மரியாதை ராமன் கதை -Mariyathai Raman Story:-மரியாதை ராமன் ஒருநாள் தனது வீட்டின் முன் அமர்ந்து ஊர் மக்களுடன் பேசிக்கொண்டு இருந்தாரு
அப்ப பக்கத்துக்கு ஊர் வியாபாரிகள் அங்க வந்தாங்க ,அவுங்க தங்கள் ஊரில் உள்ள பணத்தாசை பிடித்த வியாபாரியை பத்தி சொன்னாங்க.
நிறைய பணம் சம்பாதிச்சு இருந்தாலும் பேராசையால ,அந்த பணக்காரர் தங்களுக்கு இடைஞ்சல் செய்யிறதா சொன்னாங்க
ராமன் அவர்களிடம் அந்த பணக்காரரை பற்றி சில விஷயங்களை தெரிந்துகொண்டாரு
மறுநாள் மாறுவேடம் போட்டுக்கிட்டு அந்த பணக்காரரை பாக்க போனாரு ,அப்ப கூடவே ஒரு சண்டை சேவலையும் சில வியாபாரிகளையும் கூடவே கூட்டிகிட்டு போனாரு
அந்த பணக்காரர்கிட்ட ஐயா உங்கள் பேரை சொல்லி இந்த பந்தய சேவலை சண்டைக்கு விட்டேன் ,அந்த சண்டையில இந்த சேவல் ஜெயிச்சுடுச்சு இத பாருங்க பரிசு பணம்னு நூறு ரூபாய காட்டுனாரு
என்பேரை சொல்லி பந்தயம் ஜெயிச்சதால அந்த பணம் எனக்குதான்னு அந்த பணக்காரர் சொன்னாரு ,உடனே பக்கத்துல இருந்த வியாபாரிகளும் பணக்காரர் சொல்லுறது சரி நீங்க அவர்பேர சொல்லி ஜெயிச்சதால அந்த பணத்தை அவர்கிட்ட கொடுங்கன்னு சொன்னாங்க
உடனே ராமனும் பணத்தை அந்த பணக்காரர்கிட்ட கொடுத்துட்டு வந்துட்டாரு
மறுநாளும் அங்க போன ராமன் இன்னைக்கு இந்த சேவல் 200 ரூபாய் ஜெயிச்சிருக்கு ,பாதி நான் வசிக்கிறேன் மீதி நீங்க வச்சுகொங்கனு சொன்னாரு
அதுக்கு அந்த பணக்காரர் அதெல்லாம் முடியாது என் பேரை சொல்லி ஜெயிச்சதால அந்த பணம் எல்லாமும் எனக்குதான்னு சொன்னாரு ,பக்கத்துல இருந்த வியாபாரிங்க எல்லாரும் அதையே சொன்னதும் ராமன் அந்த பணத்தை அவர்கிட்ட கொடுத்துட்டு வந்துட்டாரு
மறுநாள் வெறும் கையோட பணக்காரரை சந்திக்க போனாரு மரியாதை ராமன் ,
என்ன சும்மா வந்திருக்க பந்தயத்துக்கு போகலையானு கேட்டாரு
அதுக்கு ராமன் சொன்னாரு இன்னைக்கு சேவல் தோத்து போச்சு ,கூடவே நான் பந்தயம் கட்டுன 1000 ரூபாயும் போச்சு ,எனக்கு தோத்துப்போன பணத்தை கொடுங்க நான் ஜெயிச்ச சேவல்காரருக்கு கொடுக்கணும்னு சொன்னாரு
இத கேட்ட பணக்காரருக்கு தூக்கிவாரி போட்டது ,முடியாது நீ தோத்ததுக்கு நான் ஏன் பணம் கொடுக்கணும்னு கேட்டாரு
அப்ப பக்கத்துல இருந்த வியாபாரிகள் ,அவன் ஜெயிச்சு கொண்டுவந்த பணத்தை எல்லாம் பிடிக்கிகிட்ட உனக்கு அவன் தோக்கும் போது மட்டு சம்பந்தம் இல்லையானு கேட்டாங்க
தான் அவங்களோட சூழ்ச்சியில் மாட்டிகிட்டத புரிஞ்சிகிட்டு பணக்காரர் ஆயிரம் ரூபாயை கொண்டுவந்து கொடுத்தாரு
அப்பத்தான் தன்னோட வேஷத்தை கலைச்சுட்டு மரியாதையை ராமன் சொன்னாரு ,நீ பணக்காரநா இருந்த போதும் தவறான செயல்களை செஞ்சு மற்ற வியாபாரிகளை துன்புறுத்தறத இதோட நிறுத்திக்கோ
இல்லைனா நீ சேத்து வச்சிருக்க பணம் எல்லாம் வீணா போயிடும்னு சொன்னாரு ,அப்பத்தான் தன்னோட தவறை உணர்ந்தாரு அந்த பணக்காரரு
உடனே அவர் ஊரு மக்கள் கிட்டயும் ,மரியாதை ராமன் கிட்டயும் மன்னிப்பு கேட்டாரு