Mulla- Different People, Different Paths- முல்லா ஒரே பாதை :– முல்லாவோட துணிச்சலான நகைச்சுவை பேச்சுக்கு அந்த ஊருல வாழ்ந்துகிட்டு வந்தவங்க ரொம்ப ரசிகரா இருந்தாங்க
தேவையில்லாத பிரச்னைய முல்லா எப்படி கையாளுறாருனு எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தாலும் முல்லா அந்த பிரச்சனைகளை தன்னை ஒரு முட்டாள் மாதிரி கட்டிக்கிட்டு அத கடந்து போகிறது எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சி இருந்துச்சு
ஒரு நாள் அவரு வாழ்ந்துகிட்டு இருந்த ஊருல ஒரு வாத்தியார் சின்ன குழந்தைகளுக்கு கதை சொல்லிக்கிட்டு இருந்தாரு ,அத பார்த்த முல்லா தானும் ஒரு மரத்தடியில் உக்காந்து கதை கேக்க ஆரம்பிச்சாரு ,
கதை முடியுரப்ப எல்லாரும் கடவுளோட பாதையான உண்மை பாதையிலேயே நடக்கணும்னு சொல்லி முடிச்சாரு , அத கேட்ட குழந்தைகள் அதுஎப்படி உண்மையின் பாதையில நடக்குறதுனு குழம்பி போச்சுங்க ,சின்ன குழந்தைகளுக்கு குட்டி குட்டி பொழுதுபோக்கு கதைகள் சொல்லாம இப்படி போர் அடிக்கிற கதை சொல்லுறாரே இந்த வாந்தியாருனு நினைச்ச முல்லா அந்த வாத்தியார் கிட்ட கேட்டாரு ,எல்லாருக்கும் வெவ்வேற பாதை இருக்கும் போது எல்லாரும் ஒரே பாதையில போனா அந்த பாதையில கூட்டம் கூடிடுமே எப்படி அந்த பாதையை கடக்க முடியும்னு கேட்டாரு
அப்பதான் முல்லா குழந்தைகளுக்கு சொல்ல வேண்டிய கதை சுருக்கமா எளிமையா இருக்கணும்னு தனக்கு உணர்த்துறாருனு புரிச்சிகிட்டு அங்க இருந்து போய்ட்டாரு
