Mulla House With Many Windows – முல்லா ஐந்து ஜன்னல் வீடு :-முல்லா தன்னோட புத்திசாலித்தனத்தால ஊர்ல ஏற்படுற சின்ன சின்ன சண்டைகளை யாருடைய மனசு வருத்தப்படாம ஒவ்வொருத்தரும் தான் தான் ஜெயிச்சேன் அப்படின்னு நிலைமையில வச்சு பிரச்சனையை தீர்த்து வச்சுக்கிட்டு இருந்தாரு
அதுவும் கணவன் மனைவிக்குள்ள ஏற்படுற சின்ன சின்ன சண்டைகளை முல்லா தீர்த்து வைக்கிற அழகே தனி அப்படித்தான் ஒரு நாள் அவர் வசிக்கிற கிராமத்துல ஒரு புது தம்பதிகள் வீடு கட்ட ஆரம்பிச்சாங்க
ஒரு நாள் சந்தையில் இருந்து திரும்பி வந்துகிட்டு இருந்த முல்லா அந்த புதுசா வீடு கட்டிக்கிட்டு இருந்த இடத்துல ஏதோ சண்ட நடக்கிறத பார்த்தாரு இது என்ன ஊரே கூடி நின்னு யாரோ சண்ட போடறத பார்க்கிறாங்களே நம்ம போயி என்னன்னு பார்ப்போம் அப்படின்னு சொல்லிட்டு கிட்ட போய் பார்த்தாரு
அங்க போய் பார்த்தா புதுசா வீடு கட்டி கிட்டு இருந்த அந்த தம்பதிகள் அவங்களுக்குள்ளேயே சண்ட போட்டுக்கிட்டு இருந்தாங்க இது என்ன புருஷன் பொண்டாட்டிகுள்ள நடக்கிற சண்டை இவ்வளவு பெருசா போயிருச்சு என்ன பிரச்சனை அப்படின்னு கேட்டாரு முல்லா
அப்பத்தான் அந்த கணவர் சொன்னாரு ஐயா எனக்கு சூட்டு உடம்பு எனக்கு எப்பவுமே நல்ல காத்தும் குளிர்ச்சியான இடமும் தேவை அதனால புதுசா கட்ட போற வீட்டுல நிறைய ஜன்னல் வச்சி காத்தோட்டமா கட்டலாம் வீடு குளிர்ச்சியா இருக்கும் அப்படின்னு சொல்லுறேன் அதை என் பொண்டாட்டி புரிஞ்சுக்கவே மாட்றா அப்படின்னு சொன்னாரு
உடனே அவரோட மனைவி சொன்னாங்க ஐயா எனக்கு குளிரு உடம்பு அதனால கதகதப்பா இருக்கிற வீடு கட்டணும் எனக்கு ஆச,நிறய ஜன்னல் வச்சு வீடு காட்டுனா எனக்கு ஆகாதுனு நினைக்கிறேன் , இத சொன்னா என்னோட புருஷன் புரிஞ்சுக்கவே மாற்றாரு அப்படின்னு சொன்னாங்க
அந்த புருஷன் பொண்டாட்டி சொன்னத கேட்ட கூட்டத்துல இருந்தவங்க எல்லாம் இப்படி ஒரு சங்கடமான நிலைமை யாருக்கும் வரக்கூடாது இந்த வீட்டில் இந்த இரண்டு பேரும் தான் வாழ போறாங்க ,இது ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி மாதிரி வீடு கட்டலாம்னு நினைச்சா அது எப்படி முடியும்
இந்தப் பிரச்சனையை தீர்த்து வைக்குறதுக்கு முல்லாவாழ மட்டும் தான் முடியும், முல்லா அவர்களே இந்த பிரச்சினைக்கு ஏதாவது ஒரு தீர்வு சொல்லுங்க அப்படின்னு சொன்னாங்க
முல்லாவுக்கு காத்தோட்டமான வீடு கட்டுறது தான் சரின்னு பட்டுச்சு அதான் அவரோட மனைவி கிட்ட சொன்னா அவங்க ஒத்துக்க மாட்டாங்க இதை எப்படி கையாளரதுன்னு யோசிச்சாறு அப்பத்தான் அவருக்கு ஒரு புது யோசனை வந்துச்சு
அந்த வீடு கட்டுறவரோட மனைவியை கூப்பிட்டு அம்மா உனக்கு ரொம்ப குளிர் அடிச்சுச்சுனா நீ என்ன செய்வ அப்படின்னு கேட்டாரு அதுக்கு அந்த அம்மா சொன்னாங்க ஜன்னலை மூடிட்டு கதகதப்பா வீட்டுக்குள்ள படுத்துக்குவேன் அப்படின்னு சொன்னாங்க
உடனே முல்லா சொன்னாரு ஒரு ஜன்னல் கதவை மூடுனதுக்கு உங்களுக்கு கதகதப்பான சூழ்நிலை கிடைக்கிறப்ப அஞ்சு ஜன்னல் வச்ச வீடு கட்டி அந்த எல்லா ஜன்னலையும் இருக்க மூடுனா உங்களுக்கு இன்னும் நிறைய சூடு கிடைக்கும் அதனால அஞ்சு ஜன்னல் வச்ச வீடு கட்டுங்க அப்படின்னு சொன்னாரு
இத கேட்ட அந்த புது வீடு கட்டுறவர் மனைவி சரின்னு சொல்லிட்டாங்க அவர்களை பொறுத்த வரைக்கும் அவங்க ரெண்டு பேருமே ஜெயிச்சதா ஆகிப்போச்சு முல்லா தன்னோட புத்தி கூர்மையால அவர்களை லேசா ஏமாத்தினாலும் அவங்களோட பிரச்னைய சுமூகமா முடிச்சு வச்சதனால எல்லாரும் அவர பாராட்டினாங்கள
