Site icon தமிழ் குழந்தை கதைகள்

Mulla and the Boar-Busting Boaster – முல்லாவும் காட்டு பன்னியும்

Mulla and the Boar-Busting Boaster – முல்லாவும் காட்டு பன்னியும் :-முல்லா வசிச்சி கிட்டு வந்தது ஒரு காட்டுப் பகுதிக்கு பக்கத்துல இருக்கிற கிராமம் அதனால அடிக்கடி காட்டு மிருகங்கள் அந்த கிராமத்துக்குள் வந்து விவசாய நிலங்களை தோண்டி போட்டு தொந்தரவு செஞ்சுக்கிட்டே இருந்துச்சுங்க

கொஞ்ச நாளா காட்டுப்பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமா காட்டு பன்னிங்க வந்து விவசாயம் நிலத்தை தோண்டி விவசாயம் செய்ய நட்டு வச்சிருந்த செடிகளையும் ,வேலிக்காக வச்சிருந்த செடிகள் எல்லாத்தையும் வீணாக்கிக்கிட்டே இருந்துச்சுங்க

இதைப் பார்த்த கிராம மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அந்த ஊர் காவல்காரர் கிட்ட போயி எங்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்க இப்படி தினமும் காட்டு பன்னி வந்துகிட்டே இருந்துச்சுன்னா எங்களால் முறையா விவசாயம் செய்ய முடியாது அப்படின்னு சொன்னாங்க

அதுக்கு அந்த காவல்காரர் சொன்னாரு இதை தடுக்கிறது ரொம்ப கஷ்டம் இருந்தாலும் நான் முயற்சி செய்றேன் சாயந்திரம் வேலையில காட்டுக்குள் கிராமத்துக்கு நடுவுல இருக்கிற மண் பாதையில போயி காட்டு பன்னிங்க ஏதாவது வந்துச்சுன்னா துப்பாக்கியால சத்தம் செஞ்சு அதுங்கள எல்லாம் விரட்ட முயற்சி பண்றேன் ஆனா எனக்கு யாராவது ஒருத்தராவது துணைக்கு வாங்க என்னால தனியா போக முடியாது அப்படின்னு அந்த காவல் அதிகாரி சொன்னாரு

அப்பத்தான் முல்லா மேல ரொம்ப நாளா கோவத்துல இருந்த ஒருத்தர் பேச ஆரம்பிச்சாரு இந்த ஊரிலயே உலகப் புகழ்பெற்ற புத்திசாலி தைரியசாலி உலக மகா கெட்டிக்காரர் நம்ம முல்லாதான் அவர் கூட்டிட்டு போங்க ஊர் மக்களுக்கு ஒண்ணுன்னா தன்னுடைய பேச்சாளையே எல்லாத்தையும் சரிசெய்ய முல்லாவாள தான் முடியும் ,அவரு தன்னோட திறமையை இதுலயும் காட்டட்டும் அப்படின்னு சொன்னாரு அந்த வியாபாரி

இதைக் கேட்ட முல்லாவுக்கு புரிஞ்சு போச்சு இந்த பொறாமை புடிச்ச ஆளு நம்மள எப்பயாவது சிக்கல்ல மாட்டணும்னு ரொம்ப நாளா காத்துக்கிட்டு இருந்தாரு இன்னைக்கு சரியான நேரம் வந்தஉடனையும் நம்மள மாட்டி விட்டுட்டாரு அப்படின்னு நினைச்சாரு முல்லா

எல்லாரும் முன்னாடியும் இப்படி ஒரு போட்டி வந்ததால முல்லா மக்களோட நலனுக்காக அதை தட்டிக் கழிக்க முடியல மறுநாள் அந்த காவல் அதிகாரிகளுடன் சேர்ந்து காட்டுப் பகுதி ஆரம்பிக்கிற இடத்துல இருக்குற மண்பாதையில போய் காவலுக்கு இருந்தாரு முல்லா,பாதுகாப்புக்கு அந்த காவலர்கள் இருந்தாலும் முல்லா தூங்காம உண்மையாவே காவல் காத்தாரு

ராத்திரி முழுசும் காவல் இருந்த முல்லா மறுநாள் காலையில தன்னோட வீட்டுக்கு வந்தாரு அப்பதான் அவர இந்த சிக்கல்ல இழுத்து விட்ட வியாபாரி முல்லாவ பார்த்தாரு என்ன முல்லா உங்களுடைய வேட்டை எல்லாம் எப்படி போச்சு அப்படின்னு கேட்டாரு

