Mulla and the Wealthy Merchant- முல்லாவும் பணக்கார வியாபாரியும் :- சந்தையில வியபாரம் செஞ்சு தன்னோட வாழ்க்கைய வாழ்ந்துகிட்டு வந்த முல்லா சாதாரண வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு வந்தாரு
படோபடமான வாழ்க்கை அவருக்கு பிடிக்கல ,அதனால ஒரு சாதாரண குடிசை வீட்டுல வாழ்ந்துகிட்டு வந்தாரு முல்லா ,ஒருநாள் பக்கத்து ஊரு சந்தைக்கு போயி வியாபாரம் செஞ்ச முல்லா சாயந்தரம் ஆனதும் மிச்சம் இருக்குற பொருட்கள் எல்லாத்தையும் தன்னோட கழுதை மேல ஏத்திக்கிட்டு காட்டு வழியா தன்னோட வீட்டுக்கு நடந்து போனாரு
அப்ப அங்க வியாபாரம் செஞ்சுகிட்டு இருந்த ஒரு பணக்கார வியாபாரி தன்னோட குதிரையில பொருட்களை ஏத்திக்கிட்டு நடந்து வந்தாரு ,அந்த காட்டு வழியில தனியா நடந்து போறது ஆபத்து எப்ப வேணும்னாலும் திருடராகள் வரலாம்னு நினைச்ச அவரு யாராவது துணைக்கு வருவங்களானு பார்த்தாரு
அப்பதான் முல்லா தன்னோட கழுதைய இழுத்துகிட்டு நடந்து வர்றத பார்த்தாரு ,உடனே முல்லா கூட சேர்ந்து பயணம் போகலாம்னு நினைச்சாரு ,உடனே முல்லா கிட்ட பேச்சு கொடுத்தாரு ,நல்ல மனநிலையில இருந்த முல்லாவும் அந்த பணக்காரர் கூட சேர்ந்து நடக்க ஆரம்பிச்சாரு
கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் பேசிகிட்டு நடந்தாங்க ,அப்பத்தான் முல்லா உணர்ந்தார் இந்த பணக்காரர் ரொம்ப திமிர் பிடிச்சவரா இருக்காரு ,தன்னோட பணத்துனாலயும் அவருக்கு திமிர் இருக்கு அதனால தன்னை மட்டம் தட்டி பேசுராருங்கிறத புரிஞ்சிக்கிட்டாரு
அப்பதான் அந்த பணக்காரர் சொன்னாரு என்ன பெரியவரே இவ்வளவு சுமாரான துணியில குர்தா தச்சு போட்டு இருக்கீங்க ,என்ன பாருங்க பட்டு துணியில குர்தா போட்டு இருக்கேன்னு சொன்னாரு ,இத கேட்ட முல்லா என்னோட சம்மதியத்துல இது எனக்கு போதும்னு சொன்னாரு
உடனே அந்த பணக்காரர் சொன்னாரு எதுக்கு கழுதைய கட்டி வளக்குறீங்க என்ன பாருங்க நான் என்னோட வியாபாரத்துக்கு குதிரை வச்சிருக்கேன் இது எனக்கு ரொம்ப உபயோகமா இருக்கு ,நீங்க ஏன் குதிரை வாங்க கூடாதுனு கேட்டாரு ,இத கேட்ட முல்லாவுக்கு தோணுச்சு இது பணக்கார தனம் இவருகிட்ட பேசி இனி ஒன்னும் ஆக போறது இல்லைனு நினைச்சு அமைதியா நடக்க ஆரம்பிச்சாரு
அப்ப திடீர்னு ஒரு திருடர்கள் கூட்டம் அங்க வந்துச்சு ,உடனே ரெண்டு பேரும் ரொம்ப பயந்து போனாங்க ,அப்பதான் அங்க வந்த திருடர்கள் முல்லாவயும் அந்த பணக்காரரையும் பார்த்தது முல்லாவ விட்டுட்டு அந்த பணக்காரர மட்டும் கொள்ளையடிச்சாங்க
அவரு கிட்ட இருந்த குதிரையை புடிங்கிட்டு ,அவர் வச்சிருந்த பெட்டியில இருந்த பணத்தையும் பிடிங்கிட்டாங்க ,தொடந்து அவரோட பட்டு சட்டையை கூட கழட்ட சொல்லி புடிங்கிகிட்டு போய்ட்டாங்க
ரொம்ப சோகமா நடக்க ஆரம்பிச்சாரு அந்த பணக்கார வியாபாரி ,அப்பதான் முல்லா சொன்னாரு நீங்க ரொம்ப பண திமிரு பிடிச்சவரா இருக்கீங்க அதனால தான் பட்டு சட்ட போட்டு கிட்டு வியாபாரம் செய்ய வந்தீங்க ,நிறய பணத்தையும் குதிரையையும் கூட்டிகிட்டு வந்து உங்கள விட வசதி குறைஞ்சவங்கள மட்டம் தட்டுறீங்க
இப்ப பாருங்க உங்களோட பணம் திருடர்களை தான் ஈர்த்து இருக்கு , இனிமேலாவது உங்க பணத்தை வச்சு அடுத்தவங்கள குறை சொல்லாதீங்கனு சொன்னாரு ,இத கேட்ட அந்த பணக்காரர் முல்லா சொல்லுறது 100 சதவீதம் உண்மைன்னு புரிஞ்சிகிட்டு அமைதியா நடந்தாரு
