Site icon தமிழ் குழந்தை கதைகள்

Dove Story For Kids – புறாவும் எறும்பும் கதை

dove story in tamil

ஒரு காட்டு பகுதியில் ஒரு புறா கூட்டம் வாழ்ந்துட்டு வந்துச்சாம்


அந்த புறா கூட்டம் ஒரு வயசான புறாவோட தலைமைல வாழ்ந்துட்டு வந்துச்சாம்


அந்த புறாக்கள் எப்போதும் அந்த வயசான புறாவோட பேச்சக்கேட்டு நல்ல புள்ளைங்களா இருந்ததால அந்த புறாக்கள் எப்போதும் சந்தோசமா இருந்தன

அந்த வயசான புறாக்கு ரொம்ப அனபவம் இருந்ததால் அந்த புறா கூட்டத்தை எப்பவும் கண்க ராணிச்சுகிட்டே இருக்கும்


அந்த புறாக்கள் தினமும் காலையில் எந்திரிச்சதும் உணவு தேடி பறக்க ஆரம்பிச்சுடும்


காட்டுப்பகுதியில் உணவு தேடும்போது அந்த வயசான புறா சொல்ற இடத்துல இருக்குற தானியங்களதான் அந்த புறாக்கள் சாப்பிடும்


இப்படி இருந்த அந்த புறாக்கூட்டம் ஒரு நாள் உணவு தேடி ஒரு புதிய காட்டுப்பகுதியில் பறந்து போச்சு


அது புதுக்காடுங்கிறதுனால எங்க தானியம் கிடைக்கும்னு சரியா தெரியல


ரொம்ப தூரம் பறந்த அந்த புறாக் கூட்டத்துல இருந்த இளவயது புறாக்கள் ரொம்ப சோர்வடைஞ்சு போச்சு


அந்த நேரத்துல ஒரு பாறைப்பகுதியில தானியங்கள் நிரைய கொட்டி கிடக்குரத பாத்துச்சுங்க அந்த
இளைய புறாக்கள்


உடனே அந்த தானியங்கள் எடுத்து சாப்பிட அவசரமா கீழ இறங்க பாத்துச்சுங்க

அத பாத்த அந்த வயசான புறா நில்லுங்க ஒரு நிமிசம்னு அந்த இளை புறாக்கள் தடுத்துச்சு


பாறை பகுதியில் தானியங்கள் செயற்கையா விழுந்து கிடக்கு,

அக்கம் பக்கத்துல செடியோ கெ
டியோ மரமே எதுவுமே இல்லாம இந்த தானியங்கள் பாற மேல கிடக்குரது எனக்கு சந்தேகமா
இருக்குனு சொல்லுச்சு

நீண்ட நேரம் பறந்து வந்ததால கலப்பா இருந்த இளைய புறாக்கள் அதோட பேச்சக் கேக்காம அந்த தானியங்கள் எடுக்க ஆரம்பிச்சது


திடீர்னு அந்த தானியங்களுக்கு அடியில் இருந்த வலையில் அந்த புறாக்களோட கால் மாட்டிக்கிடுச்சு

உடனே பயந்து போன அந்த இளைய புறாக்கள் அடடா ஒங்க பேச்ச கேக்காம இப்படி மாட்டிகிட்டேமெனு ரொம்ப வருத்தப்பட்டுச்சு


இதப்பாத்த அந்த வயதான புறா கவலப்படாதீங்க நீங்க எல்லாரும் ஓங்க பலத்த உபயோகிச்சிங்கன்னா இந்த வலைய சுலபமா தூக்கிட முடியும்


எல்லாரும் ஒரேநேரத்துல சிரகடிச்சு பறங்கனு சொல்லுச்சு

அதக்கேட்ட அந்த புறாக்கள் உடன மொத்தமா அந்த வலையத் தூக்கிகிட்டு பறந்து போச்சுங்க


அந்த இளைய புறாக்கள் அந்த இடத்த விட்டு வந்தாச்சு ஆனா வலை இன்னும் கால்ல பின்னிகிட்டே கிடக்கே அத என்ன பன்றதுனு அந்த வயதான புறாகிட்ட கேட்டுச்சு


நம்ம வாழர இந்த காட்டுல தான் எனக்கு தெரிஞ்ச ஒரு பலம் வாய்ந்த எலி வாழ்ந்துகிட்டு இருக்கு
அது கிட்ட நாம உதவி கேப்போம்னு சொல்லுச்சு

உடனே அந்த புறாக்கள் அந்த எலி கிட்ட போய் தங்கள விடுதலை செய்யனும்னு கேட்டுச்சு

இதப்பாந்த அந்த எலி தன்னோட கூர்மையான பல்லால அந்த வலைய கடிச்சு அந்த இளைய
புறாக்களை விடுவிச்சுச்சு


குழந்தைகளா நாம எப்போது அனுபவம் வாய்ந்த பெரியவங்க சொல் படி வாழ்ந்தம்னா பாது காப்பா வாழலாம்

அதே நேரத்துல ஒற்றுமையா பறந்து உயிர் தப்பிச்ச இந்த புறாக்கள் மாதிரி நீங்களும் ஒற்றுமையா இருந்தீங்கன்னா நீங்களும் பெரிய சாதனைகள் செய்யலாம்

Exit mobile version