இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலம்
அப்போது தமிழகத்திற்கு வந்திருந்த காந்திஜி ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்
அப்போது பிரபல திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியுமான கே.பி.சுந்தராம்பாளின்
வீட்டிற்கு காந்திஜி வர நேர்ந்தது. அவரது வீடு கொடுமுடி
என்ற ஊரில் இருந்தது காந்திஜிக்கு மதிய உணவை அங்கே ஏற்பாடு செய்திருந்தார், மாகாண போராட்டக் குழுவின் தலைவராக இருந்த தீரர் சத்தியமூர்த்தி
காந்திஜியை வரவேற்று மகிழ்ந்த கே.பி. சுந்தராம் பாள், அவருக்கு ஒரு வெள்ளித் தட்டில் மதிய உணவு பரிமாறினார்
உணவை உண்டு முடித்த காந்திஜி. கே.பி. சுந்தராம்பாள் பார்த்து, எனக்கு சாப்பாடு
மட்டும்தானா? தட்டு இல்லையா என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.
அதைக் கேட்டு முறுவலித்த கே.பி. சுந்தராம்பாள், அந்தத் வெள்ளித் தட்டைக் கழுவி சுத்தம் செய்து காந்திஜியிடம் கொடுத்தார்
அதைப் பெற்றுக் கொண்ட காந்திஜி அதை அந்த இடத்தில் கூடியிருந்தவர்களிடம் ஏலம் விட்டார். அதன் மூலம் கிடைத்த பணத்தை சுதந்திரப் போராட்ட நிதிக்கு அளித்துவிட்டார்