ரொம்ப நல்லா போச்சு அப்படின்னு சொன்னாரு முல்லா அதுக்கு அந்த வியாபாரி ஏதாவது காட்டு பன்னிய சுட்டுக்கொன்னிங்களா அப்படின்னு கேட்டாரு

அதுக்கு முல்லா இல்லையே நான் எந்த காட்டுப் பன்னியயும் கொல்லலயே அப்படின்னு சொன்னாரு, அதுக்கு அந்த வியாபாரி ஏதாவது காட்டுப் பன்னிய வலை வச்சு பிடிக்கவாவது செஞ்சீங்களா அப்படின்னு கேட்டாரு அதுக்கு திரும்பவும் முல்லா இல்லையே எந்த காட்டு பன்னியையும் நாங்க பிடிக்கவும் இல்லை ஒன்னும் செய்யவும் இல்ல அப்படின்னு சொன்னாரு

உடனே அந்த வியாபாரி காட்டுப் பன்னிய பார்க்கவாவது செஞ்சீங்களா அப்படின்னு கேட்டாரு அதுக்கு முல்லா இல்லையே நாங்க எந்த காட்டுப் பன்னியயும் பார்க்க கூட இல்லை அப்படின்னு சொன்னாரு

இதைக் கேட்ட அந்த வியாபாரி அப்ப ராத்திரி முழுசும் என்னதான் செஞ்சீங்க அப்படின்னு கேட்டாரு அந்த ஆளு , அப்பத்தான் முல்லா சொன்னாரு எங்க ஊர்ல பெரிய வாய் வைச்சிருக்கிற ஒருத்தர் இருக்காரு நீ காட்டுப்பகுதியில இருந்து கிராமத்துக்குள்ள வந்தேனா அவர் வாய்க்குள்ள விழுந்துருவ அதனால பாதுகாப்பா இருந்துக்க அப்படின்னு சத்தம் போட்டு சொல்லிட்டு வந்துட்டோம் அதனாலதான் நேத்து எந்த காட்டு பன்னியும் கிராமத்துக்குள்ள வரல அப்படின்னு சொன்னாரு

இத்தனை நாள் தன்னை மறைமுகமாக கிண்டல் பண்ணிக்கிட்டு இருந்தாரு இந்த முல்லா ,ஆனா இன்னைக்கு நம்மல நேருக்கு நேரா கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டாரு அப்படின்னு சொல்லிட்டு அங்கிருந்து மெதுவா நடக்க ஆரம்பிச்சாரு அப்பத்தான் முல்லா சத்தம் போட்டு சொன்னாரு உங்களோட அருமை பெருமை எல்லாம் இப்பதான் புரிஞ்சிச்சு வியாபாரி

உங்க வாய பத்தி சொன்னதுக்கே காட்டு பன்னிங்க எல்லாம் காட்டை விட்டு வெளியே வராம இருந்துச்சுங்க அதனால இன்னைக்கு இருந்து நீங்களே தினமும் அந்த காட்டுப்பகுதிக்கு காவலுக்கு போங்க ,அதைக் கேட்ட அந்த வியாபாரி அடடா முல்லா தன்னை காவல்கார பனிசெய்ய விட பாக்குறாரு இதிலிருந்து எப்படியாவது தப்பிச்சு ஓடணும்னு நினைச்சிட்டு எனக்கு தான் வேட்டை எதுவும் தெரியாதே எனக்கு உங்கள மாதிரி திறமையும் கிடையாது அதனால என்ன விட்டுடுங்க அப்படின்னு சொன்னாரு

அதுக்கு முல்லா சொன்னாரு நீங்க ஒன்னும் வேட்டையாடி எல்லாம் ஒன்னும் கிழிக்க வேணாம் உங்க வாய காமிச்சுக்கிட்டு இருங்க உங்க வாய பார்த்தாலே காட்டு மிருகங்கள் இல்ல காட்டுப்பன்னி இல்ல ஊருக்குள்ள எந்த மிருகமும் வராது அப்படின்னு சொன்னாரு

இதைக் கேட்டு அக்கம் பக்கத்தில் நின்னுகிட்டு எல்லாரும் வாய்விட்டு சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க முல்லாவை மாட்டி விடணும்னு நினைச்ச அந்த வியாபாரிக்கு மானமே போயிருச்சு

Exit mobile version