Site icon தமிழ் குழந்தை கதைகள்

Mulla and the Hooligan – முல்லாவும் சேட்டைக்கார சிறுவனும்

Mulla and the Hooligan – முல்லாவும் சேட்டைக்கார சிறுவனும் :-முல்லாவுக்கு சின்ன பிள்ளைகளோடு விளையாடுறது ரொம்ப பிடிக்கும் ,ஆனா சேட்டை செய்யுற பிள்ளைகளை பார்த்தா அவருக்கு கோபமா வரும்

வாய் சொல்லால குறும்பு செய்யுற குழந்தைகளை திருத்துவாரு அப்படி அதுக்கும் மீறி அடம்பிடிச்சு ,குறும்பு செய்யுற பிள்ளைகளை தன்னோட பாணியில வேற பிரச்னையில மாட்டி விடுறது முல்லாவோட வழக்கம்.

அப்பதான் ஒரு பணக்கார குடும்பம் முல்லாவோட வீட்டுக்கு பக்கத்துல குடி வந்தாங்க ,அவுங்க நிறைய வசதியோடு இருந்ததால குதிரை வண்டி ,மாட்டு வண்டினு எல்லாமே வச்சு இருந்தாங்க ,அந்த பணக்காரருக்கு ஒரு சுட்டி பையன் இருந்தான் ,அவனோட அப்பா பணக்காரர் அப்படிங்கிற நினைப்புலயே நிறய தப்பு செஞ்சான் அந்த பையன்

அடுத்தவங்களோட பொருட்களை உடைக்கிறது ,மூத்தவங்கள வா போனு பேசுறது ,வயசானவங்களுக்கு தொந்தரவு கொடுக்குறதுனு நிறய சேட்டை செஞ்சான் ,இத எல்லாம் பார்த்த முல்லாவோட மனைவி முல்லா கிட்ட புதுசா வந்திருக்குற பையன் ரொம்ப சேட்டை செய்யுறான் ,அவுங்க அப்பா பெரிய வசதியோடு இருக்காரு ,அவன் உங்க கிட்ட எதுவும் சேட்ட செஞ்சா தயவு செஞ்சு அவன அடிச்சிடாதீங்கன்னு சொன்னாங்க

இத கேட்ட முல்லாவுக்கு அம்புட்டு சேட்டை செய்யுற அவன பார்க்கணும்னு நினைச்சாரு ,ஒரு நாள் முல்லா அவரோட கழுதையை குளிப்பாட்டிக்கிட்டு இருந்தாரு அப்ப ஒரு பெரிய கல் வந்து கழுதை மேல விழுந்துச்சு உடனே கழுத துள்ளி குதிச்சுச்சு ,உடனே திரும்பி பார்த்த முல்லாவுக்கு முன்னாடி அந்த சேட்டைக்கார பையன் நின்னுகிட்டு இருந்தான்

முல்லாவுக்கு ரொம்ப கோபம் வந்துச்சு ,இருந்தாலும் அவரோட மனைவி அவனை அடிச்சிடாதீங்கன்னு சொன்னதால அமைதியா வேற பக்கம் போய் விளையாடு தம்பின்னு சொன்னாரு ,சொல்லிக்கிட்டு இருக்கும் போதே அந்த பையன் இன்னொரு கல்லெடுத்து கழுதை மேல எறிஞ்சான் ,இப்ப அந்த கல் சரியா கழுதையோட முகத்துல பட்டுச்சு ,இப்ப கழுதை வலியில கனைக்க ஆரம்பிச்சுச்சு

இந்த தடவ முல்லா கோப படாம சிரிச்சாரு ,அந்த பையனுக்கு ஒன்னும் புரியாம முழிச்சான் ,அப்பதான் முல்லா சொன்னாரு சூப்பர் தம்பி எப்படிடா இவ்வளவு துள்ளியமா குறிபார்த்து அடிக்குறன்னு கேட்டாரு ,அதுக்கு அந்த பையன் ஒன்னும் சொல்லாம இருந்தான்

உடனே முல்லா ஒரு கல்ல எடுத்து அந்த பையன் கிட்ட கொடுத்து எங்க அங்க இருக்குற குதிரையோட தலையில குறி பார்த்து எரி பார்க்கலாம்னு சொன்னாரு ,உடனே அந்த பையனும் சரியா அந்த குதிரையோட தலையில கல்ல எறிஞ்சான் ,கல் பட்டதும் குதிரை துள்ளி குதிச்சு ஓட ஆரம்பிச்சுடுச்சு ,இத பார்த்த அந்த வீட்டுல இருந்த எல்லாரும் குதிரைய பிடிக்க ஓடுனாங்க

அப்பத்தா அந்த பையனோட அப்பா வந்து ஒரு குச்சிய எடுத்து நாலு அடி அடிச்சாரு அவனை ,அழுதுகிட்டே அந்த பையன் முல்லாவ பார்த்தான் ,தன்னோட நோக்கம் நிறைவேறின சந்தோஷத்துல இருந்த முல்லா அவனுக்கு பழிப்பு காட்டுனாரு

Exit mobile version