Site icon தமிழ் குழந்தை கதைகள்

Mulla And The Wool – முல்லாவும் செம்மறி ஆடுகளும்

Mulla And The Wool – முல்லாவும் செம்மறி ஆடுகளும்:-உலக அளவுல புகழ்பெற்று இருந்த முல்லா கிட்ட நிறைய பேர் தங்களுடைய பிரச்சனைய சொல்லி நல்ல தீர்வு வாங்கிட்டு போவாங்க அப்படி ஒரு நாள் முல்லாவோட நண்பர் ஒருத்தர் பக்கத்து ஊர்ல இருந்து முல்லாவை பார்க்க வந்தாரு

முல்லா அவர்களே எனக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனை இருக்கு நான் பக்கத்து ஊர்ல சின்னதா ஒரு தோட்டம் வைத்து இருக்கேன் அந்த தோட்டத்துக்கு பக்கத்திலேயே இன்னொருத்தர் ஒரு தோட்டம் வச்சிருக்காரு அவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருது இந்த சண்டைய எல்லாம் நீங்க தான் தீர்த்து வைக்கணும் அப்படின்னு சொன்னாரு முல்லா பார்க்க வந்த பக்கத்து ஊர் நண்பர்

உடனே முல்லா உங்க ரெண்டு பேருக்கும் எதனால பிரச்சனை வருது இப்ப என்ன பிரச்சனை வந்து என்ன பாக்க வந்தீங்க அப்படின்னு கேட்டாரு அதுக்கு அந்த நண்பர் சொன்னாரு நான் கீரை விவசாயம் செஞ்சு பொழப்பு நடத்திக்கிட்டு இருக்கேன் ஆனா என் பக்கத்து தோட்டத்துக்காரரு நிறைய செம்மறி ஆடுகளை வளர்த்து அதுகளோட ரோமத்தை எல்லாம் வெட்டி ,கம்பளி செய்யுறவங்களுக்கு ரோமத்தை வித்து பணம் சம்பாதிச்சுகிட்டு இருக்காரு

நான் எவ்வளவு பாதுகாப்பா இருந்தாலும் அவரோட தோட்டத்துல வளக்குற செம்மறி ஆடுகள் என்னோட கீரை தோட்டத்துக்குள்ள வந்து முடிஞ்ச அளவுக்கு கீரைகளை தின்னு தீர்த்து போயிருதுங்க என்னால காவலுக்கு வேற ஆட்கள் போடவும் முடியல என்னால 24 மணி நேரமும் காவலும் காக்க முடியல தயவு செஞ்சு எனக்கு ஏதாவது நல்ல ஆலோசனை சொல்லி என்னை காப்பாத்துங்க அப்படின்னு சொன்னாரு முல்லா

உடனே முல்லா சொன்னாரு ஏன் உங்க தோட்டத்துக்கு நீங்க வேலி போட்டு இருக்க வேண்டியதுதானே அப்படின்னு கேட்டாரு அதுக்கு அந்த நண்பர் சொன்னாரு இவ்வளவு பெரிய வேலி போட்டாலும் அந்த செம்மறி ஆடுகள் முரட்டுத்தனமா முட்டி வேலியை சாச்சி விட்டுடுதுங்க . அதனால வேலி போடுறதுனால எந்த பயனும் ஏற்பட போறது இல்ல அப்படின்னு சொன்னாரு

உடனே முல்லா சொன்னாரு நீங்க முழுசும் மறைச்சு வேலி போடாம சின்ன சின்ன இடைவெளி விட்டு செம்மறி ஆடு போற அளவுக்கு இடைவெளி விட்டு முள் கம்பிகளை வைத்து வேலி போடுங்க அப்படின்னு சொன்னாரு

வேலி போடறது செம்மறி ஆடுகள் உள்ள வரக்கூடாதுன்னு தான் , ஆனா நீங்க செம்மறி ஆடு போயிட்டு வர அளவுக்கு இடைவெளி விட்டு வேலி போட சொல்றீங்க ஏன் அப்படின்னு கேட்டாரு அந்த நண்பர் அப்பத்தான் முல்லா சொன்னாரு உங்களோட விவசாய பொருட்கள் நஷ்டமாவதை பற்றி உங்க பக்கத்து தோட்டத்து காரர் நினைக்காத போது அவரோட வியாபாரத்துல நஷ்டம் ஏற்பட்டா தான் உங்களோட வலி அவருக்கு புரியும் அப்படின்னு சொன்னாரு

உடனே அந்த நண்பர் கேட்டாரு அதுக்கும் இடைவெளி விட்டு வெளிய கட்டுவதற்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு கேட்டாரு ,முல்லா அப்பதான் தன்னோட திட்டத்த விளக்கமா சொன்னாரு, செம்மறி ஆடு போயிட்டு வர அளவுக்கு இடைவெளி விட்டு வேலி போட்டீங்கன்னா எல்லா செம்மறி ஆடும் அந்த இடைவெளி வழியா அங்கிட்டு இங்கிட்டு போயிட்டு வரும், அப்ப அதோட ரோமங்களை புடுங்குற அளவுக்கு முள்வேலியில் சுத்தி வச்சிருந்தீங்கன்னா அதோட ரோமங்கள் எல்லாம் அந்த கம்பிகள்ளை மாட்டிக்கும்,

நீங்க கீரை விவசாயதுல தினமும் கீரையை ஆய்வீங்க அதே மாதிரி தினமும் அந்த வேலியில ஒட்டி இருக்கிற ரோமங்களை சேர்த்து வச்சீங்கன்னா நல்ல விலைக்கு விற்கலாம் , கம்பலிக்காக செம்மறியாடு வளர்க்க அவர விட நீங்க தான் நிறைய சம்பாதிப்பீங்க அப்படின்னு சொன்னா

இத கேட்டு சந்தோஷப்பட்டு போன அந்த நம்பர் நேரா தன்னோட தோட்டத்துக்கு போயி முல்லா சொன்ன படி வேலி அமைச்சாரு முல்லா சொன்ன மாதிரியே தினமும் நிறைய செம்மறி ஆட்டோட ரோமங்கள் அந்த வேலியில ஒட்டிக்கிட்டு இருந்துச்சு அதை எல்லாம் எடுத்து சேர்த்து வைத்த முல்லாவோட நண்பர் அதை கம்பளி செய்யிறவங்களுக்கு வித்து நிறைய பணம் சம்பாதிச்சாரு

இத பாத்த பக்கத்து தோட்டத்துக்காரர் என்ன செய்வது என்று தெரியாமல் முழிச்சாரு,அடுத்தவரோட தொட்டது கீரை வீணா போறத நினைச்சு கொஞ்சம் கூட வறுத்த படாம இருந்த நமக்கு சரியான தண்டனை கிடைச்சுடுச்சுனு நினைச்சாரு , அதுக்கப்புறம் தன்னுடைய செம்மறி ஆடுகளை முறையா பட்டியடிச்சு பாதுகாப்பா வியாபாரம் பண்ணுனாரு

Exit mobile version