honest salesman kids story:- ஒரு ஊருல பாவா சிவா னு ரெண்டு வியாபாரிங்க இருந்தாங்க
அவுங்க வெள்ளி நகைகள் விக்கிற தொழில் செஞ்சாங்க,ரெண்டு பெரும் ஒண்ணா வியாபாரத்துக்கு போனாலும் தனி தனியாத்தான் வியபாரம் பண்ணுனாங்க
ஒரு தடவ ஒரு தெருவுல பாவா வியாபாரத்துக்கு போயிருந்தான்
அப்ப ஒரு பழைய வீட்டுல இருந்தது ஒரு சின்ன பொண்ணு வந்து எனக்கு வளையல் வேணும்னு கேட்டா
அதுக்கு அவுங்க பாட்டி நாங்க முன்னாள் பணக்காரர்கள் எங்க கிட்ட இப்ப பழைய மாதிரி பணம் இல்லப்பா அதானால வளையல் வேணாம்னு சொன்னா
அந்த சின்ன பொண்ணு அழுக ஆரம்பிச்சதால மனசு மாறின அந்த பாட்டி ஒரு பழைய விளக்க எடுத்துட்டு வந்து இதுக்கு பதிலா ஒரு வளையல் கொடுன்னு கேட்டாங்க
அந்த விளக்க பாத்த பாவாவுக்கு ஆச்சர்யமா இருந்துச்சு அந்த பழைய விளக்கு தங்கத்துல செஞ்சது இது தெரியாம அந்த பாட்டி வளையளுக்கு மாத்தா கொடுக்குறாங்களேன்னு நினைச்சான்
இருந்தாலும் அவுங்கள ஏமாத்த நினைச்சான் நாம போயிட்டு கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா வந்து இந்த விளக்கையும் இன்னும் ஏதாவது சேர்த்து வாங்கலாம்னு பேராசை பாட்டன்
அவன் போனதுக்கு அப்புறமா அங்க வந்த சிவா கிட்டயும் அந்த விளக்க கொடுத்தாங்க அந்த பாட்டி
அந்த விளக்கோட உண்மையான மதிப்பை தெரிஞ்சுக்கிட்ட சிவா அத அந்த பாட்டிகிட்ட சொன்னான்
தன்னோட தவற தெரிஞ்சுக்கிட்ட பாட்டி சிவாவோட நேர்மைய பாராட்டுனாங்க
அப்ப அங்க வந்த பவா தன்னோட திருட்டுத்தனம் வெளி வந்தத நினச்சு வறுத்த பட்டன்
அடுத்தவங்கள ஏமாத்தணும்னு நினச்சா நாமதான் ஏமாந்து போவோம்