Heart Touching Father Son Story – கால்பந்து வீரன் சிறுவர் கதை :- விஜய் ஒரு கால்பந்து விளையாட்டு வீரன்
அவன் எவ்வளவு நல்லா விளையான்டாலும் அவனுக்கு போட்டிகள்ல விளையாட வாய்ப்பே கிடைக்காது
அவன் சும்மா வெறுமனே பென்ச்ல உதவி ஆளா உக்கார வச்சிருப்பாங்க
என்னதான் தன்னோட மகன் பெஞ்சுல இருந்தாலும் அவனோட அப்பா அவன் பங்கெடுத்துக்கிற எல்லா போட்டிக்கும் வந்துடுவார்
விஜய் தன்னோட பள்ளி படிப்ப முடிச்சு காலேஜ் போனான்
அங்கேயும் கால்பந்து விளையாட்டுல ஈடுபட்டான் விஜய்
அந்த விளையாட்டுகளையும் ஒன்னு விடாம பாக்க வந்துடுவாரு அவுங்க அப்பா
சில காலங்களுக்கு அப்புறமா விஜயோட அப்பா மரணமானாரு
இந்த செய்தி கேட்ட விஜய் கால்பந்தாட்ட கொச் கிட்ட போயி விசயத்த சொன்னான்
நீ போயிட்டு வா விஜய் நீ இன்னைக்கு போட்டியிலயும் விளையாடல அதனால எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லைனு சொன்னாரு
ஊருக்கு போன விஜய் எல்லா சடங்குகளையும் முடிச்சுட்டு திரும்பவும் காலேஜ்க்கு வந்தான்
அன்னைக்கு ஒரு போட்டி இருந்துச்சு அங்க போயி கொச் கிட்ட சார் நான் ரொம்ப ஆர்வமா இருக்கேன் இன்னைக்கு என்ன விளையாட வைங்கன்னு சொன்னான்
சுமாரா விளையாடுற விஜய போட்டியில விளையாட வைக்க அவருக்கு விருப்பம் இல்ல அதனால் கொஞ்சம் யோசிச்சாறு
திரும்ப திரும்ப விஜய் வேண்டி கேட்டுக்கிட்டதால அவரும் சம்மதிச்சாரு
போட்டி ஆரம்பமாச்சு , எப்பவும் இல்லாம அன்னைக்கு விஜய் ரொம்ப ஆக்ரோஷமா விளையாண்டான்
அவனால முடியாதுன்னு சொன்ன எல்லா திறமைகளையும் அந்த போட்டியில அவன் செஞ்சு கட்டினான்
இவ்வளவு நாள் தன்னோட நண்பன் இப்படி விளையாடுவான்னு கூட தெரியாத மத்த விளையாட்டு வீரர்களும் ரொம்ப நல்லா விளையாண்டாங்க
விஜயோட திறமையான விளையாட்டாள அன்னைக்கு போட்டியா அவுங்க ஜெயிச்சாங்க
விஜய் கிட்ட வந்த எல்லாரும் அது எப்படிடா இன்னைக்கு மட்டும் இவ்வளவு நல்லா விளையான்டான்னு கேட்டாங்க
அப்பத்தான் விஜய் சொன்னான் நாம விளையாடுற எல்லா விளையாட்டையும் பாக்க எங்க அப்பா வருவாருன்னு உங்க எல்லாருக்கும் தெரியும்
ஆனா அவர் ஒரு பார்வையற்றவருன்னு உங்க எல்லாருக்கும் தெரியுமா, என்னதான் அவர் நேர்ல போட்டிய பாக்க வந்தாலும் அவரால போட்டிய பாக்க முடியாதுன்னு எனக்கு தெரியும்
அதனாலதான் என்னோட விளையாட்டு கொஞ்சம் சுமாரா இருந்துச்சு
இன்னைக்கு எங்க அப்பா இறந்துட்டாரு அவரோட ஆத்மா இன்னைக்கு விளையாட்ட பாக்கனும்னு நம்புனேன்
அதனால தான் எங்க அப்பாவ திருப்தி படுத்த இன்னைக்கு நல்லா விளையாண்டேன் அப்படின்னு சொன்னான்