சிங்கம் ,புலி,கழுதை கதை – Lion Tiger and Donkey Story in Tamil:-ஒருநாள் காட்டுக்குள்ள புலிக்கும் கழுதைக்கும் பெரிய சண்டை வந்துச்சு , தந்திரகார கழுதை ஒரு புல்ல எடுத்து இந்த புல்லோட நிறம் ஊதானு சொல்லுச்சு
அதுக்கு புலி சொல்லுச்சு கழுதையாரே புல் எப்பயும் பச்சை நிறத்துல தான் இருக்கும்னு சொல்லுச்சு.
இத கேட்ட கழுதை சொல்லுச்சு இருக்கலாம் ஆனா இந்த புல்லோட நிறம் ஊதானு சொல்லுச்சு
ரெண்டு பேருக்கும் சண்டை ரொம்ப அதிகமாகிடுச்சு ,உடனே ரெண்டுபேரும் காட்டு அரசரான சிங்கத்துக்கிட்ட போனாங்க
ரெண்டு பேரும் நடந்தத ராஜாகிட்ட சொன்னாங்க, இந்த புல்லோட நிறம் ஊதாதான்,கழுதையாரே நீங்க ஜெயிச்சிடீங்க அதனால போயிட்டு வாங்கனு சொல்லி அனுப்பி வச்சுச்சு
கழுதை போனதுக்கு அப்புறமா புலிகிட்ட சொல்லுச்சு உனக்கு பத்துநாள் புல் புடுங்குற தண்டனை கொடுக்குறேன்,தினமும் நிறைய புல்ல புடிங்கி எங்கிட்ட காமிக்கணும்னு சொல்லுச்சு
அதுக்கு புலி சொல்லுச்சு இது என்ன அரசே புல் எப்படி ஊதா நிறத்துல இருக்கும்னு கேட்டுச்சு
உடனே சிங்கராஜா சொல்லுச்சு நீ சொல்லுறது சரிதான் புல் எப்பவும் பச்சை நிறத்துலதான் இருக்கும்
அப்புறம் ஏன் அந்த கழுதைய விட்டுட்டு எனக்கு தண்டனை கொடுக்குறீங்கன்னு கேட்டுச்சு புலி
இந்த மாதிரி எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு முட்டாள் தனமான கேள்வியை உன்கிட்ட கேட்டு உன்னோட நேரத்தை வீணடிச்ச கழுதைய சும்மா விடாம என்கிட்ட கூட்டிட்டு வந்து என்னோட நேரத்தையும் வீணடிச்ச நீதான் குற்றவாளி
முட்டாள்கள் கிட்ட எப்பவும் வாக்கு வாதம் செய்ய கூடாது ,அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது அவுங்களுக்கு புடிச்சமாதிரி பேசி பேச்சுக்கு முற்று புள்ளி வைக்கணும்னு சொல்லுச்சு சிங்கம்
அப்பத்தான் புலிக்கு புரிஞ்சது தேவ இல்லாம ஒரு கழுதை கிட்ட வாய் சண்டைக்கு போனது தன்னோட தப்புதான் ,அதுக்கு தனக்கு கிடைச்ச இந்த தண்டனையும் மிக சரியானதுனு புரிச்சிக்கிடுச்சு