மதில்மேல் பூனை – Mahabharatham Stories For kids in Tamil:மஹாபாரதம் கடைசி போர் நடந்துகிட்டு இருந்த சமயத்துல ,ஒரு வீரன் போர்க்களத்துக்கு வந்தான் ,அங்க கிருஷ்ணர் தன்னோட படைகளை பார்வையிட நடந்து வந்துகிட்டு இருந்தாரு
அவரு கிட்ட வந்த அந்த வீரன் சொன்னான் நான் ஒரு சிறந்த வீரன் ,நான் தோல்வி நிலையில இருக்குற படைக்கு வலு சேர்த்து அது வெற்றி பெற வைக்குற திறமைசாலின்னு சொன்னான்
அவனோட வில்லாற்றல சோதிக்க நினச்சா கிருஷ்ணர் ,பக்கத்துல இருக்குற மரத்த கட்டி எங்க ஒரே வில்லால அந்த மறைத்து இலைகள் எல்லாத்தையும் கோர்த்துக்கொண்டு வா பார்க்கலாம்னு சொன்னாரு ,அப்படி சொல்லும்போதே தன்னோட காலுக்கு அடியில ரெண்டு இலைகளை யாருக்கும் தெரியாம மிதிச்சிக்கிட்டாரு கிருஷ்ணர்
வில்ல எடுத்த வீரன் மந்திரித்த சொல்லி வில்ல விட்டான் மரத்துமேல இருந்த இலைகள் மற்றும் கீழ கிடந்த இலைகள் எல்லாத்தையும் அந்த அம்பு கோர்த்துட்டு ,கிருஷ்ணர் காலை சுத்திக்கிட்டே இருந்துச்சு ,கிருஷ்ணருக்கு ஆச்சர்யம் தான் காலடியில மிதிச்ச இலையையும் கண்டுபிடிச்ச இவனோட மந்திரம் ரொம்ப அபூர்வமானதுனு ஒத்துக்கிட்டாரு
ஆனா அப்ப கிருஷ்ணருக்கு ஒரு சந்தேகம் வந்துச்சு ,உடனே அந்த வீரன்கிட்ட கேட்டாரு ,ஆமா நீ எந்த பக்கம் சேர விரும்புறேன்னு கேட்டாரு ,அதுக்கு அவன் சொன்னான் தற்சமயம் தோத்துக்கிட்டு இருக்குற படை பக்கம்னு சொன்னான் ,அவனோட நோக்கத்தை புரிஞ்சிகிட்ட கிருஷ்ணர்,எனக்கு ஒரு உதவி பண்ணுவியான்னு கேட்டாரு
அதுக்கு அவன் சொன்னான் என்ன உதவினாலும் செய்ய தயார்னு வாக்குறுதி கொடுத்தான்,அதுக்கு கிருஷ்ணர் சொன்னாரு ,இந்த போறோட வெற்றியை மாத்தி அமைக்கிற சக்தியுடைய ஒருத்தன் இருக்கான் அவனோட தலையை எனக்கு கொய்து தரணும்னு சொன்னாரு
அதுக்கும் அவன் ஒத்துக்கிட்டதுக்கு அப்புறமா ,கிருஷ்ணர் சொன்னாரு வீரனே நீதான் அவன் ,எப்ப நீ தோக்குற பக்கம் தான் இருப்பேன்னு சொன்னியோ அப்பவே நீ மதில் மேல் பூனை போல் இருக்கன்ற விஷயம் எனக்கு தெரிஞ்சிடுச்சு ,ஒரு வேல நம்ம படை ஜெயிக்க ஆரம்பிச்சா நீ அடுத்த படைக்கு போய்டுவா ,அந்த படை ஜெயிச்சதுனா இந்த பக்கம் வந்துடுவ அதனால உன்னோட தலையை எனக்கு கொடுன்னு கேட்டாரு க்ரிஷ்னர்
தன்னோட வாக்குப்படி தன்னோட தலையை அவருக்கு கொடுக்குறதாவும் ,ஆனா கடைசிவரை அந்த போற பாக்குற பாக்கியமும் தனக்கு கிடைக்கும்னு சொல்லி ஒத்துக்கிட்டேன் அந்த வீரன் ,கிருஷ்ணரும் அதுமாதிரியே அவன் விருப்பத்தை நிரவேத்துற ஆசிய வழங்குனாரு