Devoted Duck Story in Tamil – தாய் வாத்து :- ஒரு குளத்துக்கு பக்கத்துல ஒரு வாத்து குடும்பம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு
ஒருநாள் அம்மா வாத்து குட்டி வாத்துக்கள கூட்டிகிட்டு குளத்துப்பக்கமா நடந்து போச்சு
அப்ப ஒரு புதர்பகத்துல ஒரு நரி ஒளிச்சுகிட்டு இருக்குறத பாத்துச்சு அந்த அம்மா வாத்து
அடடா இந்த நரி ரொம்ப கிட்டக்க வந்துடுச்சே எப்ப நம்ம குழந்தைகளுக்கு ஆபத்து வந்துடுச்சேன்னு நினைச்சது
உடனே குழந்தைகளா வேகமா குளத்துக்குள்ள இறங்குங்கன்னு சொல்லுச்சு
இத பாத்த நரி வேகமா கிட்ட வந்து அந்த குட்டி வாத்துகளை சாப்பிட பாத்துச்சு
தனக்கு என்ன ஆனாலும் பரவா இல்ல தன்னூட குட்டி வாத்துகளுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாதுன்னு முடிவு பண்ணுன அந்த அம்மா வாத்து
மெதுவா நொண்டி நொண்டி நடக்க ஆரம்பிச்சது ,இத பாத்த நரி அடடா இந்த பெரிய வாத்தாள நடக்க முடியாதா அப்ப இந்த சின்ன வாத்துக்களை பிடிக்கிறத விட்டுட்டு இந்த பெரிய வாத்த பிடிக்கலாம்னு ஓடி வந்துச்சு
இதுக்குள்ள குட்டி வாத்துகள் எல்லாம் குளத்துல இறங்கி நடுவுல போயிடுச்சு
அம்மா வாத்து நரி பக்கத்துல வந்ததுக்கு அப்புறமா வேகமா ஓடிப்போயி அந்த குளத்துலயே இறங்கிடுச்சு
நரி ஏமாந்து போச்சு
தன்னோட குழந்தைகளுக்காக தன்னோட உயிரையே விட துணிஞ்ச வாத்தோட தியாகம் பெரியதுதான குழந்தைகளா