Site icon தமிழ் குழந்தை கதைகள்

Mulla & The Burglar in the Dark- முல்லாவும் திருடனும்

Mulla & The Burglar in the Dark- முல்லாவும் திருடனும் :- நிறைய பேருகிட்ட நல்ல பேரு எடுத்து இருந்தாலும் ,நிறய பேருக்கு உதவு செஞ்சு இருந்தாலும் யாருகிட்டயும் உதவியாவோ நன்கொடையவோ காசு வாங்கவே மாட்டாரு ,அதனால் முல்லா தன்னோட கிராமத்துல சாதாரண வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருந்தாரு

ஆனாலும் முல்லா நிறய பணம் வச்சியிருக்குறதா ஊருக்குள்ள பேச்சு ,இத ஒருநாள் சிலபேர் சந்தையில இருக்குற டீ கடையில உக்காந்து புறணி பேசிகிட்டு இருந்தாங்க ,அங்க இருந்த ஒரு திருடன் காதுல விழுந்துச்சு ,அடடா எதோ பணக்காரனை பத்தி பேசுறாங்க ,அவன் வீடு எங்க இருக்குனு கண்டுபிடிச்சி இன்னைக்கு அங்க திருடிடணும்னு முடிவு செஞ்சான்

கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா அங்க புறணி பேசிகிட்டு இருந்தவங்க கிட்ட முல்லாவோட வீடு எங்க இருக்குனு கேட்டு தெரிஞ்சிகிட்டான் ,ராத்திரி வரைக்கு காட்டு பகுதியில ஒளிஞ்சு இந்த அவன் ,ராத்திரி ஆனதும் முல்லா வீட்டுக்குள்ள வந்தான்

அங்க நிறைய போட்டிகள்ல கலந்து கிட்டு வாங்குன பரிசு பொருட்கள் இருக்குறத பார்த்தான் உடனே ஒரு சாக்க எடுத்து எல்லாத்தையும் மூட்ட கட்ட ஆரம்பிச்சான் ,அப்பத்தான் தனக்கு பின்னாடி யாரோ நிக்கிறத கவனிச்சான் ,பயந்து போன அவன் பின்னாடி திரும்பி பார்த்தான்

பின்னாடி முல்லா நின்னுகிட்டு இருந்தாரு ,அவர திருடன் பார்த்தது கிடையாது அதனால யார் இந்த மனுஷன்னு உத்து பார்த்தான் ,அப்பதான் முல்லா அவன் வச்சிருந்த சாக்குல மிச்சம் இருக்குற பரிசு பொருள் எல்லாத்தையும் ஒவ்வொண்ணா எடுத்து போட்டாரு

இத பார்த்த திருடனும்னு முதல்ல ஒன்னும் புரியல ,அப்புறமா இவனும் நம்மள மாதிரி திருடன் தான் போல இருக்கு ,இங்க திருடுறதுக்கு எனக்கு உதவி செய்யுறான் ,இவன் கூட சேர்ந்து இங்க இருக்குற எல்லா பொருளையும் திருடிட்டு ,வெளிய போயி இவங்கூட பங்கு போட்டுக்கலாம்னு நினைச்சான் திருடன்

முல்லா தொடர்ந்து அங்க இருந்த பொருட்களை ஒவ்வொண்ணா எடுத்து கொடுக்க அவன் பெரிய சாக்குல போட்டு கட்ட ஆரம்பிச்சான் ,அதுக்கு அப்புறமா முல்லா தரையில இருந்த ஒரு கதவை திறந்தாரு ,அத பார்த்த திருடனுக்கு ஓஹ் இந்த பெட்டியிலதான் விலை உயர்ந்த பொருள் எல்லாம் இருக்கும்னு நினைச்சான்

அப்பதான் முல்லா பேச ஆரம்பிச்சாரு , இன்னைக்கு அமாவாசை அதனால இருட்டுல ஒண்ணுமே தெரியல ,நீ வேணும்னா நாளைக்கு காலையில வாயேன் ,நான் இது எல்லாத்தையும் சாக்குல கட்டி வைக்குறேனு வந்து எடுத்துட்டு போனு சொன்னாரு

அப்பத்தான் திருடனுக்கு தூக்கி வாரி போட்டுச்சு ,அடடா இந்த ஆள் திருடன் இல்ல இவர் தான் இந்த குடிசையோட முதலாளி முல்லானு புரிஞ்சது ,திருடன் கேட்டான் ஏங்க உங்க வீட்டுல திருட நீங்களே உதவி செய்யுறீங்கன்னு கேட்டான்

அப்பத்தான் முல்லா சொன்னாரு இது எல்லாம் எனக்கு கிடைச்ச பரிசுகள் ,இத வச்சு ஒரு வடை கூட வாங்க முடியாது ,இது எல்லாம் என்னோட இடத்த அடிச்சிக்கிட்டு கிடந்துச்சு ,நீ வந்து இத எல்லாம் எடுக்குறத பார்த்ததும் சந்தோசமா ஆகிடுச்சு ,அதனால தான் உனக்கு உதவுனேனு சொன்னாரு

இந்த வீட்டுல பைசா தேராதுனு புரிஞ்சிகிட்ட திருடன் முல்லாவ ஓங்கி ஒரு அற அறஞ்சிட்டு ஓடிட்டான்

Exit mobile version