Site icon தமிழ் குழந்தை கதைகள்

How Old Is Mulla? – முல்லாவின் சேட்டைகள்

How Old Is Mulla? – முல்லாவின் சேட்டைகள் :- முல்லா எந்த அளவுக்கு தன்னோட அறிவாற்றலால நிறய புகழ் சம்பாதிச்சு வச்சிருந்தாலும் ,அவரோட குட்டி குட்டி சேட்டைகள் தான் உலகம் முழுசும் ரசிக்க பட்டுச்சு

முல்லா ஒருநாள் தன்னோட நண்பனோட பக்கத்து ஊருக்கு பயணம் போனாரு ,அப்ப பயண களைப்பு தெரியாம இருக்க ரெண்டு பேரும் வேடிக்கை கதைகள் பேசிகிட்டு போனாங்க.

அந்த நண்பர் முல்லா கிட்ட கேட்டாரு ஆமாம் முல்லா உங்களுக்கு இப்ப என்ன வயசு ஆகுதுன்னு கேட்டாரு ,அதுக்கு முல்லா சொன்னாரு போன மாசத்தோட சேர்த்து 50 வயசு ஆகுதுன்னு சொன்னாரு ,இத கேட்டுக்கிட்டே நடந்த நண்பருக்கு திடீர்னு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்துச்சு

யோவ் ,முல்லா என்னோட பொண்ணு பொறந்த அன்னைக்கு உன்னோட வயசு 50னு எல்லாருக்கும் சொன்ன ,இப்ப என்னோட பொண்ணுக்கே 5 வயசு ஆகிடுச்சு ,நீ திரும்பவும் 50 வயசுனே சொல்றியேன்னு கேட்டாரு

அதுக்கு முல்லா சொன்னாரு ஓய் நான் இன்னைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு பேசுறவன் கிடையாது ,நான் என்னைக்கு ஒரே பேச்சு பேசுறவனு சொன்னாரு , இத கேட்ட நண்பருக்கு சிரிப்பு வந்துடுச்சு

உன்னோட வயச சொல்லாம இருக்க இப்படி உத்தமன் வேஷம் போடுறியான்னு கேட்டுகிட்டே பக்கத்துல இருந்த மரத்துக்கு அடியில உக்காந்து ஓய்வெடுக்க ஆரம்பிச்சாரு ,இத பார்த்த முல்லாவும் அவருகூட உக்காந்து இளைப்பாறினாரு

அப்பதான் இன்னொரு பயணி அந்த பாதையில நடந்து வந்தாரு ,முல்லாவும் அவரோட நண்பரும் ஓய்வு எடுத்துக்கிட்டு இருந்த இடத்துக்கு வந்த அவரு ஐயா பட்டணத்துக்கு இன்னும் எவ்வளவு நேரம் நடக்கணும்னு கேட்டாரு

அத கேட்ட முல்லா எதுவும் பேசாம அமைதியா இருந்தாரு ,அத பார்த்த அவரோட நண்பர் யோசிக்க ஆரம்பிச்சாரு ,எப்பவும் அடுத்தவங்களுக்கு உதவுற முல்லா இப்ப அதுக்கு அமைதியா இருக்காருன்னு ,முல்லா ஏதோ விஷமம் செய்ய போறாருனு அமைதியா இருந்தாரு அந்த நண்பர்.

ஏற்கனவே சோர்ந்து போயி வந்திருந்த அந்த புது பயணி ஐயா உங்களைத்தான் பட்டணத்துக்கு இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்னு கேட்டாரு ,இப்பவும் முல்லா அமைதியா இருந்தாரு ,இத பார்த்த முல்லாவோட நண்பரும் அமைதியா என்ன நடக்க போகுதுனு ஆவலோடு பார்த்துகிட்டே இருந்தாரு

பொறுமை இழந்த அந்த புது பயணி ,அட போங்கய்யா சோர்ந்து போயி உதவி கேட்ட எனக்கு பதில் சொல்ல கூட மாட்ரீங்கனு சொல்லிட்டு ,அங்க இருந்து கோபத்தோட வேகமா நடக்க ஆரம்பிச்சாரு ,கொஞ்ச தூரம் நடந்ததும் முல்லா சத்தமா கத்தி சொன்னாரு இதே கோவத்தோட நடந்தீங்கன்னா நாலு மணி நேரத்துல பட்டணம் போய்டலாம்னு சொன்னாரு

இத கேட்ட அந்த புது பயணி நான் எத்தனை தடவ கேட்டேன் அப்ப எல்லாம் பதில் சொல்லாம இருந்துட்டு நான் நடந்து போனதுக்கு அப்புறமா பதில் சொல்லறீங்களே நீங்க என்ன லூசானு கேட்டாரு ,அப்பதான் முல்லா பதில் சொன்னாரு நீங்க எவ்வளவு வேகமா நடக்குறீங்கன்னு தெரியாம அவ்வளவு நேரத்துல பட்டணம் போய் சேருவீங்கன்னு எனக்கு எப்படி தெரியும்

முதல்ல நீங்க வந்தப்பவும் உங்க நடையோட வேகத்த நான் பாக்கல ,இப்ப நீங்க கோபமா நடக்கிறத பார்த்த பிறகு நீங்க எவ்வளவு நேரத்துல பட்டணம் போக முடியும்னு கணக்கு போட்டு சொன்னேன்னு சொன்னாரு ,

இதுவரை எல்லாத்தையும் பார்த்துகிட்டு இருந்த முல்லாவோட நண்பர் சிரிக்க ஆரம்பிச்சாரு ,அவ்வளவு நேரம் கோபமா இருந்த அந்த புது பயணியும் தன்னோட கோபத்த மறந்து சிரிக்க ஆரம்பிச்சாரு

Exit mobile version