Site icon தமிழ் குழந்தை கதைகள்

Mulla Shares the Donkey’s Load – கழுதையின் சுமை முல்லா நஸ்ருதீன் கதைகள் தமிழில்

Mulla Shares the Donkey’s Load – கழுதையின் சுமை முல்லா நஸ்ருதீன் கதைகள் தமிழில் :- முல்லா ஒருநாள் தன்னோட வீட்டுக்கு பக்கத்துல இருக்குற காட்டுக்கு போய் சமையல் செய்யுறதுக்கு விறகு சேமிக்க போனாரு

அன்னைக்கு நிறய காஞ்ச மரங்கள் அவர் கண்ணுல பட்டதுனால நிறய விறகுகளை சேமிச்சாரு ,சாயந்தரம் வரைக்கு நிறய விறகு சேமிச்சபிறகுதான் தெரிஞ்சது இன்னைக்கு அளவுக்கு அதிகமா விறகு சேமிச்சத்த புரிஞ்சிக்கிட்டாரு

இத கழுதையோட முதுகுல வச்சு ஊருக்குள்ள போனா அக்கம் பக்கத்தார் வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டாங்க ,எதாவது வீம்புக்கு கேப்பாங்க ,ஏன் கழுதைய கொடும படுத்துறீங்கன்னு வீண் வம்பிழுப்பாங்க,அதே நேரத்துல தான் தலையில அந்த விறகை சுமந்துக்கிட்டு போனா ,தெண்டத்துக்கு எதுக்கு கழுதை வச்சிருக்கீங்க இப்படி கழுத மாதிரி நீங்க பொதி சுமக்கவான்னு கேட்டு சிரிப்பாங்கனு புரிஞ்சிக்கிட்டாரு

புத்திசாலியான முல்லாவுக்கு ஒரு யோசனை வந்துச்சு உடனே ,சேமிச்சு வச்சிருந்த விறகு இல்லத்தையும் ஒரு பெரிய கட்டா கட்டுனாரு , அத தன்னோட தலையில ஏத்திக்கிட்டு அவரும் கழுதை மேல எறிகிட்டு சந்தை வழியா தன்னோட வீட்டுக்கு போனாரு

அப்ப அந்த காட்சிய பார்த்த எல்லாரும் முல்லாவ பார்த்து சிரிச்சாங்க ,ஒன்னு கழுத்த மேல விறகு ஏத்தணும் அப்ப நீங்க சுமை இல்லாம நடந்து போலாம் ,இல்ல நீங்க நடந்து போகணும் கழுதை சுமை இல்லாம வரும் இப்ப எதுக்கு இப்படி பயணம் போறீங்கன்னு கேட்டாங்க

அதுக்கு முல்லா சொன்னாரு நான் என்னோட கழுதைய ரொம்ப நேசிக்கிறேன் அதோட பாரத்தை நானும் பங்கு போட்டுக்கிறேன்னு சொன்னாரு

இதுக்கு மேல யாராலயும் எதுவும் பேச முடியல ,தன்னோட சாதுர்யத்தால வீண் பேச்சு பேசுறவங்க வாய இப்படித்தான் அடைச்சாரு முல்லா நசுருதின்

Exit mobile version