Site icon தமிழ் குழந்தை கதைகள்

Mulla – 2 minute bedtime stories – மாமியார் மருமகள் சண்டை – முல்லா கதை

Mulla – 2 minute bedtime stories – மாமியார் மருமகள் சண்டை – முல்லா கதை – தன்னோட புத்திசாலி தனத்தால் ஊருல இருக்குறவங்க பிரச்சனை எல்லாம் தீர்த்து வைக்கிற முல்லாவுக்கு ஒரு பெரிய பிரச்சனை இருக்கு

அவரோட மனைவிக்கும் அவரோட அம்மாவுக்கும் நடக்குற மாமியார் மருமகள் சண்டை தான் அது , கல்யாணம் ஆகி ரொம்ப வருஷம் ஆனாலும் ,அவுங்க ரெண்டு பேருக்கும் வயசு கூடி போனாலும் வீட்டுல நடக்குற சண்டை மட்டும் ஓயவே இல்லை , கொஞ்சனால் இத தடுத்து பார்த்த முல்லா எவ்வளவு முயற்சி செஞ்சும் முடியலன்னு அத அப்படியே விட்டுட்டாரு

ஒருநாள் முல்லா வெளி ஊருக்கு போயிட்டு தன்னோட கிராமத்துக்கு நடந்து வந்தாரு , அவரு வசிச்சிகிட்டு வந்த தெரு முனையில வந்த உடனே பார்த்த அவருக்கு புரிஞ்சி போச்சு நம்ம வீட்டுலதான் மாமியார் மருமகள் சண்டை நடக்குதுன்னு

ஆனா இந்த தடவ அடிதடி வரைக்கும் போயிடுச்சுனு வீட்டு வாசல்ல கிடந்த உடைஞ்ச மண் பனை கரண்டி எல்லாத்தையும் பார்த்து புரிஞ்சிக்கிட்டாரு.அப்பதான் முடிவு செஞ்சாரு போனா போகுதுனு இந்த சண்டைய கண்டுக்காம விட்டது பெரியாதப்புன்னு

உடனே அவருக்கு இந்த மாமியார் மருமகள் சண்டைய முடிவுக்கு கொண்டு வரணும்னு தோணுச்சு ,யோசிச்சு யோசிச்சு பார்த்த முல்லாவுக்கு ஒரு நல்ல யோசனை கிடைச்சுச்சு ,உடனே வீட்டுக்கு பின்னாடி இருக்குற தொட்டது கிணத்துல தண்ணி இறைச்சிகிட்டு இருந்த முல்லாவோட மனைவிகிட்ட போயி ஒரு தங்க சங்கிலிய கொடுத்து இத நீ போட்டுக்கனு கொடுத்தாரு

ஒன்னும் புரியாம பார்த்த மனைவி கிட்ட இது பக்கத்து ஊருல இருக்குற பெரியவர் கிட்ட மந்திரிச்சி வாங்குன மணி இத போட்டுருக்கவங்களுக்கு வெற்றி எப்போதும் இருக்கும்னு சொன்னாங்க அதான் உனக்கு வாங்கிட்டு வந்தேன்னு சொன்னாரு

அவுங்களும் கொடுத்த சங்கிலியில் ஒரு பச்சை கலர் மரகத மணி ஒட்டி இருந்துச்சு ,இத பார்த்தியா இது தான் உண்மையான மரகதமணி இத நீ பத்திரமா வச்சுங்கனு சொன்னாரு ,உடனே முல்லாவோட மனைவி கேட்டாங்க எனக்கு மட்டும் வாங்கிட்டு வந்தீங்களா இல்ல உங்க அம்மாவுக்கும் வாங்கிட்டு வந்திருக்கீங்களானு கேட்டாங்க

அதுக்கு முல்லா சொன்னாரு ,அட நீ வேற எனக்கு நீதான் முக்கியம் அதனால தான் உனக்கு உண்மையான மரகதமணி பொரிச்ச தங்க சங்கிலி வாங்கிட்டு வந்திருக்கேன் ,இருந்தாலும் எங்க அம்மா இத பார்த்தா சண்டைக்கு வரும் அதனால அவுங்களுக்கு போலியான மரகதமணி மாதிரி இருக்குற கண்ணாடியில செஞ்ச தங்க சங்கிலி வாங்கிட்டு வந்திருக்கேன்னு சொல்லி ஒரு தங்க சங்கிலிய காமிச்சாரு

அத வாங்கி பார்த்த முல்லாவோட மனைவி அட இது ரெண்டும் ஒரே மாதிரி இருக்கு ஆனா என்னோட சங்கிலி தான் ஜொலிக்குதுனு சொன்னாங்க , உடனே வீட்டுக்குள்ள போன முல்லா சமையல் அறையில சமையல் செஞ்சுகிட்டு இருந்த அவரோட அம்மாகிட்ட போயி அந்த இன்னொரு சங்கிலிய கொடுத்தாரு

இது என்னனு கேட்ட முல்லாவோட அம்மாகிட்ட மனைவிகிட்ட சொன்ன அதே கதையை சொன்னாரு ,அந்த தங்க சங்கிலிய வாங்கி போட்டுக்கிட்ட அம்மா வெளிய வந்து மருமகள் போட்டுருக்க தங்க சங்கிலிய பார்த்தாங்க ,உடனே முல்லா கிட்ட வந்து நீ சொன்னது உண்மை தான் என்னோட தங்க சங்கிலியில் இருக்குற உண்மையான மரகதமணி ரொம்ப பல பலனு இருக்கு ஆனா உன் பொண்டாட்டி போட்ருக்க சங்கிலி கொஞ்சம் மங்களா தான் இருக்குனு சொன்னாங்க

மறுநாள் மாமியார் மருமகள் சண்டை வழக்கம்போல நடக்க ஆரம்பிச்சுச்சு ,அப்ப சாப்பிட்டுக்கிட்டு இருந்த முல்லா சொன்னாரு நான் எப்பவும் நல்லவங்க பக்கம்தான் உண்மையான மரகத மணி போற்றுக்கவங்க ரொம்ப நல்லவங்க ,அவுங்க பக்கம்தான் நான் நிப்பேன்னு சொல்லிட்டு வீட்ட விட்டு வெளிய போயிட்டாரு

அப்பத்தான் முல்லாவோட மனைவி நினைச்சாங்க என்னோட கணவர் என்னதான் நல்லவள்னு மறைமுகமா சொல்றாரு ,அவருக்கு என்மேல தான் ரொம்ப பாசம்னு நினைச்சாங்க உடனே வீண் சண்ட போடுறத நிறுத்திட்டு வீட்டு வேலை செய்ய ஆரம்பிச்சாங்க

அதே நேரத்துல தான் போட்டிருக்குறது தான் உண்மையான மரகதமணி ,என்னோட மகன் அதைத்தான் சூசகமா சொல்லிட்டு போறான் ,எனக்கு நல்ல மகன் கிடைச்சிருக்கான் ,எனக்கு துணையா அவன் இருக்கும்போது எதுக்கு வீணா சண்டை போட்டுக்கிட்டுனு நினைச்சிட்டு சமையல் செய்ய ஆரம்பிச்சாங்க

இப்படித்தான் ஒவ்வொருதடவை சண்டை நடக்குறப்பவும் முல்லா மரகதமணிய வச்சு தன்னோட ஆதரவை தெரிவிச்சு ,குடும்ப சிக்கலை சரி செஞ்சாரு

Exit mobile version