Site icon தமிழ் குழந்தை கதைகள்

 Jokes in the Coffeehouse – Mulla Short Bedtime Stories – முல்லா நகைச்சுவை கதை

  Jokes in the Coffeehouse – Mulla Short Bedtime Stories – முல்லா நகைச்சுவை கதை :- முல்லா ஒருநாள் தன்னோட வேலை எல்லாம் முடிச்சிகிட்டு ,கிராமத்துல இருக்குற டீ கடைக்கு போனாரு

அங்க அவர மாதிரியே நிறய பேரு டீ குடிச்சிகிட்டு இருந்தாங்க ,அப்ப அங்க இருந்த எல்லாரும் ஆளுக்கு ஒரு கதை ஆளுக்கு ஒரு ஜோக்குனு சொல்லி சிரிச்சி பொழுது போக்கிகிட்டு இருந்தாங்க ,முல்லாவும் அவுங்களோட சேர்ந்து கதை சொல்லி ,கதை கேட்டு சந்தோசமா இருந்தாரு

அப்பதான் அங்க ஒரு பணக்காரர் வந்தாரு ,எல்லாரும் நகைசுவை கதைகளையும் ,நல்ல ஜோக்குகளையும் சொல்லி சிரிக்கிறத பார்த்ததும் ,அவரு நானும் ஒரு ஜோக் கதை சொல்றேன்னு சொல்லிட்டு ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சாரு

ஆனா அவரு சுருக்கமா கதை சொல்லாம , நீட்டி இழுத்து கதை சொல்ல ஆரம்பிச்சாரு ,இத கேட்ட எல்லாருக்கும் ரொம்ப போர் அடிக்க ஆரம்பிச்சுச்சு ,சில பேரு கொட்டாவி கூட விட ஆரம்பிச்சுட்டாங்க

நீட்டி இழுத்து கதை சொன்ன அவரு ஒரு வழியா அந்த ஜோக்க சொல்லி முடிச்சாரு ,அந்த ஜோக் ரொம்ப பலசா சுமாரா இருந்துச்சு ,அங்க இருந்த எல்லாரும் சிரிக்க கூட இல்ல ,ஆனா முல்லா மட்டும் ரொம்ப சத்தம் போட்டு சிரிச்சாரு , முல்லா கை தட்டி சிரிக்கிறத பார்த்ததும் அந்த பணக்காரர் ஒரு திருப்தியோட அங்க இருந்து போய்ட்டாரு

அவரு போனதுக்கு அப்புறமா எல்லாரும் முல்லாவ பார்த்து கேட்டாங்க ,என்ன முல்லா உங்களுக்கு பணத்தாசை வந்துடுச்சு போல பணக்காரர் சொல்லுற மொக்க ஜோக்குக்கு எல்லாம் சிரிக்கிறீங்களேனு கேட்டாங்க ,

அப்பத்தான் முல்லா சொன்னாரு ,அட நீங்க வேற அவரு கதை சொல்ல ஆரம்பிச்சே இருபது நிமிஷம் ஆகிடுச்சு ,நம்ம யாருமே சிரிக்கலைனா அந்த ஜோக்க திரும்ப சொல்லுவாரு ,

இல்ல அதேமாதிரி மொக்க ஜோக்கு எதாவது புதுசா சொல்ல ஆரம்பிப்பாரு,அத தடுக்கத்தான் இப்படி சிரிச்சேன் ,அங்க பாருங்க அவரு மன திருப்தியோட போறத ,வாங்க நம்ம வேலைய நாம பார்ப்போம்னு சொல்லிட்டு ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சாரு முல்லா

Exit mobile version