யாரிடம் கேட்கிறாய் நிதி
காசியில் இந்துப் பல்கலைக்கழகத்தை நிறுவ நிதி திரட்டிக் கொண்டிருந்தார் பண்டிட் மதன் மோகன் மாளவியா
ஒரு சமயம் ஹைதராபாத் நிஜாமிடம் சென்று
நன்கொடை வேண்டினார்
உடனே ஆத்திரம் கொண்ட நிஜாம், “யாரிடம் கேட்கிறாய் நன்கொடை?” என்று கூறி தன் காலில் இருந்த ஒரு செருப்பைக் கழற்றி மாளவியாவை நோக்கி வீசினார்.
தன் முன்னே வந்து விழுந்த செருப்பை அமைதியுடன் பார்த்த மாளவியா, ‘சட்’டென்று அதை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.
நிஜாம் திகைத்தார். உடனே ஒரு பணியாளை
அழைத்தார் என்ன அவரது நடவடிக்கைகளை கவனித்துவிட்டு பணியாளை அனுப்பினார்.
பணியாள் விரைந்து வெளியேறி பின்தொடர்ந்தான்
மக்கள் அதிகம் நடமாடும் ஓர் இடத்திற்குச் சென்ற மாளவியா, மக்களே ஒரு அதிசயம் இதோ இந்த ஒரு செருப்பு, பார் போற்றும் நமது நிஜாம் நவாப் அணிந்திருந்ததாகும். இது ஏலம் விடப்படுகிறது. விரும்புபவர்கள் ஏலம் கேட்கலாம். இதன் ஆரம்ப விலை ஒரு என்றார்.
அதைக் கண்ட பணியாள் நிஜாமிடம் விரைந்து சென்று விஷயத்தைக் கூறினான்
பதறிப் போன நிஜாம், செருப்பை குறைந்த விலைக்கு யாரேனும் எடுத்தால், அது எனக்குத்தான் மிகப் பெரிய நீ போய் அதைப் பெருந்தொகைக்கு ஏலம் எடுத்துக் கொண்டு என்று கூறி ஒரு பெரும் தொகையைப் பணியாளனிடம் கொடுத்தனுப்பினார்
விரைந்து சென்ற பணியாள் அந்தச் செருப்பை பெருந்தொகைக்கு ஏலத்தில் எடுத்தான்.
பெரும் பணம் கைக்கு வந்ததும் மெல்லப் புன்னகைத்த மாளவியா அந்தப் பணத்தை பல்கலைக்கழக நிதியில் சேர்த்துக் கொண்டார்