Mulla in the Dark – இருட்டில் முல்லா :- முல்லா எவ்வளவு பெரிய அறிவாளியா இருந்தாலும் அவரோட மனைவி அவரை மதிக்கவே மாட்டாங்க
எப்ப பார்த்தாலும் முல்லாவ குறை சொல்லிகிட்டே இருந்தாங்க அவுங்க ,என்ன இருந்தாலும் முல்லா புத்திசாலிக்கிறதால ஒவ்வொரு தடவ அவுங்க மனைவி அவருகிட்ட சண்டை போடுறப்ப எல்லாம் நகைச்சுவையா பேசி அவுங்கள சமாளிச்சிகிட்டே இருந்தாரு
ஒருநாள் அவுங்க ரெண்டு பேரும் தங்களோட குடிசையில் தரையில உக்காந்து பேசிகிட்டு இருந்தாங்க ,அப்ப திடீர்னு கரண்ட் போய்டுச்சு ,அன்னைக்கு அமாவாசைகின்றதால ,நிலா வெளிச்சம் கூட அந்த வீட்டுக்குள்ள வரல ,ஒரே இருட்டா இருந்துச்சு
அப்ப அவரோட மனைவி சொன்னாங்க முல்லா நீங்க உக்காந்து இருக்குற இடத்துக்கு இடது பக்கம் இருக்குற பென்ச்ல மெழுகு வர்த்தியும் ,வலது பக்கம் இருக்குற சேர்ல தீப்பட்டியும் இருக்கு அத எடுத்து பொறுத்துங்கனு சொன்னாங்க
மெழுகுவர்த்தி ,தீப்பெட்டி எங்க இருக்குனு தெரிஞ்ச தன்னோட மனைவி அத எடுத்து பொறுத்தாம சோம்பேறி தனமா தன்னை வேலை சொல்றத கேட்டதும் ,முல்லா வுக்கு கோபம் வந்துடுச்சு ,ஆமா எனக்கு இருட்டுல எது இடது ,பக்கம் எது வலது பக்கம்னு தெரியல நீயே போய் மெழுகுவர்த்தி கொளுத்துனு சொன்னாரு
முல்லாவோட சேட்டைய புரிஞ்சிகிட்டு அவரோட மனைவி அங்க இருந்த மெழுகு வர்த்தியையும் தீப்பெட்டியையும் தடவி தடவி எடுத்து பொறுத்துனாங்க ,அந்த நெருப்ப விட கோபத்துல தன்னோட மனைவி கண்ணு சிவந்து இருக்குற பார்த்த முல்லா மெதுவா மெத்தையில படுத்து தூங்க ஆரம்பிச்சுட்டாரு
மறுநாள் காலையில தன்னோட மனைவி என்ன சாப்பாடு செஞ்சு வச்சிருக்காங்கனு பார்த்தாரு முல்லா ,அங்க ரெண்டே ரெண்டு இட்லி மட்டும் இருந்துச்சு ,தன்னோட மனைவி வர வர ரொம்ப கஞ்சத்தனம் செய்யுராங்கனு புரிஞ்சிகிட்ட முல்லா இத உடனே தடுக்கணும்னு நினைச்சாரு
உடனே தன்னோட இடது கண்ணை மூடிக்கிட்டு ,தன்னோட இடது காதுல பஞ்ச வச்சு மறைச்சிகிட்டாரு ,தன்னோட ஒரு காலையும் கையையும் கட்டிக்கிட்டு தொட்டது பக்கம் நொண்டி நொண்டி நடந்தாரு
இதே பார்த்த அவரோட மனைவி ,முல்லா இது என்ன இப்ப எதுக்கு ஒரு கண்ண மூடிக்கிட்டு ,ஒரு காத பொத்திகிட்டு ,ஒரு காலையும் கையையும் கட்டிக்கிட்டு இப்படி நடக்குறீங்கன்னு கேட்டாங்க ,உடனே முல்லா சொல்ல ஆரம்பிச்சாரு , நீ ரெண்டு இட்லி சுட்டு குடும்பத்துக்காக இவ்வளவு சிக்கனமா இருக்குற
உன்னோட புருஷன் நானு இப்பவே ரெண்டு காதையும் ,ரெண்டு கண்ணையும் ,ரெண்டு மூக்கையும் ,ரெண்டு காலையும் ,ரெண்டு கையையும் உபயோகிச்சு வீண் பண்ணுனமான்னு நினைச்சேன் ,முதல்ல இந்த பக்கத்து பகுதியை பயன்படுத்துறேன் ,கொஞ்ச நாளைக்கு அப்புறம் இந்த பகுதியை பயன்படுத்துறேன் ,இதும் சிக்கனம்தானனு கேட்டாரு
அப்பத்தான் முல்லாவோட மனைவிக்கு புரிஞ்சது ,தான் சிக்கனம்கிர பேர்ல கஞ்சத்தனம் செய்ய ஆரம்பிச்சத தன்னோட கணவர் ,தன்ன திட்டாம புரியவந்துட்டாருனு ,அன்னையில இருந்து முல்லாவோட மனைவி கொஞ்சம் சிக்கனத்தை கடை பிடிச்சாலும் தங்களோட தேவைக்கு செய்ய வேண்டிய செஞ்சு கஞ்சத்தனம் இல்லாம வாழ்ந்தாங்க
