Site icon தமிழ் குழந்தை கதைகள்

Gold Coins and Selfish Man – கஞ்சனும் தங்க நாணயங்களும் Tamil moral stories

Gold Coins and Selfish Man – கஞ்சனும் தங்க நாணயங்களும் tamil moral stories :- ஒரு ஊருல ஒரு கஞ்சன் இருந்தான்

அவனுக்கு எப்பவுமே பணத்தாசை அதிகமா இருந்துச்சு, பணம் சம்பாதிக்க யாரை வேணும்னாலும் ஏமாத்துறதுக்கு அவன் தயாரா இருந்தான்

ஒரு நாள் சந்தைக்கு போறதுக்காக 50 தங்கக் காசுகளை எடுத்து ஒரு தோல் பையில் வச்சுக்கிட்டு கிளம்புவதற்கு தயாரானான், கொஞ்ச நேரம் கழிச்சு பார்க்கிறப்ப அந்த அம்பது தங்க காசுகள் இருந்த பை காணாம போயிருச்சு

அந்த கஞ்சனும் அவனோட மகன்கள் எல்லாரும் சேர்ந்து அந்தத் தோல் பைய தேட ஆரம்பிச்சாங்க எவ்வளவு தேடியும் கிடைக்கல

ரெண்டு நாளைக்கு அப்புறம் தோட்டத்து பக்கத்துல தோட்டத்து வேலை செய்கிற தொழிலாளியோட மகள் ஒரு பைய கண்டுபிடிச்சா அந்த பைய திறந்து பார்க்கிறப்ப அதுக்குள்ள 50 தங்க காசுகள் இருந்துச்சு

அதை எடுத்துக் கொண்டு போயி அவங்க அப்பாகிட்ட குடுத்தா, அவங்க அப்பாவும் அடடா இது நம்ம முதலாளி தேடிட்டு இருந்த தங்க காசுகள் கொண்ட பையாச்சேன்னு சொல்லி

தன்னோட முதலாளிகிட்ட கொண்டு போயி கொடுத்தான் அந்த தோட்டக்காரன்

அதை பிரிச்சி பார்த்த அந்த கஞ்சனுக்கு திடீர்னு ஒரு யோசனை வந்துடுச்சு ,நான் 75 தங்க காசு வச்சு இருந்தேன் இதில அம்பது தான் இருக்கு என்னை ஏமாற்றப் பார்க்கிரியா அப்படினு கேட்டாரு

நேர்மையாக நடந்துகிட்ட நம்மகிட்ட இப்படி பலி வந்துருச்சி அப்படின்னு ரொம்ப வருத்தப்பட்டார் அந்த தோட்ட தொழிலாளி

மறுநாள் இந்த வழக்கு அரசர் கிட்ட போச்சு இரண்டு பக்கத்தையும் நியாயங்களையும் விசாரிச்சு பார்த்த அந்த அரசர் ஒரு முடிவுக்கு வர முடியல

முதன்முதல் அந்த பைய கண்டெடுத்த அந்த குழந்தை கிட்ட

நீ எத்தனை தங்க காசு இருந்ததுன்னு எண்ணி பாத்தியானு கேட்டாரு அரசர் அதுக்கு அந்த சின்ன பொண்ணு நான் நல்லா எண்ணி பார்த்தேன் அதுல 50 தங்க காசுதான் தான் இருந்துச்சு அப்படின்னு சொன்னா அந்த குழந்தை

அந்த கஞ்சன பத்தி ஊருல நல்லா விசாரிச்ச ராஜா தன்னோட தீர்ப்ப சொன்னாரு

இந்த பை 50 தங்க நாணயம் கொண்ட பை,ஆனா உன்னோட பைல 75 தங்க நாணயம் இருந்துச்சுன்னு நீ சொல்லுற அப்ப இந்த பை உன்னோடது கிடையாது.நீ கிளம்பலாம்னு சொன்னாரு

நேர்மையா நடந்துகிட்ட அந்த குழந்தைக்கு இந்த 50 தங்க காசு பைய பரிசா கொடுக்குறேன்னு தீர்ப்பு சொன்னாரு

Exit mobile version