lal bagathur sastri kids story – லால் பகதூர் சாஸ்திரி :-ஒருமுறை லால் பகதூர் சாஸ்திரி ஒரு ஜவுளி கடைய திறந்து வைக்க போயிருந்தாரு
அவரு அப்ப இந்தியாவோட ஜனாதிபதியா இருந்த நேரம்
கடைய சுத்தி பாக்க போன அவரு அங்க அழகான சேலைகள் இருக்குறத பாத்தாரு
உடனே இந்த சேலைகள் எவ்வளவுன்னு கேட்டாரு இது 800 ரூபாய் னு சொன்னாங்க , ஐயோ இது ரொம்ப விலைஅதிகம் வேற சேலை கட்டுங்கன்னு சொன்னாரு
400ரூபாய்க்கு ஒரு சேலைய காட்டுனாரு அந்த கடைக்காரர், அதுவும் வேலை அதிகம்னு சொன்னாரு
அப்ப அங்க வந்த முதலாளி ஐயா நீங்க இந்த நாட்டோட ஜனாதிபதி உங்களுக்கு இது எப்படி விலை அதிகமானதா தெரியுதுன்னு கேட்டாரு
அதுக்கு சாஸ்திரி சொன்னாரு என்னோட மாத வருமானம் 600 ரூபாய்தான் அந்த பணத்துலதான் நான் என்னோட வாழ்க்கை நடத்தணும்னு இருக்கேன் அதனாலதான் இந்த சேலை வேணாம்னு சொன்னேன்
எனக்கு 100 ரூபாய்க்கு கீழ இருக்குற சேலைகள காமிங்கன்னு சொன்னாரு
அதுக்கு அந்த முதலாளி ஐயா நீங்க எந்த சேலைய வேணும்னாலும் எடுத்துகோங்க நான் உங்களுக்கு அன்பளிப்பா தரேன்னு சொன்னாரு
அத மறுத்த சாஸ்திரி நாட்டோட முன்னேற்றத்துக்கு இந்த மாதிரி அன்பளிப்பு உதவாதுன்னு சொல்லி அந்த இருந்து கெளம்பிட்டாரு
லால்பகதூர் சாஸ்திரியோட இந்த நேர்மையா பாத்து எல்லோரும் வியந்தாங்க