Site icon தமிழ் குழந்தை கதைகள்

முல்லா கதைகள் -தொலைந்துபோன கழுதை -Nasruddin’s Donkey Is Missing

முல்லா கதைகள் -தொலைந்துபோன கழுதை -Nasruddin’s Donkey Is Missing

முல்லா கதைகள் -தொலைந்துபோன கழுதை -Nasruddin’s Donkey Is Missing :- முல்லா தன்னோட வீட்டு உபயோகத்துக்காக ஒரு கழுதைய வளர்த்தாரு,

தன்னோட தேவைகளையும் தொழிலுக்கும் ரொம்ப உபயோகமா இருந்ததால அந்த கழுதைய ரொம்ப பாசமா பாத்துக்கிட்டாரு

எப்பவும் அந்த கழுதை சாப்பிட்டதும் அப்புறம்தான் அவரு சாப்பிடுவாரு ,அப்படி இருக்கிறப்ப ஒருநாள் காலையில முல்லா தன்னோட வாசல்ல உக்காந்துகிட்டு இருந்தாரு ,

அப்பத்தான் கவனிச்சாறு அவரோட கழுதை சத்தத்தையே கேக்கலைனு , உடனே வீட்டுக்கு பின்னாடி போயி கழுதை கட்டி இருந்த இடத்தை பார்த்தாரு ,அங்க கழுதைய காணோம் ,அத கட்டி இருந்த கயிறு அவுந்து இருந்துச்சு

அடடா கழுதைய ஒழுங்கா கட்டாம விட்டுட்டோம் பொலனு நினைச்சாரு ,இத பார்த்த பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரும் அடடா முல்லா பாசமா வளர்த்த கழுத்த இப்படி காணாம போய்டுச்சேனு வருத்தப்பட்டாங்க

அவுங்களும் முல்லாவோட சேர்ந்து கழுதைய தேடிப்பார்த்தாங்க ,எங்க தேடியும் கழுதை கிடைக்கவே இல்ல

அன்னைக்கு சாயந்தரம் டீ கடைக்கு வந்த முல்லா ரொம்ப சந்தோசமா இருந்தாரு ,அத பார்த்த எல்லாரும் என்ன முல்லா காணாம போன கழுதை கிடைச்சுடுச்சான்னு கேட்டாங்க

அதுக்கு முல்லா சொன்னாரு இல்லையே கழுதை கிடைக்கவே இல்லையேன்னு சொன்னாரு

இத கேட்ட எல்லாருக்கும் ரொம்ப ஆச்சர்யமா போச்சு ,இது என்ன பாசமா வளர்த்த கழுதை ஓடி போச்சு ஆனா அத பத்தி யோசிக்காம இப்படி சிரிச்சிகிட்டே உக்காந்து டீ குடிச்சிகிட்டு இருக்கறேன்னு எல்லாரும் அவரையே பார்த்தாங்க

அப்பத்தான் முல்லா சொன்னாரு எனக்கு ரொம்ப சந்தோசம் ,நான் அந்த கழுதை மேல உக்காந்து இருந்தா இப்ப நானும் அந்த கழுதை மாதிரி காணாம போயிருப்பனே , அப்படி இல்லாம வீட்டு திண்ணையில உக்காந்து இருந்ததால இப்ப நான் போலச்சென்னு சொன்னாரு

இத முல்லா நகைச்சுவையா சொன்னாலும் அங்க இருந்த எல்லாருக்கும் அவரு சொல்ல வர்ற கருத்து புரிய ஆரம்பிச்சுச்சு

சும்மா நடந்து முடிஞ்சது நினைச்சு வறுத்த பட்டா மட்டும் எல்லாம் சரியா நடந்துடுமான்னு அவுங்களுக்குள்ளேயே கேட்டுக்கிட்டாங்க ,அன்னையில இருந்து முல்லா மாதிரி ஒவ்வொரு பிரச்னையையும் புன்னகையோடு எதிர்கொண்டு வாழ்க்கையில ஜெயிக்க ஆரம்பிச்சாங்க

Exit mobile version