Husbands Love For Wife Story in Tamil -அன்பான கணவர் தமிழ் சிறுகதை:- ஒரு ஊருல கணவன் மனைவி இருந்தாங்க, அவுங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருந்ததால ஊர்ல இருந்த எல்லாரும் அவுங்கள பொருத்தமான ஜோடின்னு சொல்லிகிட்டே இருப்பாங்க
ஒருநாள் அந்த மனைவிக்கு முகத்துல குணப்படுத்த முடியாத தோல்நோய் வந்துச்சு
அதனால அவளோட அழகு கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சுது
தன்னோட இந்த நிலைல தன்னோட கணவனுக்கு முன்னாடியே வர தயங்குனாங்க,அவுங்களோட கணவன் எப்படி சமாதானம் சொல்லி அவுங்கள தேத்துநாலும் அவுங்க கேக்கவே இல்ல
ஒருநாள் அந்த கணவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டு அவருக்கு கண்பார்வை போய்டுச்சு
அந்த நாள் முதல் அவுங்க மனைவி அவருக்கு கண்ணுக்கு கண்ணா இருந்த சேவ செஞ்சாங்க
தன்னோட அழகு ரொம்ப கொறஞ்சு கண்ணாடிலகூட தன்னை பாத்துக்க முடியாம போன நிலைலயும்
தன்னோட கணவன நல்லபடியா பாத்துக்கிட்டாங்க, ஒரு நாள் அந்த மனைவி காலமானாங்க
தன்னோட மனைவி இழந்த அந்த கணவர் , அந்த வீட்டுல வாழ முடியாம வேற ஊருக்கு கெளம்புனாரு
அப்ப அங்க வந்த பக்கத்துக்கு வீட்டு நண்பர் உங்க மனைவி இல்லாம கண்பார்வை இல்லாம எப்படி வெளியூர் போவிங்கன்னு கேட்டாரு
அதுக்கு அவர் சொன்னாரு எனக்கு கண் நல்லா தெரியும் , இத்தன நாளா என் மனைவிக்காகத்தான் கண் பார்வை இல்லாத மாதிரி நடிச்சேன்னு சொன்னாரு
என் மனைவி தன்னோட முகத்த என்கிட்டே காமிக்க ரொம்ப சங்கட பட்டா , அந்த முகத்த நான் பாத்து நான் அவள வெறுத்துடுவேனோன்னு ரொம்ப பயந்தா அவளோட இந்த பயத்த போக்கவும் அவகூட சந்தோசமா வாழவும்தான் கண்ணு தெரியாத மாதிரி நடிச்சேன் அப்படின்னு சொன்னாரு
அவரோட மனைவிக்கும் அவருக்கும் இருந்த காதல பாத்து வியந்தார் அந்த பக்கத்துக்கு வீட்டுக்காரர்