முயற்சி திருவினையாக்கும் கட்டுரை-Essay On Efforts :- முயற்சி என்பது நாம் செய்ய நினைக்கும் செயலை முறையாகவும் திறம்படவும் செய்து முடிக்க நம்முள் ஏற்படும் உத்வேகம் ஆகும்.நாம் செய்ய நினைக்கும் செயல் முயற்சி இல்லை எனில் அது எப்போதும் ஒரு வேண்டுதலாகவே இருக்கும் அதே நேரத்தில் நமது சிறு முயற்சி அந்த செயல் முடிவடையாத போதும் இலக்கை நோக்கி ஒரு படி முன்னேற வழிவகை செய்கிறது.
சிறுதுளி பெருவெள்ளம் என்றொரு வாக்கியம் உண்டு அதுபோல நம் வாழ்வை மேம்படுத்த நாமெடுக்கும் சிறு முயற்சியானது கட்டற்ற காட்டு வெள்ளம் போன்ற இறுதி நிலையை அடையும் என்பதில் ஐயம் இல்லை.
தோல்வியும் முயற்சியும்
தொடர் தோல்விகளை ஏற்படுத்தும் ஒரு வேலையானது தொடர் முயற்சியினால் மட்டுமே சாத்திய மாகிறது.வெற்றிக்கான பாதையில் தோல்விகளை சந்திக்கும் ஒருவர் தொடர்ந்து முயற்சி செய்வாரேயானால் அவரால் வெற்றியை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து இறுதியில் அவரது இலக்கை அடைய முடிகிறது.பல அறிவியல் ஆய்வாளர்கள் ,இலக்கியவாதிகள் செய்த சிறு முயற்சியானது பின்னாளில் அவர்களுக்கு மட்டுமல்லாது மனித இனத்துக்கே வெற்றியை தேடித்தந்த நிகழ்வுகளை வரலாறு எங்கும் நாம் காணலாம்
1000 முறைக்கு மேல் தனது மின்சார விளக்கை தொடர்ந்து எரிய செய்ய புதிய பொருளை தேடிய எடிசன் தனது முயற்சியை தொடங்கியவுடன் நிறுத்தி இருந்தாலும் , கடைசி நேரத்தில் நிறுத்தி இருந்தாலும் அவர் வெற்றி பெற்றிருக்க மாட்டார் ,ஆனால் ஒவ்வொரு முறை அந்த ஆய்வில் தோல்வியடையும் போதும் அவரெடுத்த அடுத்த முயற்சி அவரை முறையான மின்சார விளக்கை தயாரித்து வெற்றி பெற செய்தது.
பொது வாழ்வில் முயற்சி
சாலச்சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் , இலக்கியங்கள் ,மாபெரும் விளையாட்டு வெற்றி மட்டுமல்லாது அடுத்த வேலை உணவு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு தேவையானது முயற்சி மட்டுமே,அவர் செய்யும் சிறு முயற்சி நாளடைவில் அவரை உலகத்தில் பெரும் பணக்காரர் ஆக்கலாம் ,அல்லது அவரது நாட்டில் ஒரு செல்வா செல்வந்தர் ஆக்கலாம் ஆனால் அவர் செய்யும் முயற்சி ஒரு போதும் அவர் இன்று இருக்கும் நிலையிலேயே வைத்திருக்காது
முயற்சியை போற்றுவோம்
ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெரும் நபர் பெரும் அதே அளவு புகழ் அந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறுபவருக்கு பெறுகிறார் ,ஒலிம்பிக் போட்டியின் சாராம்சமாக வெற்றி பெறுதலை விட போட்டியில் பங்கெடுத்து கொள்வதே பெரிய பாக்கியம் என்பதே உள்ளது ,எதற்கு கரணம் முயற்சி உடைய ஒருவரே வெற்றி பெற இயலும் ஆகவே முயற்சி செய்த ஒவ்வொருவரும் வெற்றி பெற்ற ஒருவருடன் ஒப்பிட தகுதியானவர் என இந்த வரலாறு கூறுகிறது