Good Goose, Bad Goose – நல்ல வாத்து முல்லா கதைகள் :- முல்லா வாழ்ந்துகிட்டு வந்த வீட்டுக்கு பக்கத்துலயே ஒரு குட்டி தோட்டம் வச்சிருந்தாரு
ஒருநாள் ஒரு வாத்து அங்க வந்துச்சு ,அத பார்க்க எங்க இருந்தோ ஓடி வந்துடாது மாதிரி இருந்துச்சு ,அதுக்கு கொஞ்சமா சோறு போட்டாரு முல்லா ,அத ஆசையா திண்ணுச்சு அந்த வாத்து ,அத பார்த்து சந்தோசப்பட்ட முல்லா அத மெதுவா தடவி கொடுக்க ஆரம்பிச்சாரு ,ஆனா அந்த வாத்து அவரோட கைய கொத்திட்டு ஓடி போய்டுச்சு,
மறுநாள் சந்தைக்கு போக தன்னோட கழுதைய பிடிச்சி குளிப்பாட்டிக்கிட்டு இருந்தாரு அப்ப அங்க வந்த வாத்து ,அவரோட காலுக்கு அடியில ஓடி அவர வேலை செய்ய விடாம தொந்தரவு செஞ்சுக்கிட்டே இருந்துச்சு
அடுத்தநாள் சந்தையில இருந்து வந்த முல்லா தோட்டத்துல இருந்த மரத்தடியில படுத்து ஓய்வெடுத்துகிட்டு இருந்தாரு ,திடீர்னு அவருமேல விழுந்த வாத்து அவரோட தூக்கத்த கெடுத்துடுச்சு ,கோபப்பட்ட முல்லா ஒரு பெரிய சாக்க எடுத்து அதுமேல போட்டு பிடிச்சிட்டாரு
நேரா சந்தைக்கு போன முல்லா அங்க இருந்த வாத்து விக்கிறவரு கிட்ட போயி அந்த வாத்தை கொடுத்து இத வச்சிக்கிட்டு எனக்கு காசு கொடுன்னு கேட்டாரு ,உடனே அந்த வியாபாரியும் முல்லாவுக்கு ஒரு பத்துரூபா கொடுத்தாரு ,அத வாங்குன முல்லா சொன்னாரு இத ரொம்ப சேட்டை புடிச்ச வாத்துனு அது செஞ்ச சேட்டை எல்லாம் சொன்னாரு
அத கேட்ட வாத்து வியாபாரி சிரிச்சிகிட்டே அந்த வாத்த கையில தூக்கி ,எல்லாரும் கேக்குற மாதிரி கத்த ஆரம்பிச்சாரு ,இங்க பாருங்க ,இங்க பாருங்க நல்லா ஓடுற வாத்து ,சுறுசுறுப்பான வாத்து ,நம்பிக்கையான வாத்துனு அந்த வாத்தோட நல்ல விஷயங்கள மட்டும் கூவி விக்க ஆரம்பிச்சாரு
இத கேட்ட முல்லா அந்த பத்து ரூபாய அந்த வியாபாரி கிட்ட திருப்பி கொடுத்துட்டு தன்னோட வாத்தை திரும்ப வாங்கிகிட்டு வந்துட்டாரு
எல்லாருக்கும் குறைகள் இருக்கும் அதுலயும் சில நல்ல விஷயங்கள் இருக்கும் அதுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கணும்னு அந்த வாத்து வியாபாரி தனக்கு புரிய வச்சுட்டாருனு நினைச்சுகிட்டே தோட்டத்துக்கு வந்தாரு
அப்பதான் அவரோட சட்டைய பார்த்தாரு அது முழுசும் வாத்து தன்னோட கால்ல இருந்த சகதிய இழுவி வச்சிருந்துச்சு ,இத பார்த்த முல்லா அத கீழ விட்டு ஒரு எத்து எத்த பார்த்தாரு ,ஆனா அது ஓடிருச்சு ,ஆனா இந்த தடவ ஒரு குழந்தைகிட்ட விளையாடுறமாதிரி ஓடி போயி அத பிடிக்க பார்த்தாரு முல்லா
