Site icon தமிழ் குழந்தை கதைகள்

மிக உயரமான நீர்வீழ்ச்சி – Gandhi story in Tamil

மிக உயரமான நீர்வீழ்ச்சி – gandhi story in tamil :- ஒரு சமயம் காந்திஜியும் காகா கலேல்கரும் கர்நாடக மாநிலத்தில் உள்ள ‘ஷிமோகா என்ற இடத்திற்குச் சென்றிருந்தனர்

ஓர் ஓய்வு நேரத்தில் கலேல்கர் காந்திஜியிடம், இங்குள்ள ஜெர்சப்பா நீர்வீழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. நாம் அவசியம் அதைப் பார்க்க வேண்டும் என்றார்

நீர்வீழ்ச்சியில் என்ன இருக்கிறது பார்க்க ” என்று கேட்டார் காந்திஜி.

இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி அது!” என்றார்.

கலேல்கர்

“இருக்கட்டுமே! அதனாலென்ன என்று மிகச் சாதாரணமாகச் சொன்னார் காந்திஜி.

இல்லை – அதைப் பார்க்க வேண்டும் போலுள்ளது!’ என்று குழைந்தார் கலேல்கர்

அங்கு இங்கு சுற்றி நேரத்தை வீணாக்குவது எனக்குப் பிடிக்காது என்பது உங்களுக்குத் தெரியும் எனக்கு வேலை இருக்கிறது. என்னால் வரமுடியாது என்று தீர்மானமாகச் சொன்னார் காந்திஜி.

கலேல்கரோ அவரை விடுவதாக இல்லை

மன்னிக்க வேண்டும். உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சியான வெனிசுலா நாட்டிலிருக்கும் ஏஞ்சல் நீர்வீழ்ச்சியைப் போல் உள்ளதாம் இந்த நீர்வீழ்ச்சி போனவுடன் பார்த்துவிட்டு உடனே திரும்பி விடலாம் என்றார் கலேல்கர்

காந்திஜி அவரை தீர்க்கமான கண்களால் பார்த்தார்.

சரி! இப்போது நான் ஒன்று சொல்லுகிறேன். நீங்கள் சொல்லுவதைவிட உயரமான நீர்வீழ்ச்சி ஒன்றை நான் பாத்திருக்கிறேன். ஏஞ்சல் நீர்வீழ்ச்சியைவிட பல மடங்கு உயரத்தில் இருந்து அது விழுகிறது. மகா அற்புதம் போங்கள் ” என்றார் காந்திஜி

கலேல்கருக்கு ஒரே ஆச்சரியம்

அப்படியா நீங்கள் சொல்லும் அந்த நீர்வீழ்ச்சி எங்கே இருக்கிறது?” என்று கேட்டார் கலேல்கர்

எங்கும் பார்க்கலாம்! மழைதான் அந்த நீர்வீழ்ச்சி அதைவிடவா நீங்கள் சொல்லும் ஜெர்சப்பா நீர்வீழ்ச்சி உயரத்திலிருந்து விழுகிறது?” என்றார் காந்திஜி.

கலேல்கர் வாயடைத்துப் போனார். அதோடு ஜெர்சப்பா நீர்வீழ்ச்சியைப் பார்க்கும் எண்ணத்தையே விட்டு விட்டார்

Exit mobile version