Site icon தமிழ் குழந்தை கதைகள்

Mulla and the Grapes – முல்லா குழந்தைகள் கதை

Mulla and the Grapes – முல்லா குழந்தைகள் கதை :- முல்லா எல்லாரு கிட்டயும் சண்டையும் சச்சரவும் செய்யுற மாதிரி அவரோட மனைவி கிட்டயும் அப்ப அப்ப செல்ல சண்டை போடுவாரு

முல்லாவோட மனைவி எவ்வளவு உஷாரா இருந்தாலும் அவுங்களை தன்னோட புத்திசாலி தனத்தை பயன்படுத்து முட்டாளாக்கி சிரிச்சு கிட்டே இருந்தாரு முல்லா

ஒருநாள் சந்தையில இருந்து வர்ற வழியில ஒரு திராட்சை தோட்டத்தை பார்த்தாரு முல்லா ,உடனே அந்த விவசாயி கிட்ட கொஞ்சம் காசு கொடுத்து கொஞ்சம் திராட்சை வாங்கிகிட்டு வீட்டுக்கு வந்தாரு முல்லா

அன்னைக்கு காலையிலதான் அவுங்க வீட்டுல ஒரு சின்ன சண்டை நடந்துச்சு ,முல்லாவோட மனைவி ஒரு முட்டையை அவிச்சி சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க ,

சந்தைக்கு போற அவசரத்துல இருந்த முல்லா எனக்கு லேசா பசிக்குது எனக்கு கொஞ்சம் கொடுன்னு கேட்டாரு

உடனே முல்லாவோட மனைவி முழு முட்டையையும் வாய்க்குள்ள போட்டுட்டு பழிப்பு கட்டுண்ணங்க ,இத பார்த்து கோபமான முல்லா ஒன்னும் பேசாம வீட்டை விட்டு வெளிய வந்துட்டாரு

திராட்சை வாங்கிகிட்டு வந்த முல்லா தன்னோட மனைவிக்கு முன்னாடி உக்காந்து மெதுவா திங்க ஆரம்பிச்சாரு ,முல்லாவோட மனைவிக்கும் திராட்சை சாப்பிடணும் போல இருந்துச்சு

முல்லா கிட்ட திராட்சை கொடுன்னு கேட்டா காலையில நடந்த விஷயத்தை வச்சு கொடுக்க மாட்டாருனு அவுங்களுக்கு தெரிஞ்சது ,உடனே முல்லா திராட்சை சாப்பிடறத பார்க்காத மாதிரி சுவைத்து பக்கம் திரும்பி உக்காந்து கிட்டாங்க

இருந்தாலும் அவுங்களுக்கு திராட்சை சாப்பிடணும்னு ரொம்ப ஆசையா இருந்துச்சு ,உடனே முல்லா இந்த திராட்சை புலிக்குதா இனிக்குதான்னு கேட்டாங்க ,உடனே முல்லா நல்லா இனிக்குதுனு சொன்னாரு

உடனே அப்படியா எனக்கு கொஞ்சம் கொடுங்க நானும் அது எப்படி இனிக்குதுனு சாப்பிட்டு பார்த்து சொல்றேன்னு சொன்னாங்க ,அதுக்கு முல்லா சிரிச்சிகிட்டே ஒரு திராட்சையை எடுத்து அத ரெண்டா பிச்சு ஒரு பகுதியை மட்டும் அவரோட மனைவிக்கு கொடுத்தாரு

உனக்கு திராட்சை எவ்வளவு இனிப்பை இருக்குனு தெரிஞ்சிக்கிடனும் அவ்வளவு தான ,இந்த ஒரு திராட்சையை வச்சு இந்த திராட்சை எல்லாம் எவ்வளவு இனிப்பா இருக்குனு தெரிஞ்சுக்கனு சொன்னாரு

சும்மாவே சண்டை போடுற இந்த ஆளு கிட்ட இனி பேசி புரயோஜனம் இல்லைனு அங்க இருந்து எழுந்திரிச்சி போய்ட்டாங்க அவரோட மனைவி

Exit mobile version