Site icon தமிழ் குழந்தை கதைகள்

Mulla and the Tailor – திமிர் பிடித்த தையல் காரர் முல்லா கதை

Mulla and the Tailor – திமிர் பிடித்த தையல் காரர் முல்லா கதை :- முல்லா எப்பவும் சந்தைக்கு போய் வியாபாரம் செய்யுறது வழக்கம் ,அந்த சந்தையில யாராவது சண்ட போட்டா முல்லா தன்னோட புத்தி கூர்மனால அத எல்லாத்தையும் தீர்த்து வைப்பாறு

ஒருநாள் சந்தையில அவர் வியாபாரம் செஞ்சுகிட்டு இருக்கிறப்ப அங்க புதுசா ஒரு தையல் கடை காரர் வந்து கடை வைக்கிறத பார்த்தாரு , அந்த தையல் கடை காரர் வெளி நாட்டுல வேலை செஞ்சு நிறைய பேர் புகழ் சம்பாதிச்சவருனு எல்லாரும் பேசிக்கிட்டாங்க

அது மாதிரியே அந்த தையல் கடை காரார் ரொம்ப திமிர் தனமா நடந்துக்கிட்டாரு ,அவரு கிட்ட துணி தைக்க வந்தவங்க கிட்ட கூட தன்னோட பெருமைகளை எல்லாம் சொல்லி அவுங்கள மட்டம் தட்டி பேசுறது அவரோட வழக்கமா இருந்துச்சு

ஒருநாள் அந்த தையல் கடை வழியா அவர் நடந்து போறப்ப ஒரு பாட்டி அங்க நின்னு சண்டை போட்டுக்கிட்டு இருந்துச்சு ,நான் சொன்னா மாதிரி தச்சு கொடுக்குறது தான் உன்னோட வேல ,அத விட்டுட்டு ஏதோ புது டிசைனு இப்படி தச்சு வச்சிருக்க ,ஏன் இப்படி தச்சனு கேட்டு சண்ட போட ஆரம்பிச்சாங்க

இத பார்த்த முல்லா எதிர்த்தாப்புல இருக்குற டீ கடையில ஒரு டீ வாங்கி கிடிச்சிகிட்டே என்ன நடக்குதுன்னு பார்த்தாரு ,அப்பதான் அந்த தையல் கடைக்காரர் சொன்னாரு ,நீ எல்லாம் எப்பவும் பட்டிக்காடு மாதிரி துணி போடுறவ ,உனக்கு நல்ல வெளிநாட்டு டிசைன்ல தச்சு கொடுத்து இருக்கேன் ,இதுக்கு நீ நிறைய காசு கொடுக்கணும்

நான் இந்த உலகத்துல இருக்குற எல்லா ஊருக்கும் போயி துணி தச்சு ,பேரும் புகழும் சம்பாதிச்சவன் ,என்ன சாதாரண கிராமத்துல வாழுற நீ திட்டுரியான்னு கேட்டு சண்டை போட்டான் அந்த தையல் காரன் ,ஒன்னும் பேச முடியாம அங்க இருந்து போய்ட்டாங்க அந்த பாட்டி

அப்பத்தான் முல்லாவுக்கு தோணுச்சு இந்த ஆள் ரொம்ப திமிர் பிடிச்சவனா இருக்கான் இவன எப்படியாச்சும் முட்டாளாக்கி , ஊர் ஜனங்க இவன பார்த்து சிரிக்கிற மாதிரி செய்யணும்னு முடிவு செஞ்சாரு ,உடனே பக்கத்துல இருக்குற துணி கடைக்கு போயி தனக்கு ஒரு பேண்ட் துணி எடுத்தாரு

அத எடுத்துக்கிட்டு நேரா அந்த திமிர் பிடிச்ச துணி கடைக்காரர் கிட்ட வந்து கொடுத்து தனக்கு பேண்ட் தைக்க சொன்னாரு ,உடனே அந்த துணி கடை காரர் தன்னோட பெருமைகளை சொல்ல ஆரம்பிச்சாரு ,ஐயா உங்களுக்கு எப்படி தைக்கணும் நான் துணி தச்சு கொடுத்தா இந்த ஊருலயே நீங்கதான் அழகா தெரியுவீங்க

அதுமாதிரி தைக்கவா ,இல்ல இதுமாதிரி தைக்கவான்னு கேட்டு பேசிக்கிட்டே இருந்தாரு ,முல்லாவோட நையாண்டி சேட்டைகளை எல்லாம் ஏற்கனவே தெரிஞ்சிருந்தா கிராம மக்கள் முல்லா இப்ப என்ன செய்ய போறாருனு ஆவலோடு பார்த்துகிட்டு இருந்தாங்க

அப்பதான் முல்லா கேட்டாரு ,ஆமா முழு பேண்ட் தைக்க எவ்வளவு ,அரைக்கால் டவுசர் தைக்க எவ்வளவுன்னு கேட்டாரு , அதுக்கு அந்த தையல் கடைக்காரர் சொன்னாரு ,பேண்ட் தைக்க 20 ரூபா ,அரைக்கால் டவுசர் தைக்க அஞ்சு ரூபானு சொன்னாரு

இத கேட்ட முல்லா சொன்னாரு எனக்கு பேண்ட் தைக்க வேணாம் அரை கால் டவுசர் மட்டும் தைச்சி கொடுங்கன்னு சொன்னாரு ,உடனே அந்த தையல் காரர் அதுக்கும் ஒரு கதையை சொல்லி அப்படி தைக்கவா இப்படி தைக்கவான்னு கேட்டாரு

ஆனா முல்லா சொன்னாரு நீ எப்படி வேணும்னாலும் தச்சு கொடு ஆனா அரைக்கால் டவுசர் இரக்கம் மட்டும் என்னோட பாதம் வரைக்கு இறக்கி தச்சு கொடுன்னு சொன்னாரு ,அடடா அவ்வளவு இரக்கம் வச்சா அது பேண்ட் ஆகிடுமே ,இது என்ன இந்த ஆள் நம்மள மடக்கிட்டானேன்னு நினைச்ச தையல் கடைக்காரர் முழிச்சாரு

இத பார்த்த எல்லாரும் அப்படி போடு ,முல்லா தற்பெருமை பேசி அடுத்தவங்களை மட்டம் தட்டுன தையல் கடைக்காரர முட்டாளாக்கிட்டாருனு சொல்லி சிரிச்சாங்க ,அன்னையில இருந்து அந்த தையல் கடைக்காரர் கிட்ட எல்லாரும் தைரியமா பேச ஆரம்பிச்சாங்க

Exit mobile version