Mulla and the Milkman – ஆட்டு பால் மாட்டு பால் முல்லா கதைகள் :- முல்லா ஒருநாள் தான் வாழ்ந்துகிட்டு இருந்த தெருவுல நடந்து போய்கிட்டு இருந்தாரு
அப்ப ஒரு பால் காரர் பால் வித்துக்கிட்டு இருந்தாரு ,அத எல்லாரும் வரிசையில நின்னு வாங்கிகிட்டு இருந்தாங்க ,இத உத்து பார்த்த முல்லா வேகமா வீட்டுக்கு ஓடுனாரு
ஒரு பெரிய பாட்டில எடுத்துக்கிட்டு வந்து எனக்கு பத்து லிட்டர் மாட்டுப்பால் வேணும்னு சொன்னாரு ,உடனே அந்த பால் காரர் முல்லா நீங்க கொண்டு வந்திருக்கிற பாட்டில் ஒரு லிட்டர் பால் தான் பிடிக்கும் இதுல எப்படி 10 லிட்டர் பால் ஊத்த முடியும்னு கேட்டாரு
உடனே கொஞ்ச நேரம் யோசிச்ச முல்லா அப்ப 10 லிட்டர் ஆட்டு பால் ஊத்து ,அது சின்ன மிருகம்தான அது கண்டிப்பா இந்த பாட்டில்ல சரியா இருக்கும்னு சொன்னாரு
இத கேட்ட அவருக்கு பின்னாடி நின்னுக்கிட்டுருந்தவங்க அடடா இது என்ன இந்த ஆழ எல்லாரும் புத்திசாலின்னு சொல்றாங்க ,ஆனா இப்படி முட்டாள் தனமா பேசுறாரேன்னு சந்தேகத்தோட பார்த்தாங்க
பால் காரர் சொன்னாரு ஐயா ஆட்டு பாலோ மாட்டு பாலோ அளவு ஒண்ணுதான் , ஆட்டு பால் மாட்டு பால விட கம்மியா இருக்காதுன்னு சொன்னாரு
அப்பத்தான் முல்லா சொன்னாரு , அப்ப முதல்ல மாட்டுப்பால் ஒரு லிட்டர் ஊத்துக்கு ,அடுத்து ஆட்டுப்பால் ஊத்துங்க , எது அளவு கம்மியா இருக்கும்னு பாத்துரலாம்னு சொன்னாரு
இத கேட்டதுக்கு அப்புறம்தான் பால் காரர் முகத்துல பயம் வந்துச்சு ,முல்லா எதுக்கு இப்படி எல்லாம் செய்யுறாருனு அவருக்கு புரிச்சிச்சு ,1 லிட்டர் மாட்டு பால் அந்த பாட்டில ஊத்துனதும் ,அது அளவு ரொம்ப கம்மியா காட்டுச்சு ,அப்பத்தான் எல்லாருக்கும் புரிச்சிச்சு ,
இந்த பால்காரர் கம்மியான அளவு பால் ஊத்தி நம்மள ஏமாத்திகிட்டு இருந்துருக்காருனு ,எல்லாரும் அந்த பால் காரரை அடிக்க தொரத்திக்கிட்டு ஓடுனாங்க
