Site icon தமிழ் குழந்தை கதைகள்

வைர திருடன் – மரியாதை ராமன் கதை – DIAMOND Thief- Mriyadhai Raman Story

வைர திருடன் – மரியாதை ராமன் கதை – DIAMOND Thief- Mriyadhai Raman Story:- மரியாதை ராமன் ஒருநாள் பக்கத்து ஊருக்கு பயணம் போனாரு

ரொம்ப தூரம் நடந்ததுனால வழியில எங்கயாவது தங்கி ஓய்வெடுக்க நினைச்சாரு

அப்பத்தான் ஒரு பயணிகள் தங்கி ஓய்வெடுக்குற சத்திரம் அவர் கண்ணுல பட்டுச்சு

உடனே அங்க போயி சத்திர காவல்காரன் கிட்ட அனுமதி வாங்கிட்டு அங்க படுத்து தூங்க ஆரம்பிச்சாரு

கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா தூக்கிகிட்டு இருந்த மரியாதையை ராமன அந்த காவல் அதிகாரி எழுப்புனாரு

ஐயா இந்த சாத்திரத்துல ஒரு திருட்டு நடந்திடுச்சு அந்த திருடன நீதான் கண்டுபிக்கணும்னு சொன்னாரு

உடனே முழிச்சிகிட்ட மரியாதை ராமன் சாத்திரத்துக்குள்ள போயி என்ன நடந்ததுன்னு கேட்டாரு

அதுக்கு அந்த காவல் அதிகாரி சொன்னாரு ஐயா இந்த சாத்திரத்துல உங்கள செக்காம 5 பேரு தங்கி இருக்காங்க , என்னோட வைரம் காணாம போய்டுச்சு , சாயந்தரம் அந்த வைரம் என்னோட இடத்துல இருந்தத பார்த்தேன்

அதுக்கு அப்புறமா இந்த 5 பயணிகளும் வெளிய போகல , இப்ப தற்செயலா என்னோட பொருட்கள பார்க்கும்போது வைரம் வச்சிருந்த பெட்டி திறந்து இருக்குறத பார்த்தேன் ,

நான் முழு இரவும் வாசல் பக்கத்துலயே முழிச்சி இருந்தேன் ,நீங்க வாசலுக்கு வெளிய படுத்து இருந்தீங்க அதனால இந்த 5 பேருல ஒருத்தர்தான் அந்த திருட்ட செஞ்சிருக்கணும்னு சொன்னாரு

உடனே மரியாதையை ராமன் எல்லா பயணிகளையும் எழுப்பி திருடுபோன வைரத்த பத்தி விசாரிச்சாரு , அந்த பயணிகள் எல்லாரும் அந்த வைரத்த பார்க்கவே இல்லைனு சொன்னாங்க

உடனே அந்த காவலாளி எல்லாரோட உடமைகளையும் தேடி பார்த்தாங்க அப்படியும் வைரம் கிடைக்கவே இல்ல

அப்பத்தான் மரியாதை ராமன் ஒரு சூப் வைக்கிற பாத்திரத்தை பார்த்தாரு

உடனே அந்த அஞ்சு பயணிகளையும் காவல் அதிகாரிகளையும் வெளிய போக சொன்னாரு ,உடனே எல்லாரும் வெளிய போனாங்க

உடனே சூப் வைக்கிற பாத்திரத்தை எடுத்துட்டு வந்து ஒரு மேஜைல வச்சு ,அதோட அடி பகுதியில தீ பட்டு அப்பி இருந்த கரிய எடுத்து அந்த வைரம் வச்சிருந்த பெட்டிக்கு அடியில தடவுனாரு.

ராமன் என்ன செஞ்சாருன்னு யாருக்கும் புரியல ,அப்பத்தான் மரியாதை ராமன் சொன்னாரு இந்த வைரம் வச்சிருந்த பெட்டி சந்தன மரத்தால செஞ்ச பெட்டி

அதனால திருடனோட உடம்புல கண்டிப்பா சந்தன வாசனை வரணும் ,ஆனா திருடன் வேகமா திருடுனதுனால சந்தன வாசம் கண்டு பிடிக்க முடியல

நீங்க ஒவ்வொருத்தரா போயி அந்த பெட்டியை கையில எடுத்துக்கிட்டு அதோட அடி பகுதியை 5 தடவ தடவனும்

உண்மையான திருடன் ஏற்கனவே அந்த பெட்டிய தொட்டதுனால அவனோட கையில இருக்குற சந்தன வாசம் மீண்டும் பெட்டிய தொடுறதால இன்னும் அதிகமா வாசம் வீசும் ,அதனால சுலபமா திருடன கண்டு பிடிச்சிடலாம்னு சொன்னாரு

இத கேட்ட எல்லா பயணிகளும் அதுக்கு சம்மதிச்சாங்க , அப்ப மரியாதை ராமன் ஒவ்வொருத்தரா சாத்திரதுக்குள்ள போய் அந்த பெட்டிய தடவ சொன்னாரு

எல்லாரும் அந்த பெட்டிய தடவிட்டு வெளிய வந்ததுக்கு அப்புறமா ,எல்லோரோட கையையும் மோந்து பாக்கலாமான்னு கேட்டாரு

எல்லாரும் சரினு சொன்னாங்க ,ஆனா எல்லார் கையையும் மோந்து பாக்காம எல்லார் கையையும் உத்து பார்க்க ஆரம்பிச்சாரு மரியாதை ராமன்

அப்பத்தான் எல்லோரோட கையிலயும் கரி ஒட்டிக்கிட்டு இருக்குறதையும் ஒருத்தரோட கையில மட்டும் கரி இல்லாம சுத்தமா இருக்குறதையும் பார்த்தாரு

அப்பத்தான் மரியாதை ராமன் சொன்னாரு இவன்தான் திருடன்னு , என்ன நடந்தது எப்படி திருடனை கண்டு பிடிசீங்கனு எல்லாரும் கேட்டாங்க

அதுக்கு மரியாதை ராமன் சொன்னாரு ,சந்தன பெட்டிய வச்சும் சந்தன வாசத்த வச்சும் திருடன கண்டு பிடிக்க போறேன்னு நான் சொன்னது பொய்

திருடனை கண்டுபிடிக்க அப்படி பொய் சொன்னேன் , உண்மையான திருடன் தன்னோட கைல சந்தன வாசம் வர கூடாதுனு நினச்சா கண்டிப்பா அதே பெட்டிய திரும்ப தொட மாட்டான் , அந்த திருடன கண்டுபிடிக்க பெட்டிக்கு அடியில கரிய பூசி வச்சிருந்தேன்

என்னோட திட்டத்துப்படி திருடன தவிர எல்லாரும் பெட்டியை தொட்டு தடவுனாங்க அதனால் நான் போட்டு வச்சிருந்த கரி அவுங்க கைல ஒட்டிகிடுச்சு

ஆனா உண்மையான திருடன் தன்னோட திருட்டு தானம் வெளிய தெரியாம இருக்க அந்த பெட்டியை தொட மாட்டான்னு எதிர் பார்த்தேன் ,அதே மாதிரி அந்த திருடன் அந்த பெட்டிய தொடவே இல்ல

அதனால தான் அவனோட கைல கரி ஒட்டலனு தெளிவா சொன்னாரு

மரியாதை ராமனோட துல்லியமான திட்டத்துப்படி திருடன் மாட்டிகிட்டான் ,இத தெரிஞ்சி கிட்ட எல்லாரும் மரியாதை ராமனயும் அவரோட புத்தி கூர்மையையும் பாராட்டுனாங்க

Exit mobile version