தீபாவளி கட்டுரை – Diwali Essay for Kids – Deepavali Essay for Children :- எனக்கு மிக பிடித்த பண்டிகை தீபாவளி பண்டிகையாகும்.தீபாவளி விளக்குகளின் திருவிழா என அழைக்கப்படுகிறது.பொதுவாக அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் ஒவ்வொரு வருடமும் கொண்டாட படுகிறது.இந்திய திருநாட்டில் தொன்று தொட்டு கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது ஆகும்.
ராமர் 14 வருட வன வாசத்திற்கு பிறகு நாடுதிரும்பிய தினத்தை விளக்கு வைத்து பொது மக்கள் கொண்டாடிய தினம் இது எனவே இதை ஆண்டுதோறும் கொண்டாடுகின்றன என அறியப்பட்டாலும் ,பொதுவாக கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடுவதே இந்த திருநாள் என உலகம் முழுவதும் அறியப்படுகிறது .
விளக்குகளுடன் பட்டாசுகளை வெடித்து இந்த திருநாள் கொண்டாட படுவதால்,குழந்தைகள் மிக குதூகலத்துடன் கொண்டாடுகின்றன
தீபாவளி திருநாள் அன்று அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்தல்.பிறகு புத்தாடை உடுத்தி கோவிலுக்கு செல்லுதல் அல்லது பூஜை அறையில் தெய்வங்களை வணங்குதல் போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.அதனை தொடர்ந்து புத்துடை உடுத்திய குழந்தைகள் அண்டை அருகாமையில் இருக்கும் அனைத்து குழந்தைகளுடன் இணைந்து பட்டாசு வெடித்து கொண்டாடு கின்றனர்.
மத வேறுபாடுகள் இல்லாமல் அனைவருடனும் தங்கள் வீட்டு பண்டங்களையும் பலகாரங்களையும் பகிர்ந்து , இளவயது முதலே குழந்தைகளுக்கு நட்பு பாராட்டும் பழக்கங்களை வளர்க்க இந்த பண்டிகை உதவுகிறது.