Site icon தமிழ் குழந்தை கதைகள்

Mulla Visits a Town for the First Time – பட்டணம் போன முல்லா

Mulla Visits a Town for the First Time – பட்டணம் போன முல்லா :- முல்லா ஒருநாள் பட்டணம் போய் ஊர் சுத்தி பார்த்துட்டு வரணும்னு நினைச்சாரு

அதுக்காக தன்னோட கழுத மேல அவரோட பெட்டி எல்லாத்தையும் வச்சு கட்டி பட்டணத்த நோக்கி நடந்து போனாரு , ரொம்ப தூரம் நடந்தே போன முல்லாவுக்கு கால் வலிக்க ஆரம்பிச்சுச்சு

உடனே அந்த பட்டணம் போற தெருவுல இருக்குற ஒரு மரத்தடியில படுத்தாரு ,அவரு ஓய்வெடுத்துகிட்டு இருக்கும்போது எதுத்தாப்புல இருந்த ஒரு கடையில எதோ சத்தம் கேட்டுச்சு

அது ஒரு சைக்கிள் வாடகைக்கு விடுற கடை , அங்க என்ன பிரச்சனைன்னு முல்லா உத்து பார்த்தாரு ,அங்க இருந்த கடைக்காரர் வெளியூர் காரங்களுக்கும் ,தெரியாதவர்களுக்கும் வாடகைக்கு சைக்கிள் கொடுக்க மாட்டேன்னு சத்தம் போட்டு சொல்லிக்கிட்டு இருந்தாரு, அத அங்க இருந்த எல்லா கடைக்காரர்களும் கூட்டமா நின்னு பார்த்துகிட்டு இருந்தாங்க

ஆனா அவருகிட்ட பேசிகிட்டு இருந்தவரு ஐயா நான் பக்கத்து ஊர் காரன்தான் ,உங்களுக்கு தெரியாதவன்தான் ஆனா எனக்கு இப்ப என்னோட மனைவியை மருத்துவ மனைக்கு கூட்டிட்டு போகணும் தயவு செஞ்சு வண்டி வாடகைக்கு கொடுங்க,நான் முன் பணம் வேணும்னாலும் கொடுத்துடறேன்னு சொன்னாரு.

இத கேட்டும் அந்த சைக்கிள் கடைக்காரர் அவருக்கு சைக்கிள் கொடுக்க முடியாதுனு சொன்னாரு ,அப்பத்தான் ஈவு இரக்கம் இல்லாம மருத்துவமனைக்கு போறதுக்கு கூட சைக்கிள் கொடுத்து உதவாத இந்த சைக்கிள் கடைக்காரருக்கு ஒரு பாடம் புகட்டணும்னு நினைச்சாரு

உடனே அந்த சைக்கிள் கடைக்குள்ள போனாரு முல்லா , உடனே வாங்கனு கூப்பிட்டாரு அந்த சைக்கிள் கடை காரர் ,உடனே முல்லா அடடா நான் வந்தத எப்படி கண்டுபிடிசீங்கனு கேட்டாரு ,உடனே அந்த சைக்கிள் கடைக்காரர் அதான் நீங்க வர்றது தெரியுதே நான் என்ன குருடனானு கேட்டாரு

அதுக்கு முல்லா சொன்னாரு அப்ப என்ன உங்களுக்கு தெரிஞ்சிருக்கு அதனால இப்ப எனக்கு சைக்கிள் வாடகைக்கு கொடுங்கன்னு சொன்னாரு ,அப்பத்தான் அந்த சைக்கிள் கடைக்காரர் நினைச்சாரு அடடா கோவத்துல வார்த்தைய விட்டுட்டமேனு

அது வரைக்கும் அமைதியா இருந்த கூட்டம் நீதான் தெரிஞ்சவங்களுக்கு மட்டும் சைக்கிள் வாடகைக்கு கொடுப்பேன்னு சொன்னியே ,இப்ப இவர உனக்கு தெரிஞ்சிருக்கு அவருக்கு வாடகைக்கு சைக்கிள் கொடுன்னு எல்லாரும் சண்டைக்கு வந்தாங்க

சரி ,இந்தாங்க இந்த சைக்கிள எடுத்துட்டு போங்கன்னு சொன்னாரு ,அப்பத்தான் முல்லா சொன்னாரு ,ஒரு மருத்துவ உதவிக்கு கூட போகாத உன்னோட சைக்கிள் கடை சைக்கிள் எனக்கு வேணாம்னு சொல்லிட்டு அங்க இருந்து போய்ட்டாரு

அத பார்த்த அந்த சைக்கிள் கடைக்காரர் பேராசையினால இப்படி உதவி செய்யக்கூட தவறிட்டோமே , நம்மள இனிமே இந்த ஊருல இருக்கவங்க யாரும் மதிக்க மாட்டாங்க ,யாரும் நம்ம சைக்கிள வாடகைக்கு எடுக்க மாட்டாங்கன்னு நினைச்சு வறுத்த பட்டாரு

ஈவு இரக்கம் இல்லாம இருந்த சைக்கிள் கடைக்காரரை திருத்துன முல்லாவோட புகழ் உலகம் எங்கும் பரவுச்சு

Exit mobile version