HENNY PENNY KIDS STORY – Thirukkural Story – கோழி குஞ்சு திருக்குறள் கதை :- ஒரு பண்ணைல ஒரு கோழி குஞ்சு இருந்துச்சு ,அந்த கோழி குஞ்சு ஒருநாள் உணவு தேட கிளம்புச்சு
அப்ப அதுமேல சில கற்கள் வந்து விழுஞ்சுது ,அத பாத்த அந்த கோழி குஞ்சு அடடா வானம் இடிஞ்சி விழுது,
இத உடனே சிங்க ராஜா கிட்ட போயி சொல்லணும்னு கிளம்புச்சு
வேகமா நடந்து போன அந்த கோழி குஞ்சு போற வழியில ஒரு அன்னத்த பாத்துச்சு ,அந்த அன்னம் ஏன் இப்படி ஓடிவர்றனு கேட்டுச்சு
அதுக்கு வானம் இடிஞ்சி விழுது , என்மேல கூட சில பாறை விழுந்துச்சு ,நான் போயி சிங்க ராஜா கிட்ட இத பத்தி சொல்ல போறேன் அவருதான் நம்மள காப்பாத்துவாருன்னு சொல்லுச்சு
இத முழுசா நம்புனா அன்னமும் அதுகூட சேந்து சிங்க ராஜாவ பாக்க ஓடுச்சு , அப்ப அங்க ஒரு வாத்து நின்னுகிட்டு இருந்துச்சு
ஏன் இப்படி தலை தெறிக்க ஓடுறீங்கன்னு கேட்டுச்சு அந்த வாத்து அதுக்கு இந்த ரெண்டு பறவைகளும் சொல்லுச்சு வானம் இடியிற விஷயம் உனக்கு தெரியாதா
நாங்க சிங்க ராஜாகிட்ட அடைக்கலம் கேட்டு போறோம்னு சொல்லுச்சு அந்த பறவைகள் ,உடனே தானும் அதுங்க கூட சேந்து ஓடி ஆரம்பிச்சது வாத்து
அப்ப அங்க ஒரு வான்கோழிய பாத்துச்சுங்க அதுகிட்டயும் வானம் இடியிற விசயத்த சொல்லி அதையும் கூட்டிகிட்டு ஓடுச்சுங்க
நடு காட்டுக்கு போனதும் ஒரு நரி அந்த ஓட்டத்த நிறுத்துச்சு,என்ன பறவைகலா என்ன அவசரம்னு இப்படி ஓடுறீங்கன்னு கேட்டுச்சு
நடந்தத சொல்லுச்சுங்க அந்த பறவைகள் உடனே அந்த நரி இப்படி மெதுவா போனீங்கன்னா வானம் உங்க தல மேல விழுந்துடும் ,எனக்கு ஒரு குறுக்கு பாதை தெரியும் அது வழியா வேகமா போயி சிங்கராஜா கிட்ட சொல்லி தப்பிச்சிக்கிடுங்கன்னு சொல்லுச்சு
எல்லா பறவைகளும் நரிக்கு பின்னாடியே ஓட ஆரம்பித்ததுங்க ,அப்பதான் அங்க ஒரு குகை இருந்துச்சு ,இதுக்குள்ளதான் சிங்கம் வாசிக்கிது உள்ள போங்கன்னு சொல்லுச்சு நரி உடனே எல்லா பறவைகளும் உள்ள போக ஆரம்பிச்சதுங்க
ஆனா உண்மையிலயே அந்த குகை சிங்கம் வசிக்கிற குகை இல்ல அது அந்த நரி குடும்பம் வசிக்கிற இடம் ,எல்லா பறவைகளையும் பிடிச்சி திங்க அங்க இருந்த நரிங்க தொரத்த ஆரம்பிச்சதுங்க
அப்ப அந்த சின்ன கோழி குஞ்சு மட்டும் தப்பிச்சு தன்னோட பண்ணைக்கு ஓடி வந்துடுச்சு
குழந்தைகளா உங்களுக்கு திருக்குறள்ல வர்ற
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
குறளுக்கு அர்த்தம் இந்த கதை வழியா தெரிச்சிருக்கும்னு நினைக்குறேன் ,எந்த ஒரு விஷயத்தையும் எத்தன பேர் சொன்னாலும் அதுல இருக்குற உண்மைய கண்டுபிடிக்குறதே அறிவாகும்
இல்லைனா முட்டாள் கோழி குஞ்சோட முட்டாள்தனமான பேச்ச கேட்டு நரிக்கு உணவான பறவைகள் மாதிரி ஆபத்துதான் வரும்