னோட தோட்டத்துல புதுசா நிறய வாழை மரங்கள் நடணும்னு முடிவு செஞ்சாரு
ஆனாலும் விவசாய வேலை செய்ய வர்றவங்களுக்கு கொடுக்க அவருகிட்ட காசு இல்ல , இந்த நிலைமையில எல்லா காசையும் விவசாய கூலிக்கு கொடுத்துட்டா தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாது ,என்ன செய்யலாம்னு யோசிச்ச முல்லாவுக்கு ஒரு ஐடியா வந்துச்சு
உடனே தன்னோட தோட்டத்துல நாலு குழி அவரே தோண்டுனாரு ,தொண்டிக்கு விவசாய வேலை செய்யுறவங்க அந்த பக்கமா நடந்து போகுறப்ப ஓன்னு அழுக ஆரம்பிச்சாரு ,இத பார்த்த எல்லாரும் உடனே முல்லா கிட்ட வந்து எதுக்கு முல்லா அழுகுறீங்கன்னு கேட்டாங்க
அதுக்கு முல்லா சொன்னாரு போன வருஷம் கொஞ்சம் தங்க காசு இந்த இடத்துல புதைச்சு வச்சேன் இப்ப எந்த இடத்துல புதைச்சேனு மறந்துபோச்சு ,யாராவது எனக்கு உதவும் அதுல இருக்குற தங்க காசுல பாதியை யார் எனக்கு கண்டு புடிச்சி கொடுக்குறீங்களோ அவுங்க எடுத்துக்கலாம்னு சொன்னாரு
இத கேட்ட வேலைகாரங்க எல்லாம் அடடா இன்னைக்கு வேலைக்கு போனா கொஞ்சம் காசுதான் கிடைக்கும் ,ஆனா முல்லா சொன்ன மாதிரி தங்க புதையல கண்டுபிடிச்சி கொடுத்தா நிறய தங்க நாணயம் கிடைக்கும்னு சொன்ன வங்கா முல்லாவோட தோட்டத்துல குழி தோண்டி தங்கம் இருக்கானு பார்த்தாங்க
ஆனா யாருக்குமே தங்கம் கிடைக்கல அப்ப முல்லா சொன்னாரு நான் ரெண்டு அடி ஆழத்துல அத புதைச்சு வச்சேன் நீங்க ரெண்டு அடிக்கு மேல தோண்டுங்கனு சொன்னாரு ,உடனே எல்லாரும் முல்லா சொன்ன மாதிரியே ஆழமா குழி தோண்ட ஆரம்பிச்சாங்க
சாயந்தரம் வரை நிறய குழி தோண்டியும் தங்கம் எதுவும் கிடைக்காத எல்லாரும் தங்களோட நம்பிக்கையை விட்டு வீட்டுக்கு போய்ட்டாங்க ,அடுத்த நாள் அங்க வந்து பார்த்த போது அங்க இருந்த அவுங்க தோண்டுன குழியில எல்லாம் புதுசா வாழை நட்டு முல்லா தண்ணி ஊத்திக்கிட்டு இருக்குறத பார்த்தாங்க
அப்பத்தான் எல்லாருக்கும் புரிஞ்சது இந்த முல்லா நம்ம எல்லாருக்கும் பணத்தாசை காட்டி குழி தோண்ட வச்சி ,அதுல இப்ப மரம் நட்டுகிட்டு இருக்காரு ,பலே கில்லாடி தான் இந்த தாத்தான்னு சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பி வேலைக்கு போனாங்க
