காடுகளை பாதுகாத்தல் கட்டுரை-Save Forest Essay in Tamil:- காடுகள் நாம் உயிர்வாழ்வதற்கு மிக முக்கிய காரணியாக திகழ்கிறது .நாம் வாழும் பூமியை சமநிலையில் வைப்பதில் காடுகள் மிகுந்த பங்கு வகிக்கின்றன.காடுகளை பாதுகாப்பதே இயற்கை நமக்கு கொடுத்துள்ள இந்த வாழ்க்கையை முன்னெடுத்துச்செல்ல வழிவகுக்கும்
இந்த மிக மிஞ்சிய அறிவியல் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக காடுகளின் அழிவு துரிதமான அளவில் வளர்ந்து வருகிறது .இதன் காரணமாக இயற்கை மிக ஆபத்தான இடத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
காடுகளை சார்ந்து வாழும் காட்டு மிருகங்கள் மிக ஆபத்தான நிலைக்கு செல்ல காடுகள் அழிப்பு ஒரு காரணமாகும். விலங்குகள் மற்றும் பறவைகளின் அழிவு மனிதர்களின் வாழ்வியல் சுழற்சியில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.காடுகளில் இருந்து மனிதர்கள் வாழும் இடங்களுக்கு காட்டு மிருகங்கள் இடம் பெயர்ந்து நமக்கு ஆபத்தை விளைவிப்பதை நாம் தினம் செய்திகளில் பார்ப்பது தொடர்கிறது .
காடுகள் அவற்றின் பரப்பளவை நாளுக்கு நாள் இழந்து வருகிறது அவற்றை தடுக்க உலகிலுள்ள அணைந்து நாடுகளும் சட்டங்கள் இயற்றி வருகின்றன.
காடுகளின் சிறப்பை மாணவர்களுக்கு சிறுவயது முதலே பள்ளி பாடங்கள் மூலமாக கற்பித்தல். சமூக வலைத்தளங்கள் மூலமாக சிறந்த விளம்பரங்களை வெளியிடுதல் .காவலர்கள் கொண்டும் பொது அதிகாரிகளை கொண்டும் நமது காட்ட காப்பது நமது கடமையாகும்