Little Mermaid Story in Tamil – கடல் கன்னி குழந்தை கதைகள் :-ஒரு காலத்துல ஒரு சமுத்திர ராஜ்ஜியம் இருந்துச்சு ,அது கடலுக்கு அடியில இருக்குற ஒரு கடற்கன்னிகளின் சாம்ராஜ்யம்
அந்த சாம்ராஜ்யத்த ஒரு அரசர் ஆட்சி செஞ்சிட்டு வந்தாரு ,அவருக்கு ஐந்து மகள்கள் இருந்தாங்க ,அவுங்க எல்லாரும் அழகிய மீன் வாலோட ரொம்ப அழகா இருந்தாங்க ,இருந்தாலும் கடைசி கடற்கன்னி மட்டும் ரொம்ப அழகாவும் ரொம்ப புத்திசாலியாவும் இருந்தா
ஒருநாள் அவுங்க பாட்டி அவள கூப்பிட்டு உனக்கு வயசு நிறைய ஆகிடுச்சு ,நீ சில உண்மைகளை தெரிச்சிக்கிடனும் ,நம்மை போலவே உருவம் உடைய மனிதர்கள் நிறையபேர் இந்த உலகத்துல இருக்காங்க ,அவுங்களுக்கு நம்ம போல வால் இல்லாம கால் இருக்கும் ,அவுங்களால நம்மள போல அதிக நேரம் தண்ணீல இருக்க முடியாது
உனக்கு சரியான வயசு வந்ததால உனக்கு கடல விட்டு வெளிய போய் அவுங்கள பாக்குற அனுமதி கொடுக்குறேன்னு சொன்னாங்க
உடனே கடல் மட்டத்துக்கு வந்த அந்த குட்டி கடற்கன்னி ஒரு பாறைல உக்காந்து வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சா
அப்ப அந்த பக்கமா ஒரு இளவரசரோட கப்பல் வந்துச்சு ,அந்த கப்பல்ல இருந்த அந்த இளவரசர பாத்து அவரோட நட்பு வச்சுக்கிடணும்னு நினச்சா அந்த கடற்கன்னி
அப்ப திடீர்கு சூறாவளி அடிக்க ஆரம்பிச்சுச்சு ,உடனே அந்த கப்பல் முழுக ஆரம்பிச்சது ,அந்த கப்பல்ல இருந்த எல்லாரும் மூழ்க ஆரம்பிச்சாங்க
உடனே அந்த சிறிய கடற்கன்னி தண்ணில குதிச்சி அந்த இளவரசர காப்பாத்துனா.மயக்கத்துல இருக்குற இளவரசர கரைல போட்டுட்டு தண்ணிக்குள்ள போய் நின்னு பாத்தா
அப்ப அங்க வந்த வேற நாட்டோட கப்பல்ல இருந்து ஒரு இளவரசி இறங்கி அவனை எழுப்பி ,என்னாச்சுன்னு கேட்டா
என்ன நீங்கதான்காப்பதுனீங்க அப்படின்னு சொல்லி அவளுக்கு நன்றி சொன்னா ,அந்த இளவரசியும் அவனை தன்னோட கப்பலுக்கு கூட்டிட்டு போனா
கடலுக்கு வந்த கடற்கன்னி நான் காப்பாத்துன அந்த இளவரசர வேற ஒரு பெண் கூட பாக்க கஷ்டமா இருக்குன்னு நினைச்சு வறுத்த பட்டா
அப்ப அங்க வந்த சூனியக்காரி ,ஏய் பெண்ணே நீ கடல விட்டு போனா உனக்கு கால் வர்ற மாதிறி இந்த மந்திர நீர் இருக்கு ,இத நீ குடிச்சான்னா மனிதர்கள் போல மாறலாம்னு சொன்னா
அத கேட்ட இளைய கடற்கன்னி அவசரப்பட்டு அத எடுத்து குடிச்சா
வெளிய வந்த அவளுக்கு வால் போயி கால் வந்துச்சு ,கடல் எல்லைக்கு வந்த அவ அந்த இளவரசியோட கப்பலுக்கு போனா
அங்க அந்த இளவரசிக்கும் இளவரசருக்கு கல்யாணம் நடந்துகிட்டு இருந்துச்சு ,இத பாத்த கடற்கன்னிக்கு ரொம்ப வருத்தமா போச்சு
அப்ப அங்க வந்த கடற்கன்னியோட உடன் பிறந்த கடற்கன்னிகள் அங்க வந்தாங்க
தங்கையே நீ செஞ்சது தவறு.சுயநமாலம் கொண்ட மனிதர்களை எப்போதும் நம்ப கூடாது .அவங்கள காப்பாத்துன உன்ன விட்டுட்டு வேரோடு பெண்கூட கல்யாணம் செய்ற அவனை நம்பாத.
ஒரு மனிதனுக்கு ஆச பட்டு உன்ன மதிக்கிட்டது பெரிய தவறு . இருந்தாலும் உனக்கு மீண்டும் கடற்கன்னியா மாற வாய்ப்பு இருக்கு இந்த கத்திய எடுத்துட்டு போய் அந்த இளவரசன குத்துன்னு சொல்லி கத்திய கொடுத்தாங்க
கப்பலுக்கு திரும்ப வந்த அந்த கடற்கன்னியை அடையாளம் தெரிஞ்சுக்கிட்ட அந்த புது இளவரசி ,அடடா அழகிய பெண்ணே நீ தான இந்த இளவரசரை அன்னைக்கு காப்பாத்துன உன்ன தேடி தேடி பார்த்தேன்னு சொல்லி அவளை வரவேற்றா
இளவரசர் கிட்டயும் அவளை அறிமுக படுத்துனா ,அன்னைக்கு உங்கள தண்ணீல இருந்து காப்பாத்துனது இந்த பெண்தான்னு சொன்னா
இத கேட்ட கடற்கன்னிக்கு இந்த மனிதர்களடயும் உண்மை நல்ல குணங்கள் இருக்கு ,நமக்கு கிடைக்காத இந்த இளவரசர இந்த இளவரசி கல்யாணம் செஞ்சா பரவா இல்லைனு நினச்சு
கத்திய கீழ போட்டுட்டு கடல் சாம்ராஜ்யத்துக்கு வந்தா ,அவள பாத்த கடல் அரசர் கனிவான மனம் கொண்ட நீ மனிதர்கள் உன்னை மறந்த போதிலும் அவர்களுக்கு நல்லது செய்ய உன்னோட உயிரையே கொடுக்க துணிஞ்ச உன்ன பாராட்டுறேன்னு சொல்லி அவள மீண்டும் கடல் கன்னியாவே மாத்தி வாழ்த்து சொன்னாரு கடல் அரசர்