Site icon தமிழ் குழந்தை கதைகள்

கடவுள் சாப்பிட்ட பழம் – Hungry Servant Story in Tamil

Hungry Servant Story in Tamil

கடவுள் சாப்பிட்ட பழம் – Hungry Servant Story in Tamil:-ஒரு ஊருல ஒரு பண்ணையார் இருந்தாரு ,அவருக்கு ஒரு வாழை தோட்டம் இருந்துச்சு ,ஒருநாள் அறுவடை செஞ்சு முடிச்ச பண்ணையார் ,ஒரு வாழை குலைய எடுத்து வேலைக்காரன் கிட்ட கொடுத்து பக்கத்துல இருக்குற கோயில்ல கொடுத்துட்டு வர சொன்னாரு

Hungry Servant Story in Tamil

அந்த வாழை குலயோட போன வெள்ளைக்காரனுக்கு பசிச்சது ,உடனே ரெண்டு வாழை பழத்த எடுத்து திங்க ஆரம்பிச்சான் ,கோவில் வந்ததும் மிச்ச பழத்த எல்லாம் கோவில் பூசாரிக்கிட்ட கொடுத்துட்டு வந்துட்டான்

அன்னைக்கு ராத்திரி கடவுள் பண்ணையாரோட கனவுல வந்தாரு ,நீ கொடுத்துவிட்ட ரெண்டு வாழைப்பழமும் நல்லா இருந்துச்சுச்சுன்னு சொன்னாரு கடவுள்

Hungry Servant Story in Tamil

தூக்கத்துல இருந்து எழுந்திருச்ச பண்ணையார் ,இது என்ன நாம ஒரு குலை நிறைய பழங்கள கொடுத்துவிட்டா ரெண்டுதான் கடவுளுக்கு போய் சேந்ததா?. அப்படினா வேலைக்காரன் ஏதோ தப்பு செஞ்சுஇருக்கான்னு அவன கூப்பிட்டாரு

உண்மைய சொல்லு எல்லா பழத்தையும் கோவில்ல கொடுத்தியானு கேட்டாரு பண்ணையார்

அப்ப அந்த வேலைக்காரன் சொன்னான் இல்லைங்க பசிக்குதுன்னு ரெண்டே ரெண்டு பழங்கள தான் சாப்பிட்டேன்னு சொன்னான் அந்த வேலைக்காரன் ,

அப்பத்தான் பண்ணையாருக்கு புரிஞ்சது ,ஏழை எளியவருக்கு கொடுத்த பொருள் மட்டும்தான் கடவுளுக்கு போய் சேரும் ,ஏழையான இந்த வேலைக்காரன் சாப்பிட்ட பழம் மட்டுமே கடவுளுக்கு போய் சேந்திருக்கு

அதனால கடவுளுக்கு கொடுக்குறேனு எந்த பொருளையும் வேஸ்ட் பண்ணாம ,தேவைப்படும் ஏழை எளியவருக்கு கொடுக்கணும்னு முடிவு பண்ணாரு அந்த பண்ணையார்

Exit mobile version