Site icon தமிழ் குழந்தை கதைகள்

புகழ்ச்சி என்னும் போதை வி.லெனின்

ரஷ்யாவின் தந்தை எனப் போற்றப்படுபவர் வி.லெனின்

ரஷ்யப் புரட்சிக்குப் பின் (1917) ‘ஜார்’ என்ற கொடுங்கோல் மன்னர்களின் ஆட்சியை ஒழித்து தனது போல்ஸ்விக் கட்சியின் மூலமாக ரஷ்யக் குடியரசை நிறுவினார். இதனால் அவர் ‘ரஷ்யாவின் தந்தை’ எனப் போற்றப்படுகிறார்

தன்னை யாரும் புகழ்ந்து பேசுவதை அவர் விரும்ப மாட்டார்.

ஒரு சமயம் அவரது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட விரும்பிய அவரது நண்பர்கள், அந்த விழாவில் அவசியம் கலந்து கொள்ளுமாறு அவரை விரும்பி வற்புறுத்தி அழைத்தனர்

அவர்களது வேண்டுகோளை முதலில் மறுத்த லெனின், பின்னர் ஒப்புக் கொண்டார்

பிறந்த நாள் விழா ஆரம்பமானது.

பல பெரிய மனிதர்கள் அங்கு வந்து லெனினைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசினர். இன்றும் வந்திருந்த பிரமுகர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக லெனினைப் பாராட்டியும் புகழ்ந்தும் பேரினர்

எல்லாரும் பேசி முடிக்கும் வரை வெளியில்

மறைந்திருந்த லெனின், சொற்பொழிவுகள் அனைத்தும்

முடிந்தபிறகு விழா மண்டபத்திற்குள் நுழைந்தார் கூட்டத்தினர் மிகுந்த ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர்

ஏன் இவ்வளவு தாமதம்?” என்று கேட்டார் ஒரு நண்பர்

எத்தனை அருமையான சொற்பொழிவுகள் அவற்றைக் கேட்டு மகிழ உங்களுக்குக் கொடுத்து வைக்கவில்லையே!” என்று குறைபட்டுக் கொண்டார் இன்னொரு நண்பர்

இப்படியே பலர் அவரது தாமதமான வருகையைப் பற்றி குறை கூறினர்

அனைத்தையும் பொறுமையுடன் கேட்ட லெனின் கூட்டத்தினரைப் பார்த்து, “அனைவரும் என்னைப் புகழ்ந்து தள்ளிவிட்டீர்கள். ஆனால் இதற்கு நான் உங்களுக்கு நன்றி சொல்லப் போவதில்லை. காரணம் புகழ்ச்சி என்பது ஓர் மோசமான போதை. அது

மனிதனை மிருகமாக்கிவிடும். ஆகவே மனிதனாக வே இருக்க விரும்புகிறேன். இனிமேல் மற்றவர்களைப் புகழ்ந்து Gus பொய்யர்களாக்கிக் கொள்ளாதீர்கள்” என்றார்

நான் உங்களைப்

அவரது பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்த தண்பர்களும் பிரமுகர்களும் ஓர் உண்மையை உணர்த்தியதற்காக லெலவிலுக்கு நன்றி கூறினர்.

Exit mobile version