Site icon தமிழ் குழந்தை கதைகள்

Lion And The Mouse Story – சிங்கமும் எலியும்-Kindness Is Beautiful

Lion And The Mouse Story – சிங்கமும் எலியும்-Kindness Is Beautiful:-முன் ஒரு காலத்துல ஒரு சிங்கம் இருந்துச்சாம்


அது ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒரு பெரிய குகைல வாழ்ந்துகிட்டு இருந்துச்சாம்,

அந்த சிங்கம் எப்பவும் வேட்டையாடி சாப்டுட்டு அந்த குகைக்கு வெளியில் இருக்குர மரத்துக் கடியில்தான் படுத்து ஓய்வு எடுக்கும் அப்படி ஒரு நாள் நல்லா சாப்டுட்டு அந்த மரத்தடியில் நல்லா தூங்கிகிட்டு இருந்துச்சு


இந்த நேரத்துல தான் ஒரு கேட்டக்கார எலி அங்க வந்துச்சு சிங்கம் தூங்குரத கூட பாக்காம அது மேல ஏரி ஜாலியா விலையாண்டுச்சு


தூக்கத்துல இருக்குர அந்த சிங்கம் தூக்கம் கலைஞ்சு எந்திரிச்சுச்சு
யாருடா அது நம்மள தூக்கத்துல இருந்து எழுப்பிவிட்டதுனு கோபா கத்துச்சு


இத பாத்த அந்த எலி ரொம்ப பயந்து போச்சு,இத பாத்த அந்த சிங்கம் நீதான் என் தூக்கத்த கலச்சியானு கேட்டுச்சு


அந்த எலி பயத்துல ஆமாம்னு தலைய ஆட்டுச்சு உடனே அந்த எலிய தாவி பிடிச்ச அந்த சிங்கம் உன்ன கொள்ளாம விடமாட்டேனு சொல்லுச்சு ரொம்ப பயந்த அந்த எலி சிங்க ராஜா சிங்க ராஜா தயவு செஞ்ச என்ன மன்னிச்சுடுங்க நான் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நண்பனா இருக்கே என்ன மன்னிச்சுடுங்கனு சொல்லுச்சு


இதக்கேட்ட அந்த சிங்கம் இந்த சின்ன எலி எனக்கு நண்பனானு கேட்டு சிரிச்சுச்சு இருந்தாலும் பயந்து போன அந்த எலிய கொள்ளாம விட்டுடுச்சு உடனே அந்த எலி சிங்கராஜாவுக்கு நன்றி சொல்லிட்டு வேகமா ஓடிப்போயிடுச்சு
சில காலங்களுக்கு அப்புரமா ஒரு நாள் சிங்க ராஜா காட்டு வழியா நடந்து போயிகிட்டு இருந்துச்சு அப்ப ஒரு இடத்துல வேடன் விரிச்சு வச்சிருந்த வலையில் மாட்டிகிச்சு ,அடடா தனியாளா இப்படி மாட்டிகிட்டமே நம்மள யாரு காப்பாத்துவான ரொம்ப வருத்தப்பட்டுச்சு


இத அந்த வழியாப்போன அந்த குட்டி எலி அடடா நம்மசிங்க ராஜா ஆபத்துல இருக்கரேனு வேகமா ஓடி வந்துச்சு


அட நம்ம உயிர காப்பாத்துன நண்பரான அந்த சிங்க ராஜாவ காப்பாத்தனும்னு அது கிட்ட போச்சு வேடனோட வலைய தன்னோட குட்டி பல்லாள மெதுவா கடிக்க ஆரம்பிச்சது கொஞ்ச நேரத்துலயே அந்த வலைய கடிச்சு சிங்கத்த விடுவிச்சது


அதுக்கு அப்புரமா அந்த சிங்கமும் எலியும் ரொம்ப நல்ல நண்பர்களா வாழ்ந்து வந்தாங்க குழந்தைகளா இந்த கதையில் இருந்து நம்ம என்ன நீதி தெரிஞ்சுகிட்டம்னா நல்ல நண்பர்கள் சம்பாதிச்சம்னா நமக்கு எப்பவும் தோல்வியே கிடையாது.

Exit mobile version