Site icon தமிழ் குழந்தை கதைகள்

Lion and Cunning Fox- வயதான சிங்கமும் தந்திர நரியும்

Lion and Cunning Fox- வயதான சிங்கமும் தந்திர நரியும் :- ஒரு அடர்ந்த காட்டு பகுதியை ஒரு சிங்கம் ஆட்சி செஞ்சுகிட்டு வந்துச்சு

சிங்கத்தோட கம்பீரத்தாலும் வீரத்தாலும் காட்டுல நடக்குற சின்ன சின்ன சண்ட ,திருட்டு எல்லாத்தையும் சரி செஞ்சு நல்லபடியா ஆட்சி செஞ்சுச்சு

கொஞ்ச நாளுக்கு அப்புறமா அந்த சிங்கத்துக்கு வயசாகிடுச்சு , அந்த வயசான சிங்கம் முன்ன மாதிரி ஓடி ஆடி வேட்டையாடுறதோ , காட்டு பிரச்னைய தீர்க்குறதோ முடியாம போச்சு

இந்த விஷயத்தை கவனிச்ச அந்த காட்டுல வாழ்ந்துகிட்டு வந்துச்சு ஒரு தந்திரகார நரி

அந்த தந்திர நரி எல்லா மிருகங்களையும் கூப்பிட்டு ஒரு கூட்டம் போட்டுச்சு

நம்ம காட்டு ராஜாவுக்கு வயசாகிட்டதுனால இந்த காட்ட சரியா ஆட்சி செய்ய முடியல , அதனால புத்திசாலி தனத்துல சிங்கத்தைவிட சிறந்த என்ன அரசனா தேர்ந்தெடுங்கனு சொல்லுச்சு

உடனே முன்ன பின்ன யோசிக்காத காட்டு மிருகங்கள் தந்திர நரியோட பேச்ச கேட்டு ,நரியவே தங்களோட அரசனா தேர்ந்தெடுத்துச்சுங்க

இத கேள்விப்பட்ட சிங்கம் காட்டு மிருகங்கள் தவறான முடிவு எடுத்து இருக்காங்கனு வருத்தப்பட்டுச்சு

இருந்தாலும் இந்த வயசான காலத்துல எதுக்கு பொல்லாப்புனு அமைதியா இருந்துடுச்சு

கொஞ்ச நாள் கழிச்சு காட்டுக்குள்ள ஒரு சண்ட வந்துச்சு ஓநாய் கூட்டமும் கரடி கூட்டமும் சண்ட போட்டுச்சுங்க

அதனால காட்டுக்குள்ள இருந்த அமைதியே போய்டுச்சு ,உடனே காட்டு மிருகங்கள் எல்லாம் சேந்து புது அரசரான நரிகிட்ட போயி இந்த சண்டைய முடிவுக்கு கொண்டுவர சொல்லுச்சுங்க

இத கேட்ட நரியும் ஓநாய் கூட்டத்துக்கிட்ட போயி சண்டைய நிறுத்த சொல்லுச்சு ,இத கேட்ட ஓநாய் கூட்டம் ரொம்ப கோபப்பட்டு நரிய அடிச்சி தொரத்தி விட்டுடுச்சுங்க

உடனே கரடி கூட்டத்துக்கிட்ட போயி சண்டைய நிறுத்த சொல்லுச்சு,அதுக்கு கரடி கூட்டமும் நரிய அடிச்சி தொரத்தி விட்டுடுச்சுங்க

சோர்ந்துபோன நரி என்னதான் புத்தி கூர்மையா இருந்தாலும் உடல் பலம் இருந்தா தான் காட்டையே ஆட்சி செய்ய முடியும்ங்கிறத உணர்ந்துச்சு

உடனே எல்லா காட்டு மிருகங்களையும் கூப்பிட்டு தன்னோட தோல்வியா ஒத்துக்கிட்டு காட்டு மிருகங்கள் கிட்ட மன்னிப்பு கேட்டுச்சு

இத கேட்ட காட்டு மிருகங்கள் எல்லாம் இப்ப என்ன செய்யுறதுனு குழம்பி போயிடுச்சுங்க ,உடனே சிங்க ராஜா கிட்ட போயி முறையிட்டுச்சுங்க

காட்டு மிருகங்கள் எல்லாம் தன்ன சந்திக்க வந்தத பார்த்த சிங்கம் நடந்த குழப்பங்க எல்லாத்தையும் தெரிஞ்சி ரொம்ப வருத்தப்பட்டுச்சு

உடனே அதுக்கு ஒரு யோசனை வந்துச்சு ,பக்கத்து காட்டுல வாழுற தன்னோட தம்பி சிங்கத்த இந்த காட்டுக்கு வர சொல்லி குரங்குகிட்ட சொல்லி விட்டுச்சு

வயசான சிங்கத்தோட சேதி கேட்ட தம்பி சிங்கம் தன்னோட அண்ணன் வாழுற காட்டுக்கு வந்துச்சு

அண்ணன் ஆட்சி செஞ்ச காட்டுக்கு வந்த தம்பி சிங்கம் ,அண்ணனோட அறிவுறுத்தல்படி ராஜாவா பதவி எடுத்துகிடுச்சு

ஓநாய் கூட்டத்துக்கிட்ட போன புது சிங்கம் சண்டைய நிறுத்த சொல்லுச்சு

சிங்கத்தோட பலத்த தெரிஞ்சு இருந்த ஓநாய் கூட்டம் அமைதியா போய்டுச்சு ,அதே மாதிரி கரடி கூட்டமும் சண்டைய நிறுத்திடுச்சு

இத பார்த்த எல்லா மிருகங்களும் தங்களோட புது அரசனை வாழ்த்துச்சுங்க ,அதே நேரத்துல வயசான சிங்க ராஜாவையும் வாழ்த்தி நன்றி சொல்லுச்சுங்க

Exit mobile version